Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால் அதைக் குறைப்பது மிக கடினமான ஒரு பணியாகும். தொப்பை கொழுப்பு அதிகம் ஆகிவிட்டால் அதை எளிதில் கரைக்க முடிவதில்லை.
உடல் எடையை குறைக்க பலர் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். குறைந்த கலோரி உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சிகளை சேர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது உடல் எடையை குறைக்க உதவும் சில எளிய வழிகள் ஆகும்.
காலை எழுந்தவுடன் சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொண்டால் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவும் 5 காலை பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ginger Juice: இஞ்சி சாறு
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ அதை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக இஞ்சி சாறு அல்லது எலுமிச்சை சாறு குடிக்கலாம். இவை உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
Exercise: உடற்பயிற்சி
காலையில் செய்யப்படும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் வளர்ச்சிகை மாற்றத்தை மேம்படுத்தவும் கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவும்.
Proteins: புரதம் கொண்ட உணவுகள்
காலை உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொண்டால் அது நாள் முழுவதும் பசியை ஏற்படுத்தி அதிக உணவுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். புரதச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கும்.
Sun Light: சூரிய ஒளி
காலை வேளையில் சூரிய ஒளியை பெறுவது நல்லது. இது வைட்டமின் டி அளவை மேம்படுத்துகிறது. காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பதை வழக்கமாகி கொள்ளலாம்.
Meditation: தியானம்
தினமும் காலையில் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். இது தூக்க சுழற்சியையும் உடலின் சர்க்காடியன் இயல்பார்க்கும். மன அழுத்தத்தை குறைப்பது கொழுப்பை விரைவாக குறைக்க உதவும். அந்த வகையில் இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | பேன், ஈறு மற்றும் பொடுகு பிரச்சனைக்குத் தீர்வு –இந்த ஹேர் பேக் உங்கள் உதவிக்கு!
மேலும் படிக்க | சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் சைவ உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









