Summer health tips : வெப்ப அதிர்ச்சி, அதாது ஹீட் ஸ்டிரோக், வெப்ப பக்கவாதம் (Heat Stroke) மற்றும் நீரிழப்பு (Dehydration) ஆகியவை கோடைகாலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனைகள் ஆகும். கோடை காலத்தில் அதிக வெப்பம், ஈரப்பதம் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்ப அதிர்ச்சி மற்றும் நீரிழப்பு பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இவை சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், ஆபத்தான நிலையை ஏற்படுத்திவிடும்.
வெப்ப அதிர்ச்சியின் அறிகுறிகள்:
தலைவலி, தள்ளாட்டம் அல்லது தலைசுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, பலவீனம், மயக்கம்
நீரிழப்பின் அறிகுறிகள்:
அதிக தாகம், சிறுநீர் குறைவாக வெளியாகுதல் (மஞ்சள் நிறம்), சோர்வு, வாய் மற்றும் தோல் வறட்சி,
கோடையில் பாதுகாப்பாக இருப்பதற்கான டிப்ஸ்:
1. நீர்ச்சத்தை பராமரிக்கவும் - ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். தேங்காய் தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் போன்றவற்றை அருந்தவும். தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரி, பப்பாளி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவும்.
2. வெயிலில் வெளியே செல்லும் போது கவனம் - மதியம் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். தளர்வான, பருத்தி துணிகள் அணியவும். தலைக்கு குடை, துணி அல்லது ஸ்கார்ஃப் பயன்படுத்தவும். Sunblock (SPF 30+) பூசி, சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும்.
3. உணவில் கவனம் - கொழுப்பு மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். கோதுமை, சாமை, பச்சை காய்கறிகள் போன்ற லேசான உணவுகளை சாப்பிடவும். காபி, மது பானங்கள் மற்றும் இனிப்பு பானங்களை குறைக்கவும் (இவை நீரிழப்பை தூண்டும்).
4. உடல் வெப்பத்தை குறைக்க - குளிர்ந்த நீரில் கால் மூழ்கவைக்கவும் அல்லது துணியை ஈரப்படுத்தி உடல் துடைக்கவும். நேரடியாக ஏசி அல்லது ஐஸ் தண்ணீருக்கு உடலில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதலில் சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு ஏசி, ஐஸ் தண்ணீரை பயன்படுத்துங்கள்.
5. வெப்ப பக்கவாதம் ஏற்பட்டால் என்ன செய்வது?
உடனடியாக நிழலுக்கு செல்லவும். குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும், உடலை நீரால் துடைத்து குளிர்விக்கவும். வாந்தி, மயக்கம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
முக்கியமானது:
வெறும் வயிற்றில் வெளியே செல்ல வேண்டாம்.
போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் (7-8 மணி நேரம் உறங்குங்கள்).
உடற்பயிற்சி அதிகம் செய்யாமல், காலை அல்லது மாலை நேரத்தில் செய்யவும்.
இந்த எளிய முறைகளை பின்பற்றி, கோடை வெப்பத்தில் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொளுத்தும் கோடை வெயிலில் வியர்க்குரு வராமல் இருக்க உடனே இதைச் செய்யுங்கள்...!
மேலும் படிக்க | கொளுத்தும் வெயிலை சமாளிக்க தினமும் இந்த ஒரு பானம் மட்டும் குடியுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









