நாம் தினசரி உண்ணும் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க, அல்லது அதிகபட்ச ஊட்டச்சத்து பலன்களைப் பெற, நமது உணவு முறையில் சிறிய அளவில் மாற்றங்களை செய்வதன் மூலம், மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கலாம். உங்கள் வாய் ருசிக்கு முக்கியத்துவம் அளித்து, சில உணவுகளை உண்ணும் அதே நேரத்தில், அதனுடன் ஆரோக்கிய உணவுகளையும் சேர்த்து உண்ணலாம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால், உங்களுக்கு ருசியான உணவுகளை விட்டுக் கொடுக்காமலேயே, ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். உங்கள் டயட்டில் செய்யும் சிறிய மாற்றங்கள் மூலம், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். அதோடு மூளை ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, முதுமை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
உணவின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்களை பெற செய்ய வேண்டிய மாற்றங்கள்
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுடன் சிறுதானியங்களை சேர்த்தல்
நீங்கள் உண்ணும் உணவில் அரிசி மற்றும் கோதுமையின் அளவை குறைத்துக் கொண்டு, சிறு தானியங்களின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இட்லி சாப்பிடும் அதே நேரத்தில், மறுநாள் ராகி இட்லி அல்லது சிறுதானிய இட்லியை முயற்சிக்கலாம். இதற்கு புழுங்கல் அரிசி அளவை குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக ராகி சேர்த்து, இட்லி அல்லது தோசை மாவு தயாரிக்கலாம்.
தினசரி டயட்டில் நோட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்தல்
நீங்கள் தினசரி குடிக்கும் கஞ்சி அல்லது பானங்களுடன், மாம் பருப்பு, வாதுமை பருப்பு, ஆழி விதைகள் மற்றும் சியா விதைகள் என ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்ப்பதால், உங்கள் மற்றும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றம் ஆகிய ஊட்டச்சத்துக்களின் உட்கொள்ளல் அதிகரிக்கும். இந்த மாற்றம் உடல் வீக்கத்தை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும் உதவும். மூளை மற்றும் இதய ஆரோக்கியமும் (Health Tips) சிறப்பாக இருக்கும்.
உணவில் காய்கறிகளின் அளவை அதிகரித்தல்
நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில், அரிசி மற்றும் கோதுமையின் அளவை குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஒரு கப் காய்கறி அதிகமாக சாப்பிடலாம். பல்வேறு வகையான காய்கறிகள் உங்கள் டயட்டில் இருக்கட்டும். தினமும் இரண்டு வகை காய்கறிகள் ஆவது சாப்பிடவும். காய்கறியின் நிறங்கள், அதில் உள்ள பை டு 108 களை குறைக்கின்றன. சிவப்பு ஆரஞ்சு நிற காய்கறிகளில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. பச்சை நிற காய்கறிகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஊதா நிற காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
ஆரோக்கியமான பானங்களை டயட்டில் சேர்த்தல்
காபி டீ ஒருமுறை அருந்துவது தவறில்லை. மற்ற நேரங்களில், குறிப்பாக சாப்பிட்டபின் சீரக நீர், சோம்பு நீர் அல்லது உவநீர் அருந்துவதால், செரிமானம் சிறப்பாக இருக்கும். செரிமானம் சிறப்பாக இருந்தாலே, 90% நோய்களை தவிர்த்து விடலாம். அதோடு ஏதேனும் ஒரு மூலிகை பானத்துடன் நாளை தொடங்குவதால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் நீங்கி, உடலும் மூளையும் புத்துணர்ச்சி பெறும்.
ஆரோக்கியமான எண்ணெய்களை சமையலில் பயன்படுத்துதல்
சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களுக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் போன்ற கோல்ட் பிரஸ்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தவும். ஆரோக்கியமான கொழுப்புகள் ஹார்மோன் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உறிஞ்சும் திறனை மேம்படுத்துகின்றன.
ப்ரோபயோடிக் உணவுகளை டயட்டில் கட்டாயம் சேர்த்தல்
தயிர், நீர் மோர், கேஃபிர், பழைய சாத நீர் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்களை உங்கள் உணவில் சேர்க்கவும். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளில் நிறைந்துள்ளன, இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க | பெண்களே.. உடம்பை ஃபிட்டாக வைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க!
மேலும் படிக்க | இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கோவிட் தொற்று? JN-1 Variant.... ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ