உடல் எடை உடனே குறைய இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்

Weight Loss With Cinnamon: சில இயற்கையான, எளிய வழிகளிலும் நம உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் நாம் தினமும் சமையலறையில் பயன்படுத்தும் மசாலாக்கள் நமக்கு உதவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 19, 2025, 02:14 PM IST
  • இலவங்கப்படை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி கொழுப்பை கரைக்கும்.
  • இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
உடல் எடை உடனே குறைய இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக உடல் பருமன் பிரச்சனை பலரிடம் பரவலாக காணப்படுகின்றது. உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்க வேண்டி வருகிறது.

Add Zee News as a Preferred Source

Weight Loss With Cinnamon

சில இயற்கையான, எளிய வழிகளிலும் நம உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் நாம் தினமும் சமையலறையில் பயன்படுத்தும் மசாலாக்கள் நமக்கு உதவும். உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் எடையையும் குறைக்க உதவும் பல மசாலாக்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. இது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதில் பெரிய வகையில் உதவுகின்றது. எடை இழப்பில் இதன் பங்களிப்பு அபாரமானது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது கொழுப்பை வேகமாக உருக உதவுகிறது. 

உடல் பருமனை குறைக்க இலவங்கப்படை எவ்வாறு நமக்கு உதவுகின்றது என இந்த பதிவில் காணலாம்.

Metabolism: வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி கொழுப்பை  கரைக்கும்

இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும்போது, ​​உடல் கலோரிகளை வேகமாக எரிக்கும். இதனால் எடை இழப்பு செயல்முறை வேகமாக இருக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் கொழுப்பு விரைவாகக் குறையத் தொடங்குகிறது.

Blood Sugar Level: இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

இரத்த சர்க்கரை அதிகரிப்பது எடை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. இது இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்க உதவுகிறது. தினமும் இலவங்கப்படை நீர் பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலில் கூடுதல் கொழுப்பு சேராது. தினமும் ஒரு டீஸ்பூன் தேனை அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்து சாப்பிட்டால் போதும். இது உடலில் ஏற்படும் பசியைக் குறைத்து, எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

Belly Fat: தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்

தொப்பை கொழுப்பு பிரச்சனை பலரிடம் காணப்படுகின்றது. தொப்பை கொழுப்பை கரைப்பதில் இலவங்கப்பட்டை பெரிய அளவில் உதவும், இதில் உள்ள தனிமங்கள் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. இதன் மூலம் தொப்பை கொழுப்பை விரைவாகக் குறைக்கலாம். வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் சில வாரங்களில் வித்தியாசத்தைக் காணத் தொடங்கலாம்.

Digestion: செரிமானத்தை மேம்படுத்தும்

எடையை வேகமாக இழக்க, வலுவான செரிமான அமைப்பு இருப்பது மிகவும் முக்கியமாகும். செரிமானம் நன்றாக இருந்தால், உணவு சரியாக ஜீரணமாகும், உடலில் கொழுப்பு சேராது. இலவங்கப்பட்டை வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்குவதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இலவங்கப்பட்டையை கிரீன் டீயில் கலந்து குடிக்கலாம். அல்லது இலவங்கப்பட்டை டீ தயாரித்தும் தினமும் உட்கொள்ளலாம்.

Controls Hunger: அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும்

அடிக்கடி பசி எடுத்து அதிகமாக சாப்பிட்டால், எடை அதிகரிப்பது உறுதி. இலவங்கப்பட்டை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது நீண்ட நேரத்திற்கு வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் அல்லது மாலையில் இலவங்கப்பட்டையுடன் தேநீர் குடிக்கலாம். இது பசியை குறைத்து தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தடுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரு நொடியில் ரத்த சர்க்கரை கட்டுப்பட..இந்த பொடிப்போதும்! நைட் தூங்கும்போது இதை மட்டும் செய்யுங்க!

மேலும் படிக்க | உங்கள் வீட்டில் கைக்குழந்தைகள் இருக்கிறதா? தவறாமல் கடைபிடிக்க வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News