High Uric Acid in Summer: யூரிக் அமில பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் காணப்படும் பொதுவான ஒரு பிரச்சனை. பியுரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் யூரிக் அமில பிரச்சனை அதிகமாகும். உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இந்த யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த சரியான உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக யூரிக் அமிலம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இருப்பினும், அது முறையாக வெளியேற்றப்படாவிட்டால், அது கட்டியாகி மூட்டுகளில் வலிமிகுந்த வீக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக கோடை காலத்தில் பல வகையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும். இதில் அதிக யூரிக் அமில பிரச்சனையும் அடங்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் வீக்கம், மூட்டுகளில் வலி மற்றும் கீல்வாதம் ஏற்படத் தொடங்கும்.
கோடை காலத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்., கோடைக் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நீரிழப்புடன் இருக்கும்போது, சிறுநீரகங்கள் தண்ணீரைச் சேமிக்க முயற்சி செய்கின்றன, இதனால் சிறுநீரை தடிமனாக்குகிறது. இதனால் யூரிக் அமிலம் சரியாக வெளியேற்றப்படாமல், இரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. இதுவே கோடை காலத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம் ஆகும். இப்போது யூரிக் அமிலம் கட்டுக்குள் வைத்திருக்க இதை செய்யுங்கள்.
யூரிக் அமிலத்தைக் குறைக்க இதை முயற்சிக்கவும்:
அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்: உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற, அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். கோடையில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க, குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவும்.
பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்: கோடைக் காலத்தால் இறைச்சி, மீன், மது மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவற்றில் பியூரின் நிறைந்தள்ளது. இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கக்கூடும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளவும்: யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஃபிரெஷ் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்ளவும். குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் காய்களை சாப்பிடுங்கள்.
உடற்பயிற்சி கட்டாயம் செய்யவும்: கோடை காலத்தில் யோகா அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சி செய்வது யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது உடலில் இருந்து கூடுதல் யூரிக் அமிலத்தை நீக்க உதவுகிறது.
உடல் எடையைக் கட்டுப்படுக்குள் வைத்திருக்கவும்: அதிக எடை யூரிக் அமிலத்யத்தை அதிகரிகக்கும். எனவே கோடையில் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









