Bottle Gourd For Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. பலர் இதனால் அவதிப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை, உடல் செயல்பாடற்ற நிலை ஆகியவை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினமான விஷயமாக உள்ளது. குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம், உணவு கட்டுப்பாடுகள், மாத்திரைகள் மூலமாகவும் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். எனினும் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கள் மற்றும் பழங்களே இதில் நமக்கு உதவுகின்றன.
ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி, தினமும் போதுமான உடல் செயல்பாடுகள் இருந்தால், உடல் எடையை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான உணவுமுறையில், குறிப்பாக எடையை குறைப்பதில் சில காய்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. எடை இழப்பு பயணத்தில் ஒரு பச்சை காய்கறியைச் சேர்ப்பது உடல் கொழுப்பை விரைவாகக் கரைக்க உதவும். எடை இழப்புக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இவை பல வழிகளில் எடை இழப்புக்கு உங்களுக்கு உதவுகின்றன. இந்த பச்சை காய்கறி எடை இழப்புக்கு ஒரு சஞ்சீவியாக இருக்கும் ஒரு காய் சுரைக்காய்.
எடை இழப்பு முயற்சியில் இருக்கும் நபர்கள் சுரைக்காயை உட்கொள்ளலாம். இது மெழுகு போல உடல் கொழுப்பை உருக்கும். இதில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. ஒரு கப் (146 கிராம்) சுரைக்காயில் வெறும் 32 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது பல வழிகளில் எடை இழப்பிலும் தொப்பை கொழுப்பை குறைப்பதிலும் உதவும்.
Bottle Gourd For Weight Loss: எடை இழப்புக்கு சுரைக்காயின் நன்மைகள்
சுரைக்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஒரு கிண்ணம் சுரைக்காயை வேகவைத்து சாப்பிட்டால், அது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கும். இது பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதன் மூலம் தேவையை விட அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு குறைவான கலோரிகளை உட்கொள்ளலாம்.
சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதுடன், இது டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் சிறுநீரக செயல்பாடு மேம்படுத்தப்பட்டு உடலில் இருந்து அசுத்தங்கள் விரைவாக வெளியேறுகின்றன. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே இது எடை இழப்புக்கு சிறந்த காய்கறியாகக் கருதப்படுகிறது. எடை இழப்பு டயட்டில் இதைச் சேர்ப்பதன் மூலம், மிக விரைவாக எடையைக் குறைக்க முடியும்.
எடையை குறைக்க சுரைக்காயை எப்படி உட்கொள்வது?
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பல வழிகளில் சுரைக்காயை தங்கள் உணவில் சேர்க்கலாம். இதை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான எளிதான வழி, அதை வேகவைத்து உட்கொள்வதுதான். மிகக் குறைந்த எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி சுரைக்காய் கறியை சமைத்து உண்ணலாம். இது தவிர, சுரைக்காய் குழம்பு, கூட்டு, தயிர் பச்சடி போன்ற பல வழிகளில் இதை சாப்பிடலாம். மேலும், தினமும் காலையில் சுரைக்காயை சாறு குடிக்கலாம். இது செரிமானத்தை சீராக்கி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 4 மாதங்களில் 25 கிலோ குறைத்தது எப்படி? ஃபிட்னஸ் கோச் பகிரும் சீக்ரட்!
மேலும் படிக்க | 5-4-5 Walkimg Formula: வேகமா எடை குறைய இப்படி நடந்து பாருங்க, ஒல்லி பெல்லி கேரண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









