Health Tips, Avoid Mobile Before Sleep: இன்றைய நவீன உலகின் மக்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் பெரியளவில் மாறிவிட்டது. அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழக்கங்கள் கூட இப்போது மக்களிடம் அதிகம் காண முடிவதில்லை. அந்தளவிற்கு ஸ்மார்ட்போன், AI என பல விஷயங்களில் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனலாம்.
Health Tips: சிறியோர் முதல் பெரியோர் வரை
இன்றைய டிஜிட்டல் உலகில் இரவு தூங்குவதும் கூட இப்போது நிம்மதியளிப்பதாக இல்லை. அதாவது தூங்கும் முன் மெத்தையில் படுத்துக்கொண்டு மொபைலை மணிக்கணக்கில் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னர் இளம் தலைமுறையினர், கல்லூரி மாணவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். பெற்றோர் இதனை கண்டிப்பர். ஆனால் இப்போது நிலமையே வேறு. பெற்றொரும் இரவு மொபைலை பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கின்றனர்.
Health Tips: மொபைலை தவிர்த்தால் கிடைக்கும் 6 நன்மைகள்
யூ-ட்யூபில் ஷார்ட்ஸ் பார்ப்பது, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பது, சேட்டில் கடலைப் போடுவது, ஓடிடியில் படம் பார்ப்பது என தூக்கத்தை கெடுத்துக்கொண்டு பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் சிறிய விஷயங்கள் தானே என சொல்லலாம். அப்படியிருக்க, தினமும் தூங்குவதற்கு சில மணிநேரங்கள் முன் இருந்து மொபைல், லேப்டாப், டிவி போன்ற சாதனங்களை பார்க்காமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Health Tips: தூக்கம் சரியாகும்
மொபைலில் இருக்கும் நீல நிற ஒளி Melatonin என்ற ஹார்மோனை பாதிக்கும். இதுதான் உங்களின் தூக்கத்தை சீராக்கும் ஹார்மோனாகும். இரவில் தொடர்ந்து மொபைலை பயன்படுத்தாமல் இருந்தால் உடல் தானாகவே ரிலாக்ஸாகி வேகமாக தூங்குவீர்கள், அதுவும் நீண்ட தூக்கமாகவும் இருக்கும். நீண்ட ஆழ்ந்த தூக்கம் உடல்நிலை பிரச்னைகளை தவிர்க்க உதவும். அதிகமாக மொபைலின் நீல நிற ஒளியை பார்த்துக்கொண்டே இருந்தால் தூக்கமின்மை, உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
Health Tips: ரத்த சர்க்கரை அளவு சீராகும்
சீரான மற்றும் நல்ல தூக்கம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். போதுமான தூக்கம் இல்லை என்றால் இன்சுலின் சுரப்பதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படும். மொபைலை இரவில் நேரத்தில் தள்ளிவைத்தால் தரமான தூக்கம் கிடைக்கும். இது உடலின் குளூகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். மேலும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற வளர்சிதை மாற்றம் நோய்களை தவிர்க்கலாம்.
Health Tips: மனநிலையும் சீராக இருக்கும்
இரவு நேரத்தில் நீங்கள் மொபைலை பயன்படுத்தும்போது நிச்சயம் ஏதாவது அழுத்தத்திற்குரிய தகவல்களை கடந்து வருவீர்கள். அல்லது, மற்றவர்களுடன் உங்களை நீங்களே ஒப்பீடு செய்துகொண்டு மன உளச்சலுக்கு ஆளாவீர்கள். அதிகப்படியான தூண்டுதல் பதட்டத்திற்கும் உணர்ச்சி சமநிலையை சீர்குலைக்கும். இதனால், தூங்கும் முன் மொபைலை தவிர்ப்பது மூலம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தலாம். இதனால் மனநிலையும் சீராக இருக்கும்.
Health Tips: இதய ஆரோக்கியம் மேம்படும்
மொபைலை இரவில் தொடர்ந்து பயன்படுத்தினால் தூக்கமின்மை பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். இது அதிக இரத்த அழுத்தம் தொடங்கி இதயநோய் வரை பல உடல்நிலை பிரச்னைகளுக்கு வழிவகை செய்யும். சீக்கிரம் தூங்குவதும், இரவில் மொபைலை பயன்படுத்தாமல் இருக்கும் போது இதய ஆரோக்கியம் சீராக இருக்கும். நீண்ட கால நோக்கிலும் இதய நோய் சார்ந்த ஆபத்து குறையும்.
Health Tips: கண் வலியை தவிர்க்கலாம்
இரவில் நீண்ட நேரம் மொபலை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் வலி, கண் வறட்சி, தலைவலி போன்ற பிரச்னைகள் வரலாம். இதனால் இரவில் மொபைலை தவிர்த்து கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் இதுபோன்ற உடல்நிலை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
Health Tips: உடல் எடையை சீராக வைக்க உதவும்
அளவுக்கு அதிகமாக இரவில் மொபைலை பயன்படுத்துவதால் தூக்கமின்மை ஏற்படும். இதனால் நீண்ட நேரம் கண் விழித்திருப்பீர்கள். இது நள்ளிரவு பசியை தூண்டும். இதனால் அதிக கலோரி உணவுகளான பிரியாணி, பர்கர், பீட்சா போன்றவற்றை சாப்பிட தூண்டும். இது உங்களின் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் பாதிப்பை உண்டாகும். எனவே மொபைலை பயன்படுத்தாமல் நன்கு தூங்கினால் வளர்ச்சிதை மாற்றம் வேகம் எடுக்கும், தேவையற்ற பசி எடுக்காது. உடல் எடையும் சீராக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் வாசகர்களின் தகவல் அளிக்கும் நோக்கில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இந்த தகவல்களை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாக செய்யக்கூடிய 5 யோகாசனங்கள்!
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு... இனிப்புகள் மட்டுமல்ல... இந்த உணவுகளும் ஆபத்துதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ