)
கொலஸ்ட்ரால் பொதுவாக மாரடைப்புக்கான முக்கிய காரணமாகக் காட்டப்படுகிறது. இதய நோய்களைத் தவிர்க்க விரும்பினால், அதிக கொழுப்பைத் தவிர்க்க வேண்டும் மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆனால் சில சமயங்களில், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதை காண்கிறோம். ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தி வந்த போதிலும், மாரடைப்பால் இறக்கும் பலரை காண்கிறோம். கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவுகள் சாதாரணமாக இருந்த போதிலும், வேறு சில காரணங்கள் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
சமீபத்தில் ஐடி நிபுணர் ஒருவருக்கு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தும். அவர், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர், அரிதாகவே மது அருந்துபவர். வருடாந்திர பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தவர். லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனையும் நார்மல் தான். அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இல்லாத நிலையில், அவர் ஆரோக்கியமாக (Health Tips) இருப்பதாகத் தான் எல்லோருமே நினைப்பார்கள். காலை நடை பயிற்சியின் போது அவருக்கு மார்பில் லேசான வலி ஏற்பட்டபோது, அதை அவர் அசிடிட்டி காரணமாக இருக்கலாம் என அலட்சியம் செய்து விட்டார். இரண்டு மணி நேரம் கழித்து, வீட்டில் மார்பு வலி ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்ற போது கரோனரி ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு முக்கிய தமனிகளில் ஒன்றில் முழுவதுமாக அடைப்பு இருப்பது தெரிய வந்தது.
கொலஸ்ட்ராலுக்கு அப்பாற்பட்ட சில அபாயங்கள்
1. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் மேசை வேலை
2. நாள்பட்ட வேலை மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை
3. காலை உணவை சாப்பிடாமல் இருப்பது மற்றும் இரவு மிக தாமதமாக உணவை உட்கொள்வது
4. உடல் எடை குறைவாக காணப்பட்டாலும், வயிற்றுப் பகுதி உடல் உள்ளுறுப்பு கொழுப்பு அதிகம் இருத்தல்.
5. லிப்போ புரோட்டீன்(a) அல்லது HS-CRP இரண்டும் அதிகமாக இருப்பது
5. லிப்பிடு அளவுகள் சாதாரண அளவில் இருந்தபோதிலும், இதய தமனிகளில் கால்சியம் படிந்திருத்தல்
மாரடைப்பு ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்
மாரடைப்பு என்பது இதய தசைக்கு இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது. இதற்கு பங்களிக்கும் பல ஆபத்து காரணிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் அளவு மட்டுமல்ல, வாழ்க்கை முறை தேர்வுகள், முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை அடங்கும். இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் மரபியல் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், HS-CRP, லிப்போபுரோட்டீன் (a), ApoB மற்றும் CAC அளவுகளை அறிய வழக்கமான சோதனைகளை மேற்கொள்வது முக்கியம். இது வெளியில் தெரியாத அபாயங்களை வெளிப்படுத்தும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை
1. குடும்பத்தில் இதய பிரச்சினைகள் இல்லாவிட்டாலும், ஆரம்பகால பரிசோதனையும் முக்கியமானது. நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள் எங்கின்றனர் மருத்துர்கள்.
2. வழக்கமான உடற்பயிற்சிகள் இதயத்தை காக்கும். ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் - மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
3. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஆரோக்கியமான உணவு அவசியம் நார்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை தவறாமல் உட்கொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ