Brinjal Health Benefits Tamil | கத்தரிக்காய் வைத்து இந்தியா முழுவதும் செய்யப்படும் ரெசிபிக்கள் ஏராளம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான ரெசிபிக்கள் கத்திரிக்காயில் செய்கின்றனர். இதில் குறைந்த கலோரி மட்டுமே இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. கத்தரிக்காயை உண்பதால் வயிறு நிரம்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அதிகம் சாப்பிடமாட்டீர்கள். சாப்பாடு குறையும்போடு இயல்பாகவே உங்களின் உடல் எடை குறையும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கத்தரிக்காய் சமையல்


குளிர்காலம் வந்துவிட்ட நிலையில் என்னென்ன காய்கறிகள் சமைக்கலாம், இந்த சீதோஷ்ண நிலைக்கு உகந்த உணவுகள் எது என மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுகளை சமைத்தால் மட்டுமே, ஆரோக்கிய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிற, பாக்டீரியா வைரஸ்களை எதிர்த்து போராடக்கூடிய உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற உணவு கத்தரிக்காய். இதனை வைத்து பருப்பு சாம்பார், கத்தரிக்காய் கூட்டு, பொறியல், துவையல் என வாய்க்கு ருசியான குழம்பு வகைகளை சமைத்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க | வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..


கத்தரிக்காய் நன்மைகள்


கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை  கட்டுப்படுத்துவதால் , உடல் எடையை குறைக்க உதவுகிறது. கத்தரிக்காய் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது.


சுட்ட கத்தரிக்காய் நன்மைகள்
 
கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1,  மற்றும் பி2, காணப்படுகின்றன. வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம்  குறையும். கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.


கீழ்வாதம், மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு


கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது.  கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் எல்லாம் இருக்கிறது என்பது தெரிந்தால், எங்கே கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள். என அவ்வளவு சத்துக்கள் மற்றும் பயன்களை தருகிறது. கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க  விரும்புபவர்களுக்கு ஏற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக்  குணப்படுத்தும். 


கத்தரிக்காய் நல்லதா என்பதை எப்படி அறிவது?


கத்தரிக்காயில் உள்ள பூச்சிகள் பொதுவாக மறைந்துவிடும். இருப்பினும், வாங்கும் போது அதன் வெளிப்புறத்தில் கவனம் செலுத்தினால், சந்தையில் இருந்து நல்ல தரமான கத்தரிக்காயை வாங்கலாம். நல்ல தரமான கத்தரிக்காயின் வெளிப்புறத்தில் சிறிய துளைகள், புள்ளிகள் அல்லது குழிகள் இருக்காது. கத்தரிக்காயில் பெரும்பாலும் அதிக விதைகள் இருப்பதால், அதன் சுவை நன்றாக இருக்காது. கத்தரிக்காயை வாங்கும் போது, ​​அதை உங்கள் கைகளால் லேசாக அழுத்தி சரிபார்க்க வேண்டும். கத்திரிக்காய் அழுத்தும் போது உள்ளே சென்றால் அதில் விதைகள் இருக்காது. அழுத்திய பிறகும் உள்ளே செல்லாமல், கனமாக உணர்ந்தால், அதில் விதைகள் நிறைந்திருக்கலாம்.


கத்தரிக்காயை வாங்கும் போது, அதன் தண்டு அருகே கவனமாக பார்க்கவும். சில நேரங்களில் தண்டைச் சுற்றி மிக மெல்லிய துளைகள் உள்ளன, அதில் பூச்சிகள் இருக்கலாம். அதே நேரத்தில், கத்தரிக்காய் மிகவும் மென்மையாகத் தெரிந்தால், அது உள்ளே அழுகியிருக்கலாம். அதே நேரத்தில், கத்தரிக்காயில் கருப்பு புள்ளிகள் தெரிந்தால், அது மிகவும் பழையதாக இருக்கலாம். இதனையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ