யூரிக் அமிலம் அதிகமா இருக்கா? ஈசியா குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்

Uric Acid Control Tips: ல எளிய, இயற்கையான வழிகளிலும் இதை செய்யலாம். சில வீட்டு வைத்தியங்கள் மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 8, 2025, 12:35 PM IST
  • எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது.
  • இது யூரிக் அமில கட்டுப்பாட்டில் உதவுகிறது.
  • தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் யூரிக் அமில அளவு குறையும்.
யூரிக் அமிலம் அதிகமா இருக்கா? ஈசியா குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்

Home Remedies For Uric Acid Control: சமீப காலங்களில் பல வாழ்க்கை முறை நோய்கள் உலக மக்களை பாடாய் படுத்தி வருகின்றன. நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால், அதிக யூரிக் அமில அளவு என இவை அனைத்திற்கும் தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் முக்கிய காரணங்களாகின்றன.

இன்றைய நவீன யுகத்தில் ஆரோக்கியமாக இருப்பதே சவாலான விஷயமாக உள்ளது. நமது உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இல்லாததுதான் இதற்குக் காரணம். யூரிக் அமிலம் அதிகரிப்பதால், மூட்டுகளில் வீக்கம், உடலின் பல்வேறு பாகங்களில் கடுமையான வலி, சிறுநீரக பாதிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். 

யூரிக் அமில பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற மக்கள் பெரும்பாலும் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் சில எளிய, இயற்கையான வழிகளிலும் இதை செய்யலாம். சில வீட்டு வைத்தியங்கள் மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

யூரிக் அமிலத்தைத் தடுக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள்

- அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்: நாள் முழுவதும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்கள் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. தண்ணீர் குடிப்பது பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- எலுமிச்சை நீர்: காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது யூரிக் அமில கட்டுப்பாட்டில் உதவுகிறது.

- ஆப்பிள் சைடர் வினிகர்: ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பதால், யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம். ஆப்பிள் சைடர் வினிகரில் ஆண்டிஆக்சிடெண்ட்  மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன.

- நெல்லிக்காய் சாறு: நெல்லிக்காய் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்தது. இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் யூரிக் அமில அளவு குறையும்.

- இஞ்சி மற்றும் மஞ்சள்: அவை கீல்வாதம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இஞ்சி டீ குடிப்பதும், உணவில் மஞ்சள் சேர்ப்பதும் யூரிக் அமில நோயாளிகளுக்கு நல்லது.

- சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்ச, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இவை உடலில் இருந்து எளிதாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகின்றன.

- சமையல் சோடா: பேகிங் சோடா யூரிக் அமிலத்தை குறைக்க உதவுவதாக கூறப்படுகின்றது. இருப்பினும், இதை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். மேலும் இதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

- செர்ரிகள்: செர்ரிகளை சாப்பிடுவது கீல்வாத தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கும் என சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

- தயிர்: குறைந்த கொழுப்புள்ள பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவை அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்களுக்கு நல்லது. இந்த உணவுகளில் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, ஆனால் பியூரின்கள் குறைவாக உள்ளன.

மேலும் படிக்க | நீண்ட பளபளப்பான அழகிய கூந்தலுக்கு.... டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை

மேலும் படிக்க | இந்த பொடி பாலில் கலந்து குடித்தால் யூரிக் அமிலம் பறந்தோடும்...மூட்டு வலி மறந்துவிடுவீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News