தொப்பை கொழுப்பை சட்டென குறைக்க உதவும் சாதம் வடித்த கஞ்சி: இப்படி குடித்தால் போதும்

Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க சாதம் வடித்த கஞ்சியை எப்போது உட்கொள்ள வேண்டும்? எப்படி உட்கொள்ள வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2025, 04:52 PM IST
  • சாதம் வடித்த கஞ்சி ஒரு சத்தான பானம்.
  • சாதம் வடித்த கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • உடல் பருமனை குறைக்க உதவும் சாதம் வடித்த கஞ்சி.
தொப்பை கொழுப்பை சட்டென குறைக்க உதவும் சாதம் வடித்த கஞ்சி: இப்படி குடித்தால் போதும்

Weight Loss Tips: உலக மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் உடல் பருமனும் முக்கியமான ஒன்றாக உள்ளது. உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினம். குறிப்பாக தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரித்தால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமகாவே உள்ளது.

Add Zee News as a Preferred Source

முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களும், மோசமான வாழ்க்கை முறையும் உடல் படுமன் பிரச்சினைக்கான மூல காரணங்களாக கருதப்படுகிறன. இன்றைய அவசர காலத்தில் உணவுப்பழக்கம் சீராக இல்லாததோடு, உடல் செயல்பாடுகளும் மிக குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். 

உடல் பருமன் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் கொண்டு வருகிறது. இதைத் தவிர்க்க, மருத்துவர்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உதவும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை குறைக்க சாதம் வடித்த கஞ்சி உதவும். உடல் பருமனை குறைக்க சாதம் வடித்த கஞ்சியை எப்போது உட்கொள்ள வேண்டும்? எப்படி உட்கொள்ள வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சாதம் வடித்த கஞ்சி ஒரு சத்தான பானம்

சாதம் வடித்த நீர் ஒரு சத்தான பானமாகக் கருதப்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த நீர் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஸ்டார்ச், அதிகப்படியான கொழுப்பை மிக விரைவாகக் குறைத்து, உடலை ஃபிட்டாக மாற்ற உதவுகிறது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

சாதம் வடித்த கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

புழுங்கல் அரிசியை சாதமாக வடித்து அந்த நீரைக் குடிப்பதால் செரிமான சக்தி அதிகரிக்கும். இது வயிற்றின் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும், நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகவும் இது உதவுகிறது. இதனால் வயிற்றில் கொழுப்பு சேராமல் இருக்கும். உடல் பருமன் பிரச்சனையும் இருக்காது. இது வயிற்று வலி, வாயுத்தொல்லை மற்றும் வீக்கத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்

வேகவைத்த அரிசி நீரைக் குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இது சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றில் நிவாரணம் அளிக்கிறது. இதை குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது.

சாதம் வடித்த கஞ்சியை எப்படி குடிக்க வேண்டும்?

முதலில் அரிசியை வேகவைக்கும்போது, ​​அதில் உள்ள கூடுதல் தண்ணீரை அகற்றவும். இந்த நீர் சாதம் வடித்த கஞ்சி என கூறப்படுகின்றது. இந்த தண்ணீரை வடிகட்டி சிறிது நேரம் குளிர வைக்கவும். பின்னர் இந்த வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து சூப் போல குடிக்கவும். இதை சுமார் 3 வாரங்களுக்குச் செய்வது அதிகரித்த எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாக்கிங் போகாமல் உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

மேலும் படிக்க | பூசணி விதைகளை எதற்காக சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News