அதிகமாக ஆயில் சேர்த்தால்... இந்த 5 பெரிய பிரச்னைகள் வரும் - ரொம்ப கவனம் மக்களே

Excessive Oil Health Problems: ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்யை கூட அதிகமாக பயன்படுத்தினால், வரும் 5 உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 10, 2025, 09:14 PM IST
  • எண்ணெய் நம் உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருள் ஆகும்.
  • இப்போது ரீஃபைண்ட் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
  • அதிகமாக சாப்பிட்டால் பெரிய பிரச்னைகள் வரலாம்.
அதிகமாக ஆயில் சேர்த்தால்... இந்த 5 பெரிய பிரச்னைகள் வரும் - ரொம்ப கவனம் மக்களே

Excessive Oil Health Problems: நமது உணவுகளில் எண்ணெய் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். பொறிப்பதற்கும் சரி, வறுப்பதற்கும் சரி, உணவின் சுவையை கூட்டுவதற்கும் சரி எண்ணெய்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். நம்மூரில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்ப்போம். இருப்பினும் தற்போது ரீஃபைண்ட் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. 

Add Zee News as a Preferred Source

எனவே ஆரோக்கியத்தை அளிக்கும் எண்ணெய்யை நோக்கி மக்கள் நகர்ந்துவிட்டனர். அந்த வகையில், ஆரோக்கியமான கொழுப்புகள், தேவையான ஊட்டச்சத்துக்களை தேங்காய் எண்ணெய், அவகாடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும். இவை உடலுக்கு ஆரோக்கியம்தான் என்றாலும் அதிகமாக சாப்பிடுவது பிரச்னையை தரலாம்.

ஆரோக்கியமான எண்ணெய்யை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை தெரிந்துவைத்திருப்பதும் அவசியம் ஆகும். அதிகமான எண்ணெய் பயன்பாட்டால் வரும் 5 உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை சட்டென குறைக்க உதவும் சாதம் வடித்த கஞ்சி: இப்படி குடித்தால் போதும்

Health Problems: இதய நோய் ஆபத்து அதிகரிக்கும்

அதிகமான எண்ணெய் பயன்பாட்டால் கொழுப்புகள் அதிகமாகி, இதய நோய் ஆபத்தையும் அதிகமாக்கும். இதனை தொடர்ந்து செய்வதால், இதய தமனிகள் கடினமடைந்து, குறுகலாகிவிடும். இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். 

Health Problems: உடல் எடை அதிகரிப்பு

அதிகமான எண்ணெய்யை உட்கொள்வதால் உங்களின் உடல் எடை எக்குத்தப்பாக ஏறும். அதாவது, இதுதான் முதல் பிரச்னையாகும். கலோரிகள் அடர்த்தியாகும். அதாவது குறைந்த அளவிலான உணவை எடுத்துக்கொண்டால் அதன் கலோரி அதிகமாக இருக்கும். இதுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். 

Health Problems: செரிமான பிரச்னை வரலாம்

அதிகமான எண்ணெய் உட்கொள்வது செரிமானத்தை சீர்குலைக்கும், இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் அதிக கொழுப்புள்ள உணவுகள், செரிமானத்தை  மெதுவாக்கும். இதனால் சரியாக செரிமானம் ஆகாதது, அசிடிட்டி, உப்புசம் உள்ளிட்ட பிரச்னைகள் வரும்.

Health Problems: கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம்

ஆரோக்கியமான எண்ணெய் என சொல்லப்படும் ஆல்வி எண்ணெய்யை கூட நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவே செய்யும். எனவே நீங்கள் அதனை குறைவாக பயன்படுத்துவதே நலம்.

Health Problems: கல்லீரல் பாதிக்கலாம்

அதிகமான கொழுப்பை எடுத்துக்கொள்வதால் அதனை செயல்படுத்தி, உடலில் தேக்கிவைப்பது கடினம். இவை அதிகமாகும் போது கல்லீரல் செல்களிலேயே கொழுப்புகள் படியும். எனவே கல்லீரல் பாதிக்கப்படலாம். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள், ஊடக அறிக்கைகள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | நான் வெஜ் சாப்பிட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க! உடலுக்கு ஆபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News