நம்மில் பலருக்கு கால் பாதத்தில் ஏற்படும் வெடிப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்ற முறையான வழிமுறைகள் தெரிவதில்லை. எனவே இத்தொகுப்பில் கால் பாதத்தில் ஏற்படும் வெடிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் வெடிப்பு இருக்கும்பட்சத்தில் அதனை எப்படி சரி செய்வது என்பதையும் பார்க்கலாம்.
உடல் சூட்டை தணிக்க வேண்டும்
நமது உடலில் சூடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மென்மையான தசைகளில் வெடிப்பு ஏற்படலாம். அந்த வகையில், கால் பாதத்திலும் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் முதலில் உடல் சூட்டை தணிக்க வேண்டும். அதற்கு தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு தினமும் குளிக்கையில் உடலில் உள்ள சூடு தணியத் தொடங்கும். அதை நம்மால் உணர முடியும். அதேபோல், வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நம் உடலில் உள்ள சூடு தணிவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
மேலும் படிங்க: வெயிட் லாஸ் செய்ய நமிதா சொல்லும் பானம்! காலையில் வெறும் வயிற்றில் குடிக்கனுமாம்..
எண்ணெய் பொருட்களை தவிர்க்க வேண்டும்
நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிகம் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை நம்மால் தடுக்க முடியும். அதே நேரத்தில் எண்ணெய் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தும் விட வேண்டாம். பல வைட்டமின்கள் எண்ணெய் மூலமாக கரைந்து உடலுக்கு செல்வதாக கூறப்படுகிறது. எனவே அதிகமாக எண்ணெய் சேர்க்கப்பட்டிருக்கும் உணவுகளை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
கிழங்கு மஞ்சள்
பாத வெடிப்பு உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவை பின்பற்றுவதோடு இதனையும் பின்பற்ற வேண்டும். பாத வெடிப்பு உள்ளவர்கள் கிழங்கு மஞ்சளை பொடியாக்கி அதோடு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து அதை பாத வெடிப்பில் தடவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகிவிடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிங்க: 6 நாள்களில் 4 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைக்க உதவிய Switch On டயட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









