உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருந்தால்... சுகருக்கு அடிமையாகிவிட்டீர்கள் என அர்த்தம்!

Sugar Addiction: நீங்கள் அதிகமாக சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் என்றால் இந்த ஐந்து அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்துவிடும்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2025, 06:52 PM IST
  • சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது பிரச்னையை ஏற்படுத்தும்.
  • அனைத்தையும் அளவோடு சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.
  • கடையில் விற்கும் ஸ்வீட்களில் மட்டும் இனிப்புகள் இருக்கிறது என்றில்லை.
உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருந்தால்... சுகருக்கு அடிமையாகிவிட்டீர்கள் என அர்த்தம்!

Sugar Addiction, Health Tips In Tamil: இன்றைய நவீன உலகில் அதிகமாக சர்க்கரையை உட்கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது உடல்நலனில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கடையில் விற்கும் ஸ்வீட்களில் மட்டும் இனிப்புகள் இருக்கிறது என்றில்லை. 

Add Zee News as a Preferred Source

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் இருந்து குடிபானங்கள் வரை இனிப்பு அதிகமாக இருக்கும். அந்த நிலையில் நீங்கள் தினமும் அதிக அளவில் இனிப்பை உட்கொண்டால் நீண்டநாள் நோக்கில் பார்க்கும்போது உடல்நிலை மிக மோசமானதாக மாறும். சிகரெட், மதுபானம் போன்று அதிகமாக இனிப்புகளை சாப்பிடுவதும் ஒருவித போதை ஆகிவிடும்.

ஐந்து அறிகுறிகள்

நீங்கள் அதிகமாக இனிப்புகளை உட்கொண்டால் உங்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் சில உடல்நிலை பிரச்னைகள் வரலாம். எனவே அதிக அளவில் நீங்கள் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது என்பதை மனதில் வைக்க வேண்டும். மேலும் நீங்கள் அதிகமாக சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் என்றால் இந்த ஐந்து அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்துவிடும். இந்த அறிகுறிகள் தெரிந்துவிட்டால் நீங்கள் சர்க்கரைக்கு அடிமையாகி விட்டீர்கள் என அர்த்தம். அதுகுறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் மக்கானா என்னும் தாமரை விதை

சோம்பேறித்தனமாக உணர்வீர்கள்

சர்க்கரையை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகமாகும், திடீரென குறையும். இதனால் உடலின் ஆற்றல் அளவு குறைந்து, மிகவும் சோம்பேறித்தனமாக உணருவீர்கள். செய்யும் வேலையில் கடும் எரிச்சல் ஏற்படும். இதுவே தொடர்ச்சியாக நடந்தால் ஒரு செயலை கூட உங்களால் முழுமையாக, முழு மனதோடு செய்ய இயலாது. பெரும் பிரச்னையைய தரலாம். எனவே, தினமும் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

மனநிலையில் எதிர்மறை தாக்கம்

சர்க்கரை அதிகமாக இருந்தால் அது உங்கள் மீது உணர்வு ரீதியாகவும் தாக்கம் செலுத்தும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களின் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகமாகும், குறைவும். இது உங்களின் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம். இதனால் உங்களுக்கு எரிச்சல்,பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஸ்வீட்டை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற வெறி

தொடர்ந்து உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று உணர்வு இருந்து கொண்டே இருந்தால் நீங்கள் சர்க்கரைக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் அதிகளவில் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றும் உங்களுக்கு சர்க்கரையை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது எனலாம். எனவே நீங்கள் தேவையான அளவுக்கு மட்டும் சர்க்கரையை சேர்த்துக் கொள்வதே உடலுக்கு நல்லதாகும்.

உடல் எடை எக்குத்தப்பாக ஏறினாலும்...

நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு உடல் எடை கூடினாலும் நீங்கள் சர்க்கரைக்கு அடிமையாகிவிட்டீர்கள் என அர்த்தம். ஏனென்றால் நீங்கள் அதிகமாக சர்க்கரையை சாப்பிடுவதனால் இன்சுலின் அளவும் அதிகமாகவே இருக்கும். இதனால் கொழுப்பு கரைவதும் குறையும். மேலும், இதனால் கொழுப்பு கரைவதும் குறையும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளில் அதிக கலோரிகள் இருப்பதால், கலோரி கரைவது குறைந்து, கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும். இதனால் ஊட்டச்சத்துக்கள் குறைவான சர்க்கரை உணவுகளை அதிகமாக சாப்பிடுவீர்கள். உடல் எடையும் இதனால் அதிகமாகும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | நிதியமைச்சருக்கு தயிர் - சர்க்கரை ஊட்டிய குடியரசுத் தலைவர்... இதில் இத்தனை விஷயம் இருக்கா...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News