பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... காலையில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்

நமது ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இந்நிலையில், நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான காலை உணவு பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2025, 02:46 PM IST
  • நீரழிவு - இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கிய உணவுகள்.
  • காலையில் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • நரம்புகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... காலையில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்

இன்றைய துரித கதியான வாழ்க்கை முறையில், நீரழிவு ஆகியவை பலருக்கு இருக்கும் பொதுவான உடல்நல பிரச்சனையாக மாறிவிட்டது. முன்னதாக முதியவர்களை தாக்கி வந்த இந்த பிரச்சனை, இப்போது இளம் வயதினரையும் விட்டு வைப்பதில்லை. ஏன் பள்ளி குழந்தைகள் சிலருக்கு கூட சர்க்கரை நோய் இருப்பது சில சமயங்களில் கண்டறியப்படுவது மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் வாழ்க்கை முறை முக்கிய காரணமாக உள்ள நிலையில், சில ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம், சுகர் - பிபி இரண்டையும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.

Add Zee News as a Preferred Source

நீரழிவு - இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான காலை பழக்கங்கள்

நமது ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. அதிலும் காலையில் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கம் இருந்தால், பலவித உடல் நலப் பிரச்சினைகளை (Health Tips) தவிர்க்கலாம்.

இஞ்சி எலுமிச்சை நீர்

காலை எழுந்தவுடன் முதன் முதலில், இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, செரிமானம் சிறப்பாக இருக்கும். இதில் சிறிதளவு இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து அருந்தினால், இது நீரழிவு உயர் ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்தும் சிறந்த ஹெல்த் ட்ரிங்க் ஆக இருக்கும்.

வெந்தய நீர்

இரவில் ஊற வைக்கப்பட்ட ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்ந்து சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் இதில் உள்ள கரையும் நார்ச்சத்து, இன்சுலின் உணர்திடனை தூண்டுகிறது. அதோடு வெந்தயம் உயர் ரத்த அழுத்தத்திற்கான மிகச் சிறந்த மருந்து என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நெல்லிக்காய் ஜூஸ்

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. நூறுக்கும் மேற்பட்ட நோய்களுக்கு நெல்லிக்காய் மருந்தாக அமைகிறது என்கின்றனர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள். எண்ணற்ற ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்கள் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நீரழிவு உயர் ரத்த அழுத்தம் இரண்டையும் சிறப்பாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. காலையில் வெறும் வயிற்றில் 20 முதல் 30 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வந்தாலே போதும். இரண்டையும் சிறப்பாக கட்ட படுத்தலாம். உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

ஊறவைத்த பாதாம்

உலர் பழங்கள் அனைத்துமே ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள். அதிலும் பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலை பல்வேறு வகையில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அதிலும் இவற்றை ஊற வைத்து சாப்பிடுவதால், அதிகபட்ச் அபலனை பெறலாம். தினம் அதிகமல்ல 4-5 பாதாம் சாப்பிட்டால் கூட போதும். இதில் புரதச்சத்து, வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து என அனைத்தும் நிறைந்துள்ளது. இது நீரழிவை கட்டுப்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள மெக்னீசியம், நரம்புகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மாம்பழ பிரியர்கள் கவனத்திற்கு... மாம்பழத்துடன் சாப்பிட கூடாத சில உணவுகள்...

மேலும் படிக்க |இந்தியாவில் ஆண்களுக்கு அதிகம் வரும் டாப் 5 கேன்சர்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News