83 கிலோவில் இருந்த 'மிஸ் இந்தியா' மாடல்... 30 கிலோவை குறைக்க அவர் செய்தது என்ன?

Weight Loss Journey: பெங்களூருவை சேர்ந்த மிஸ் இந்தியா மாடலும், இன்ஸ்டா பிரபலமுமான அர்ச்சன் கபூர் நாக்பால் 83 கிலோவில் இருந்த 53 ஆக உடல் எடையை குறைத்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 21, 2025, 04:48 PM IST
  • அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
  • மன ஆரோக்கியமும் முக்கியம் ஆகும்.
  • உணவுமுறை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
83 கிலோவில் இருந்த 'மிஸ் இந்தியா' மாடல்... 30 கிலோவை குறைக்க அவர் செய்தது என்ன?

Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் அர்ச்சன் கபூர் நாக்பால் என்பவரின் உடல் எடை குறைப்பு அனுபவம் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 30 கிலோவை குறைத்த மிஸ் இந்தியா

அர்ச்சன் கபூர் நாக்பால் என்ற அந்த பெண்மணி பெங்களூரு நகரில் வசித்து வருகிறார். இவர் எழுத்தாளர், குழந்தை நல ஆலோசகர், யோகா பயிற்றுநர், வாழ்க்கைமுறை பயிற்சியாளர் என LinkedIn முகப்பில் குறிப்பிட்டுள்ளார். இவர் மிஸ் இந்தியா மாடலும் ஆவார். 

இவர் சமீபத்தில் அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை பகிர்ந்தபோது, உடல் பருமானோடு இருந்த தனது புகைப்படத்தையும், உடல் எடையை குறைத்த பிறகான தனது புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார். முதலில் 83 கிலோவில் இருந்த அவர் தற்போது 53 ஆக கிலோவுக்கு குறைத்துள்ளார். அதாவது, 30 கிலோவை அவர் குறைத்துள்ளார்.

Weight Loss Journey: நோயால் வாடிய நாக்பால்

இவர் பல்வேறு உடல்நல பிரச்னைகளை கடந்து இந்த உடல் எடை குறைப்பை சாத்தியப்படுத்தி உள்ளார். இவர் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் கடந்து வந்துள்ளார். குறிப்பாக, கருப்பை அகப்படலம் (endometriosis) என்ற பல பெண்களைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மிகுந்த வலியையும் கொடுக்கும். அப்போது கடுமையான போராட்டத்தையே வாழ்க்கை தனக்கு கற்றுக்கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 

 

Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது என்பது..

அந்த கட்டத்தில் இருந்துதான் வாழ்வை செம்மையாக்க, உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக்க வேண்டும் என்பது அவருக்கு புரிந்துள்ளது. இதையடுத்தே உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளார். உடல் எடை குறைப்பு குறித்து அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது,"உடல் எடை குறைப்பு என்பது எடையை கரைப்பது மட்டுமில்லை, வாழ்வை பெருக்குவது" என்றார். மேலும், மிகுந்த வலிமையான மனதுடன் அவர் தொடர்ச்சியாக செயலாற்றி வந்துள்ளார். ஆன்மீக நாட்டம் கொண்ட நாக்பால், மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதும் அவசியம் என்கிறார். மேலும் இவர் யோகா பயிற்சிகளின் மூலம் உடற்தகுதியையும் அடைந்துள்ளார்.

Weight Loss Journey: நாக்பால் பின்பற்றிய உணவுமுறை 

சமீபத்தில், நாக்பால் அவரது X தளத்தில், பெங்களூரு இதயநோய் நிபுணர் மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதாவது, அந்த பதிவில் உணவுமுறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதைதான் நாக்பாலும் தினமும் சாப்பிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். மருத்துவர் தீபக் போட்ட பதிவில், குறைந்த கொழுப்பு கொண்ட ஆனால், நிறைவான உணர்வை தரும் உணவுகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். 

அதாவது, இரண்டு இட்லி, பருப்பு சாம்பார், இரண்டு ரொட்டிகள், சப்ஜி, மதியம் மற்றும் உணவுகளோடு சால்டை உட்கொள்வது ஆகியவை அதில் இருந்தது. சாதத்தை அதிகம் உட்கொள்வதற்கு பதில் யோகர்ட், தர்பூசணி ஜூஸ், கடுங்காபி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தார். சாதத்தில் அதிக Glycemic Index இருப்பதால், சாப்பிட்ட உடன் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் எனலாம்.

Weight Loss Journey: நாக்பால் எடையை குறைத்தது எப்படி?

அந்த பதிவை பகிர்ந்த அவர்,"இதை பகிர்ந்துகொள்வதை சிறப்பாக எண்ணுகிறேன். நான் உங்களின் (மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தி) பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன், இதனால் பெரும் ஊக்கம் பெற்றேன். நான் என் வாழ்வில் 45 நாள்களுக்கு ஒரு மாற்றத்தை செய்தேன், தற்போது நல்ல உடற்தகுதியை பெற்றுள்ளேன்... நன்றி டாக்டர்" என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அதாவது, மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, யோகா பயிற்சிகள் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, உணவுமுறையிலும் கவனம் செலுத்தி மொத்த வாழ்க்கைமுறையையே மாற்றி உடல் எடையை குறைத்திருக்கிறார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அர்ச்சன் கபூர் நாக்பால் என்பவரின் உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 4 வருஷத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டது எப்படி? - அமித்ஷா சொன்ன டிப்ஸ்

மேலும் படிக்க | இரவு இந்த பானத்தை குடித்து... 7 கிலோவை 21 நாள்களில் குறைத்த பெண் - அது எப்படி?

மேலும் படிக்க | 20 கிலோ எடையை அசால்டாக குறைத்த குஷ்பு! சீக்ரெட் இது ஒன்னுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News