நீங்க சைவமா?... வைட்டமின் பி12 போக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

Vitamin B12 Veg Options: வைட்டமின் பி12 நம் உடலுக்கு தேவையான மிகவும் முக்கியமான சத்தாக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சைவ உணவை சாப்பிடுபவராக இருந்தால் எந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2025, 12:51 PM IST
  • வைட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகள்
  • உடல் பலவீனமடையாமல் இருக்கும்.
  • தயிரில் வைட்டமின் பி12 உடன் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
நீங்க சைவமா?... வைட்டமின் பி12 போக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

Vitamin B12 Rich Veg Foods: நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின் பி12. இந்த உணவுகளை நாம் சரியான அளவில் உட்கொள்ளவில்லை என்றால், உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் காலையில் எழுந்த பிறகும் சோர்வாக இருப்பதை நீங்கள் அடிக்கடி கவனித்திருக்கப்பீர்கள், அதேபோல் எப்போதுமே சோம்பேறிதனமாக இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் போதுமான அளவு வைட்டமின் பி12 இல்லாததே. எனவே நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அகட்டாயம் உட்கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் பி12 ஊட்டச்சத்து சிவப்பு இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்ட பல அசைவ உணவுகளில் காணப்படுகிறது. எனினும் சைவ உணவு உண்பவர்கள் எந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் வைட்டமின் பி12 குறைப்படை போக்கலாம் என்கிட்ட குழப்பம் இருக்கும். உங்களுக்கும் இந்த சந்தேகம் இருந்தால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை ஒருமுறை சரிப்பார்க்கவும்.

வைட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகள் | Vegetarian foods rich in vitamin B12:

பால் (MILK):
பால் ஒரு முழுமையான உணவாகும. இதற்குக் காரணம், பாலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பாலில் உள்ள முக்கிய சத்துக்கள் - கால்சியம், புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, ரிபோஃபிளேவின், பொட்டாசியம், பாஸ்பரஸ், கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன. அந்த வகையில் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் பால் குடித்து வரலாம், இதனால் உடல் பலவீனமடையாமல் இருக்கும்.

தயிர் (CURD):
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுகளில் வதிரு தான் தயிர். தயிரில் வைட்டமின் பி12 உடன், வைட்டமின் பி2, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், ப்ரொபயாடிக் பாக்டீரியா, பொட்டாசியம், கொழுப்பு ஆகியவை இதில் நிறைந்துள்ளது. தயிர் சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கும். ஆனால் முடிந்த வரை குறைந்த கொழுப்புள்ள தயிரை மட்டுமே சாப்பிடவும். ஏனெனில் அதிக கொழுப்புள்ள தயிர் உடல் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய் ஏற்படலாம்.

ஓட்ஸ் (OATMEAL):
பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் காலையில் ஓட்ஸ் சாப்பிடவும் என்கிறார்கள். ஏனெனில் காலை உணவில் ஓட்ஸ் உட்கொள்வதல் உடலில் உள்ள ஆற்றல் அதிகரிக்கும், இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதேபோல் இதில் கரைக்கும் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்கள், மெக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம், மெங்கனீஸ், வைட்டமின் பி, குறைந்த கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன. இதில் நல்ல அளவு வைட்டமின் பி12 இருப்பதால், கட்டாயம் இந்த உணவை சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மறந்தும் இந்த 7 பேர்கள் இந்த உணவு பக்கம் மட்டும் போகவே போய்டாதீங்க..மீறிச் சாப்பிட்டால் மோசமான ஆபத்து!

மேலும் படிக்க | குழந்தைப் பெற்ற பின் உடம்பு காற்றுபோல் ஊதிவிட்டதா..தினமும் இதை செய்தால் பழைய உடம்பு மீண்டும் வந்துவிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News