Weight Loss Journey: உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் மாதம் 1ஆம் தேதி பிறந்துவிட்டால், இந்த மாதத்தில் இருந்து உடல் எடையை குறைக்கப் போகிறேன் என்ற முயற்சியில் இறங்குவார்கள். பலரும் இதில் வெற்றியும் பெறுவார்கள், தோல்வியும் அடைவார்கள்.
Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது எளிது... ஆனால்...
ஆனால், உடல் எடையை குறைப்பது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. குறைவான கலோரிகளை தினமும் உட்கொண்டு, அதிக கலோரிகளை கரைக்கும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பது நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை தரும். மேலும், இயற்கையாகவே உடல் எடையையும் குறைக்க முடியும்.
அந்த வகையில், உணவுப்பழக்கவழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமமான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதே அத்தியாவசியமான ஒன்றாகும். இதனை தவிர்த்து நீங்கள் குறைவான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படலாம்.
மேலும் படிக்க | 133 கிலோவில் இருந்த பெண்... 47 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? - 5 டிப்ஸ்!
Weight Loss Journey: 37 கிலோவை குறைத்த 36 வயது தனுஸ்ரீ
அந்த வகையில், 36 வயதான தனுஸ்ரீ என்ற பெண் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை சூழலில் வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு 37 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். தனுஸ்ரீ இன்ஸ்டாகிராமில் தனது உடல் எடை குறைப்புக்கு உதவிய உணவுப்பழக்கம் குறித்தும், உடற்பயிற்சிகள் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவற்றை இங்கு காணலாம். இவருக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேலான பாலோயர்கள் இருக்கின்றனர்.
Weight Loss Journey: குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி
தினமும் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே உடல் எடை இழப்பு ஏற்படும். அந்த வகையில், அவர் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வாராம். நடைப்பயிற்சி மேற்கொள்வதால் வயது மூப்பு காரணமாக ஏற்படும் தசை இழப்பு பிரச்னையை தடுக்கலாம், உடல் எடை இழப்புக்கு உதவிகரமாக இருக்கும்.
Weight Loss Journey: புரதம்
உடல் எடையை குறைப்பதில் புரதச்சத்து மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளின்படி, புரதச்சத்து வயிற்றுக்கு நிறைவை தரும், பசியை கட்டுப்படுத்தும். புரதச்சத்துடன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். அது செரிமானத்தை சீராக்க உதவும்.
Weight Loss Journey: நீரேற்றமாகவே இருங்கள்
தினமும் 8 கிளாஸ் தண்ணீரையாவது குடியுங்கள். நீங்கள் அதிக தண்ணீர் குடிப்பது பசியை கட்டுப்படுத்தும். கடுமையாக தாகம் எடுத்தாலும் பசி எடுக்கும். எனவே, அந்த நேரத்தில் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்கு பதில் தண்ணீரை குடித்தாலே போதுமானது. தண்ணீரை அதிகமாக குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும்.
மேலும் படிக்க | 105 கிலோவில் இருந்த 19 வயது பெண்... 52 கிலோ உடல் எடையை குறைக்க உதவியவை என்ன?
Weight Loss Journey: உடற்பயிற்சி
தொடர்ச்சியான உடற்பயிற்சியே அதிக கலோரிகளை கரைப்பதில் உதவும். அதிக கலோரிகளை கரைப்பது உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும். தனஸ்ரீ வீட்டில் இருந்த Strength உடற்பயிற்சி மற்றும் Aerobic உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். வல்லுநர்களின் கூற்றுப்படி வாரத்திற்கு 150-300 நிமிடங்கள் தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே உடல் எடை குறையும்.
Weight Loss Journey: விரைவான இரவு உணவு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவு உணவை 6-7 மணிக்குள் முடித்துவிட வேண்டுமாம். இந்த பழக்கம் உங்களது செரிமானத்தை சீராக்கி, ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவும். ஹார்மோன்களும் சமநிலையில் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் தனுஸ்ரீ அவர்களின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு முயற்சியாகும். இதனை நீங்கள் பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 180 கிலோவில் இருந்த பெண்... 90 கிலோவை குறைக்க உதவிய டயட் என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









