Banana for Uric Acid Control: இன்றைய ஓட்டம் மிகுந்த வாழ்க்கையில், பல வித வாழ்க்கை முறை நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதும் முக்கியமான ஒன்றாகும். முன்னர் ஒரு சிலருக்கே இருந்த இருந்த இந்த பிரச்சனை, இந்நாட்களில் பலரிடம் காணப்படுகின்றது.
மோசமான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் அதிகரித்த யூரிக் அமிலத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளலாம். நம் உடலில் யூரிக் அமிலம் உருவாவது ஒரு இயல்பான செயலாகும். அது உருவாகும்போது, சிறுநீரகம் அதை வடிகட்டி, உடலில் இருந்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
ஆனால் சில நேரங்களில் யூரிக் அமிலம் முழுமையாக வெளியேறாமல், உடலில் அதன் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், அது படிப்படியாக படிகங்களாக மூட்டுகளில் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக சிலர் கடுமையான வலியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்தப் பிரச்சனையால் வலி அதிகமாகி, சரியாக நடக்கக்கூட முடியாத நிலையும் ஏற்படக்கூடும். சில எளிய, இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமிலம் என்றால் என்ன?
நமது உடலுக்குள் பியூரின் எனப்படும் ஒரு பொருள் உடைக்கப்படும்போது, யூரிக் அமிலம் உருவாகிறது. இது நம் உடலில் இருந்து சிறுநீராக வெளியேறி. சிறுநீரகங்கள் அதை வடிகட்டுகின்றன. ஆனால் சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாதபோது, இந்த அமிலம் இரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. பின்னர் இது மூட்டுவலி அல்லது பிற வலிமிகுந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் கட்டுக்குள் இருக்குமா?
உலகில் அதிகமாக விரும்பப்பட்டு சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம். வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பண்புகள் இதில் உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். வாழைப்பழங்களில் குறைந்த அளவு பியூரின் உள்ளது. இது யூரிக் அமில அளவு அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு வாழைப்பழத்தில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் மூன்று வாழைப்பழங்களை சாப்பிடலாம். சிறிய அளவிலான பழங்கள் என்றால் 4 பழங்கள் சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொளுத்தும் கோடை வெயிலில் வியர்க்குரு வராமல் இருக்க உடனே இதைச் செய்யுங்கள்...!
மேலும் படிக்க | கொளுத்தும் வெயிலை சமாளிக்க தினமும் இந்த ஒரு பானம் மட்டும் குடியுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









