பதஞ்சலி பானத் துறையில் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தி வருகிறது, இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை சோடா நிறைந்த பானங்களுக்கு பதிலாக ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய விருப்பங்களை பின்பற்றி வருகிறது.

கோடை வெப்பம் தகதகவென அதிகரித்து உள்ளது, இதனால் மக்கள் வியர்த்து சோர்வடைந்துள்ளனர். இதிலருந்து தீர்வு பெற மக்களுக்கு பானங்களின் தேவை அதிகரித்துள்ளன. பொதுவாக கோடை பருவம் என்றாலே முதலில் மனதில் வருவது தண்ணீர் மற்றும் பானங்களே. இதனால் இந்த பருவத்தில் பானத் துறை சக்கை போடு போடும்.
இருப்பினும், சர்க்கரையால் நிரம்பிய சோடாக்கள் மற்றும் செயற்கை பானங்கள் நிறைந்த சந்தையில், தற்போது பதஞ்சலி ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய அடிப்படையிலான மாற்றுகளை வழங்குவதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. எப்படி என்பதை காணலாம்.
பதஞ்சலி தனக்கென தனி இடத்தை பிடிக்க முக்கிய காரணம் அதன் பானங்களில் சிறந்த சத்துக்களை பயன்படுத்துவதும், பெரும்பாலான பிரபல பான நிறுவனங்களை விட குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்துவதும் ஆகும். பெரும்பாலான சோடா பானங்களில் பாதுகாப்பு ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் மற்றும் பரிசுத்தமான சர்க்கரை மிக அதிகமாக இருக்கும். ஆனால் பதஞ்சலி, இயற்கையான மற்றும் பாரம்பரிய செய்முறைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த பானங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தர உதவுகிறது.
உதாரணமாக, பதஞ்சலியின் ரோஸ் சர்பத் ரோஜா இதழ்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதனுடன் குறைந்த சர்க்கரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பானம் உடலை சீராக்கும் தன்மையுடன், ஆயுர்வேதத்தில் அமைதியளிக்கும் பானமாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக சந்தையில் கிடைக்கும் செயற்கை ரோஸ் சர்பத்களை விட, இது ஒரு ஆரோக்கியமான மாற்றாக இருக்கிறது.
அதேபோல, வைட்டமின் C நிறைந்த பதஞ்சலியின் பழச்சாறுகளான மோசம்பி ஜூஸ் சிறந்த கோடை பழமாகும். அதேபோல, மேங்கோ டிரிங்க்ஸ் டெட்ரா பேக் வடிவிலும் கிடைக்கிறது. எனவே இவை அனைத்தும் ஆரோக்கியமான பானங்களாகும்.
பதஞ்சலி வழங்கும் பானங்களில் செயற்கை சேர்க்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன. மேலும், பதஞ்சலி வழங்கும் இந்திய பாரம்பரிய பானங்கள் — பேல் சர்பத் மற்றும் குஸ் சர்பத் போன்றவையும் ரசாயனம் இல்லாமல் தயாரிக்கபட்டுள்ள பானங்களாகும். பேல் என்பது இந்தியாவில் பிரபலமான பழம், இது ஜீரணத்திற்கு உதவுகிறது மற்றும் உடலை இயற்கையாக குளிர்விக்கும் தன்மை கொண்டது. குஸ் எனும் வேரொன்றின் சாரமாக தயாரிக்கப்படும் குஸ் சர்பத்து, தனிச்சுவையுடன், சீரான குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை உடலுக்கு தருகிறது.
இந்தியாவில் கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த பானங்கள் தலைமுறைகள் கடந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படிப் பட்ட நிலையில் தற்போது பதஞ்சலி அவற்றை இயற்கையான தன்மையுடன், இன்றைய நவீன சந்தைக்கு ஏற்ப மீண்டும் கொண்டு வந்துள்ளது.
பதஞ்சலியை உண்மையில் தனித்துவமாக்குவது என்னவெனில், ஆரோக்கியமான, மலிவான, இயற்கையான மற்றும் தலைமுறை தோறும் பரிசோதிக்கப்பட்ட பொருட்களை வைத்து தயாரிக்கப்படுகின்றன. இன்று மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளை பற்றி அதிகம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் பதஞ்சலி மிகவும் சுலபமான மற்றும் சிறந்த தேர்வாக திகழ்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ