)
Home Remedies for Food Poisoning: மழைக்காலம் பசுமையையும் குளிர்ச்சியையும் கொண்டு வந்தாலும் பல நோய்களின் அபாயமும் இந்த காலத்தில் அதிகரிக்கிறது. இந்த நோய்களில் ஒன்று ஃபுட் பாய்சனிங். நாம் சாப்பிடும் உணவிலும் பருகும் பானங்களிலும் சிறிது கவனக்குறைவு இருந்தாலும், அவை ஃபுட் பாய்சனிங்கிற்கு காரணமாகின்றன. மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக உணவு விரைவாக கெட்டுவிடும். மேலும், வெளியில் கிடைக்கும் உணவில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களால் வயிற்று வலி மற்றும் வயிற்று உபாதை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இந்த காலத்தில் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கவனம் செலுத்தப்படாவிட்டால், ஃபுட் பாய்சனிங், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றினால், கவனமாக இருக்க வேண்டும். சில உணவுகளை சாப்பிட்ட பிறகு வயிறு தொடர்பான பிரச்சினைகள் அல்லது ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டால், உங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சில எளிதான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத வைத்தியங்கள் சில உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இஞ்சி சாறு மற்றும் தேன் பிரச்சனையைத் தீர்க்கும்
மழைக்காலத்தில் அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குக் காரணம், மழைக்காலத்தில் நமது செரிமான சக்தி பலவீனமடைகிறது. வயிற்றுப் பிரச்சினைகள் இருந்தால், ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியைப் பெறலாம். பிடிப்புகள் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் இருந்தால், ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றை எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து நிவாரணம் பெறலாம். இந்த செய்முறை பிடிப்புகள் மற்றும் வாந்தி பிரச்சனையை தீர்க்கும் மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். இஞ்சி சாறு வயிற்றை அமைதிப்படுத்துகிறது, வாயு உருவாவதைத் தடுக்கிறது.
மல்லி தண்ணீர் அற்புதமானது
வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம், ஒரு டீஸ்பூன் மல்லியை இரண்டு கிளாஸ் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அது குளிர்ந்த பிறகு, அதை வடிகட்டி குடிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடிக்கவும். இது வயிற்றை குளிர்விக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
இந்தப் பொடி பயனுள்ளதாக இருக்கும்
சோம்பு வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோம்பை அப்படியே உட்கொள்ளலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது வாயு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் நம்புகின்றனர்.
போதுமான தண்ணீர் குடிக்கவும்
வயிற்று வலி அல்லது ஃபுட் பாய்சனிங் பிரச்சனை அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். மேலும், உடல் ஃபுட் பாய்சனிங்கால் போராடும்போது, அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகளின் போது, ஒருவர் வறுத்த அல்லது காரமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை தவிர, லேசான பாசிப்பருப்பு கிச்சடி, சாதாரண தயிர் சாதம் அல்லது ஓட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம். இதனுடன், மழை நாட்களிலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. எலுமிச்சை நீர் அல்லது லேசான உப்பு-சர்க்கரை கரைசலும் உதவியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ