யூரிக் அமிலம், மூட்டு வலி... இயற்கையான வழியில் குறைக்க உதவும் சின்ன சின்ன விதைகள்

Uric Acid Control: உடலில் அதிகரிக்கும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில எளிய, இயற்கையான வழிகள் உள்ளன. யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் 5 வகையான விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2025, 05:38 PM IST
  • யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, எள் உடொள்வது நல்லது.
  • இவற்றில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன.
  • ஆளி விதைகளை உட்கொள்வது யூரிக் அமில அளவைக் குறைக்கிறது.
யூரிக் அமிலம், மூட்டு வலி... இயற்கையான வழியில் குறைக்க உதவும் சின்ன சின்ன விதைகள்

Uric Acid Control: இந்த அவசர காலத்தில், மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, பலர் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியாதபோது உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. யூரிக் அமில அளவு அதிகமானால், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிக யூரிக் அமிலம் மூட்டு வலி, சிறுநீரக கற்கள், சிறுநீர் பிரச்சினைகள், குமட்டல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். 

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க இயற்கையான வழிகளை கையாள்வது நல்லது. இதன் மூலம் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இதை குணப்படுத்தலாம். உடலில் அதிகரிக்கும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில எளிய, இயற்கையான வழிகள் உள்ளன. யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் 5 வகையான விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Chia Seeda: சியா விதைகள்

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 நிறைந்த சியா விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதை உட்கொள்ள, அவற்றை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் சாப்பிட வேண்டும். நீங்கள் இதை தயிர் மற்றும் ஓட்மீலுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Flaxseeds: ஆளி விதைகள்

ஆளி விதைகளை உட்கொள்வது யூரிக் அமில அளவைக் குறைக்கிறது. இந்த விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் நிறைந்துள்ளன. இவற்றை உட்கொள்வதால் வீக்கம் மற்றும் வலி குறையும். இதை அரைத்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

Sesame Seeds: எள்

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, எள் உடொள்வதும் நல்லது. இவற்றில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. எள் உருண்டை, எள் சாதம், எள் பொடி ஆகியவற்றின் மூலம் உணவில் எள்ளை சேர்த்துக்கொள்ளலாம். எள் பொடியை கூட்டு, கறி, குழம்பு ஆகியவற்றிலும் சேர்க்கலாம்.

Pumpkin Seeds: பூசணி விதைகள்

மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த பூசணி விதைகள் ஆரோக்கியத்திற்கு நல்லவையாக கருதப்படுகின்றன. இவை யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகின்றன. இந்த விதைகளை வறுத்து சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

Sunflower Seeds: சூரியகாந்தி விதைகள்

உடலில் படிந்திருக்கும் யூரிக் அமிலத்தைக் குறைக்க, வைட்டமின்-ஈ, செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சூரியகாந்தி விதைகளை உட்கொள்ளலாம். அவற்றை வறுத்தோ அல்லது தயிரில் கலந்தோ சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரு மாதம் வெறும் வயிற்றில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிங்க... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

மேலும் படிக்க | உடல் எடையும் சரி, சுகர் சரி..கோவைக்காய் உடலில் சத்து தரும் சூப்பர் ஹீரோ! டயடுக்கு பக்கா பொருத்தம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News