179 கிலோவில் இருந்த நபர்... 4 மாதங்களில் 24 கிலோவை குறைக்க என்ன சாப்பிட்டார்?

Weight Loss Journey: 179 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர்,  24 கிலோவை 4 மாதங்களில் குறைத்துள்ளார். அவர் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2025, 09:25 AM IST
  • இவர் உடல் எடையை குறைத்த பின் உடல்நிலை பிரச்னையாகி உள்ளது.
  • அதன்பின் மீண்டும் 10 கிலோ உடல் எடை அதிகமாகி உள்ளது.
  • மீண்டும் மருத்துவ ஆலோசனையுடன் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளார்.
179 கிலோவில் இருந்த நபர்... 4 மாதங்களில் 24 கிலோவை குறைக்க என்ன சாப்பிட்டார்?

Weight Loss Journey: உடல் பருமன் என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரச்னைக்குரிய உடல்நலப் பிரச்னையாக உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க உடல் எடை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் பருமன் எக்கச்சக்க உடல்நல பிரச்னைகளையும் உடன் அழைத்து வரும் வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், உடல் எடையை குறைப்பு செய்வதின் அவசியமும் மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது. ஆனால், அதனை ஆரோக்கியமான முறையிலேயே செய்தாக வேண்டும். அதிவேகமாக செய்ய வேண்டும் என்றோ, குறுக்கு வழியில் செய்ய வேண்டும் என்றோ நினைப்பது தவறாகும். மருத்துவ நிபுணரின் ஆலோசனை மிக மிக முக்கியம்.

Weight Loss Journey: வைரலான இன்ஸ்டா பிரபலம்

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான் அக்ஷய் கக்கர் என்பவரின் உடல் எடை குறைப்பு பயணம், சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான ஒன்றாகும். அவர் இன்ஸ்டாகிராமில் உடல் எடை குறைப்பு குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டதன் மூலம் அவை வைரலாகின. 

இவர் கடந்த 2024ஆம் ஆண்டில் 179 கிலோவில் இருந்தார். ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது, முறையான மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இல்லாதது அவருக்கு பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், தனது வாழ்க்கையையும், உடலையும் கெடுத்துக்கொள்வதை மகிழ்ச்சியாக நினைத்துக்கொண்டிருந்தேன் என ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Weight Loss Journey: 4 மாதங்களில் 24 கிலோ குறைப்பு

ஆனால், இந்த வாழ்க்கை முறை இவரது உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக்கியது. அவருக்கு நீரிழிவு நோய் உண்டானது, கழுத்து வலி, உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் ஏற்பட்டன. அவரால் சரியாக இயங்க முடியவில்லை, மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்தே அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திரும்பி, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

இதுகுறித்து அக்ஷய் கூறுகையில்,"நான் என் உடல் எடை குறைப்பு பயணத்தை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினேன். 2024 ஜூலை மாதத்திற்குள் 179 கிலோவில் இருந்து 155 கிலோவுக்கு வந்துவிட்டேன்" என்றார். அதாவது, 4 மாதங்களில் 24 கிலோவை குறைத்துள்ளார். ஆனால், எதிர்பாராத உடல்நலக்குறைவால், உடல் எடை குறைப்பு முயற்சியை நிறுத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Weight Loss Journey: மீண்டும் எடை அதிகரிப்பு 

"உடல் எடை குறைப்பு முயற்சியை நிறுத்தியதால் ஆறு மாதக்காலம் நான் ஊக்கமற்று இருந்தேன். மீண்டும் ஒரு 10 கிலோ எடை அதிகரித்தது. 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் 164 கிலோ எடையை அடைந்தேன். உடல் எடை அதிகரித்தது மன அழுத்தத்தை உண்டாக்கியது" என்றார்.

Weight Loss Journey: மருத்துவ ஆலோசனைக்கு பின் எடை குறைப்பு

அதன்பின் ஒரு மருத்துவரை கலந்தாலோசித்து உடல் எடை குறைப்பு முயற்சியை மீண்டும் தொடங்கியிருக்கிறார். ஆனால் இம்முறை கடினமான பயிற்சிகளை எதையும் அவர் செய்யவில்லையாம். இதுகுறித்து அக்ஷய் கடந்த ஏப். 26ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில்,"2025 பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போதுவரை முயன்று, நான் மீண்டும் 155 கிலோவுக்கு வந்துவிட்டேன். 

எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. நான் எங்கு விட்டுச்சென்றேனோ தற்போது மீண்டும் அங்கேயே வந்துவிட்டேன். ஆனால், இம்முறை, எனக்கும், பார்வையாளராகிய உங்களுக்கும் ஒரு சத்தியத்தை செய்துகொள்ள விரும்புகிறேன், நான் இதோடு நின்றுவிட மாட்டேன். முழு முயற்சியுடன் முன்னோக்கி செல்ல இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 15 லட்ச பார்வைகளை பெற்றிருக்கிறது.

Weight Loss Journey: அக்ஷய் கக்கரின் உணவுமுறை

அக்ஷய் கக்கர், 4 மாதங்களில் 24 கிலோவை குறைக்க தினமும் அவர் சாப்பிட்ட உணவுகள் என்னென்ன என்பதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதன்படி, அவர் வெறும் வயிற்றில் எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த தண்ணீரை அருந்துவாராம். தொடர்ந்து காலை உணவில் பால் கலந்த ஓட்ஸ், ஆப்பிளை உண்பாராம். 

மதிய உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக்கொள்வாராம். மதிய உணவிற்கு பருப்பு, ரொட்டி, பச்சை காய்கறிகள், தயிர் மற்றும் சாலட்களை எடுத்துக்கொள்வாராம். அதேபோல், இரவு உணவுக்கு முன்னரும் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக்கொள்வாராம். 

இரவில் ரொட்டி, பருப்பு, பன்னீர், சாலட், அப்பளம் சாப்பிடுவாராம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு கிரீன் டீ மற்றும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவாராம். இதுதான் அவரின் உணவுப்பழக்கவழக்கமாக இருந்துள்ளது.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அக்ஷய் கக்கரின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதனை ஜீ நியூஸ் (Zee News) உறுதிப்படுத்தவில்லை)  

மேலும் படிக்க | படிக்கட்டை கூட ஏற முடியாத பெண்... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

மேலும் படிக்க | 10 வயதில் 200 கிலோ... போராடி இப்போ 77 கிலோவுக்கு உடல் எடையை குறைத்தது எப்படி?

மேலும் படிக்க | 83 கிலோவில் இருந்த 'மிஸ் இந்தியா' மாடல்... 30 கிலோவை குறைக்க அவர் செய்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News