Health News In Tamil: நீங்கள் தினமும் சாப்பிடும் 5 உணவுகள் உங்கள் சிறுநீரகங்களை மெதுவாக சேதமடையச் செய்கின்றன. அதாவது தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடம்புக்கு விஷமாக கூட மாறலாம். எனவே நீங்கள் அவற்றை சாப்பிடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
சிறுநீரகங்கள் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வடிகட்டவும், உடலில் உள்ள நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்கவும் செயல்படுகின்றன. குறிப்பாக சொல்லப்போனால் சிறுநீரகம் நமது உடலை சுத்தம் செய்யும் ஒரு உறுப்பாகும். ஆனால் அதற்காக என்ன சாப்பிட்டாலும், எப்போ சாப்பிட்டாலும், எது சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் சரிசெய்து விடும் என நினைக்க வேண்டாம், ஏனென்றால் சில நேரங்களில் சில உணவுகளால் அது சேதமடைகிறது. வாருங்கள் 5 வகையான உணவுகளைப் பற்றி பார்ப்போம். இந்த ஐந்து உணவுகளை நீங்கள் தினமும் அல்லது தேவைக்கு அதிகமாக உட்கொண்டால், சற்று கவனமாக இருங்கள்.
உப்பு
அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தரவுகளின் படி, பெரும்பாலான இந்தியர்கள் ஒரு நாளைக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த 5 கிராம் உப்பை விட அதிகமாக உட்கொள்கிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவு
சிப்ஸ், பிஸ்கட், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவு போன்ற பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக உப்பு, கொழுப்பு மற்றும் பதப்படுத்திகள் உள்ளன. இவை அனைத்தும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை.
குளிர்பானங்கள்
பெப்சி, கோலா மற்றும் பிற குளிர்பானங்களில் அதிக சர்க்கரை மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தி சிறுநீரக செயல்பாட்டைக் குறைக்கும்.
சிவப்பு இறைச்சி
ரெட் மீட் (சிவப்பு இறைச்சி) அதிகமாக உட்கொள்வது உடலில் யூரியா மற்றும் கிரியேட்டினின் போன்ற கழிவுப்பொருட்களை அதிகரிக்கிறது. இதை அகற்ற சிறுநீரகங்கள் தொடந்து கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, சிறுநீரகங்கள் சேதமடைகின்றன.
சர்க்கரை
அதிகப்படியான சர்க்கரை நீரிழிவு நோயை ஏற்படுத்தும். இது சிறுநீரக நோய்களுக்கு மிகப்பெரிய காரணமாகும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் இனிப்புகள், பிஸ்கட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வது சிறுநீரகங்களை படிப்படியாக பலவீனப்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS TAMIL இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க - மையோனைஸிற்கு தடை... தமிழ்நாடு அரசு திடீர் உத்தரவு - என்ன பிரச்னை?
மேலும் படிக்க - கல்லீரலை கடுமையாக பாதிக்கும் 5 முக்கிய பழக்கங்கள் - எச்சரிக்கை அவசியம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ