அடாவடி கொலஸ்ட்ராலை அடக்கும் பச்சை வெங்காயம்: இப்படி சாப்பிட்டால் போதும்

Cholesterol Control Tips: கொழுப்பு காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் இதயம் தொடர்பான நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2025, 12:53 PM IST
  • வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை வேகமாக குறைக்கலாம்.
  • வெங்காயம் உட்கொள்வதற்கான சரியான நேரம் என்ன?
  • அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
அடாவடி கொலஸ்ட்ராலை அடக்கும் பச்சை வெங்காயம்: இப்படி சாப்பிட்டால் போதும்

Cholesterol Control Tips: இந்த நவீன காலத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக, பெரும்பாலான மக்கள் பல வித வாழ்க்கை முறை நோய்களால் அவதிப்படுகிறார்கள். இவற்றில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது பலரிடையே காணப்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

கெட்ட கொழுப்பு அதிகரிப்பதால் பலர் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். கெட்ட கொழுப்பால், நரம்புகளில் அதிக அளவில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. கொழுப்பு காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் இதயம் தொடர்பான நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், மாரடைப்பு, இதய கோளாறுகள், பக்கவாதம் போன்ற பல வித பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். 

கெட்ட கொழுப்பை போக்க பல வித இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று வெங்காயத்தின் பயன்பாடு. பச்சை வெங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் கெட்ட கொழுப்பை சீரான வழியில் குறைக்கலாம்.

வெங்காயம்

சாலட்டில் பச்சை வெங்காயத்தைச் சேர்த்து உட்கொள்வது மிக நல்லது. வெங்காயத்தில் குர்செடின் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். பச்சை வெங்காயத்தில் ஃபிளாவனாய்டு ஆண்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன, இவை செரிமான அமைப்பை பலப்படுத்த உதவுகின்றன. 

வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை வேகமாக குறைக்கலாம். கொழுப்பைக் குறைக்க, உங்கள் உணவில் அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

வெங்காயம் உட்கொள்வதற்கான சரியான நேரம் என்ன?

வெங்காயத்தை தவறான முறையில் அல்லது தவறான நேரத்தில் சாப்பிட்டால், அதன் மூலம் நன்மை கிடைக்காது. மாறாக உடல் ஆரோக்கியத்திற்கு இது கேடு விளைவிக்கலாம். வெங்காயத்தின் நன்மைகளை முழுமையாகப் பெற, அதைப் பச்சையாகவே சாப்பிட வேண்டும். இதை சாலட் போல சாப்பிடலாம். தினசரி உணவில் ஒரு வெங்காயத்தையாவது சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மதிய உணவு நேரத்தில் வெங்காயம் சாப்பிடலாம். மதிய உணவின் போது வெங்காயம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது தவிர இரவு உணவின் போதும் வெங்காயத்தை  உட்கொள்ளலாம்.

துரித உணவுகள், பதப்படுத்தப்பட உணவுகளைக் குறைக்கவும்

கொலஸ்ட்ரால் நோயாளிகள் துரித உணவுகளை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளக்கூடாது. இவற்றை உட்கொள்வது கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகரிக்கிறது. கொழுப்பைக் கட்டுப்படுத்த விரும்பினால், டயட்டில் இருந்து இந்த உணவுகளை நீக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆரோக்கியமான இதயத்திற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டியது மிக அவசியம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

இதில் கவனம் தேவை

வெங்காயத்தை தோலுரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடக்கூடாது. வெங்காயம் அருகில் உள்ள நச்சுகளை கவரும் தன்மை கொண்டது. தோலுரித்த பின் நீண்ட நேரம் அப்படியே வைக்கப்பட்ட, அல்லது நறுக்கி வைக்கப்பட்ட பச்சை வெங்காயத்தை உட்கொண்டால், நாம் நச்சுகளையும் சேர்த்து உட்கொள்ளும் அபாயம் உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமனை எரிக்க உதவும்... சூப்பர்புட் இவை தான்... கட்டாயம் சேருங்க

மேலும் படிக்க | மக்கானா சூப்பர்புட் தான்... ஆனால், இந்த பிரச்சனை இருந்தால் வேண்டாமே...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News