Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டு ஆகியவற்றுடன் சிறந்த வாழ்க்கைமுறை மூலம் அடையக்கூடிய இலக்கு எனலாம். இதற்கு நீங்கள் நிச்சயம் தனியாக செயல்பட இயலாது. ஊட்டச்சத்து நிபுணர், உடற்பயிற்சி வல்லுநர் ஆகியோரின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளின் பேரிலேயே நீங்கள் உடல் எடை குறைப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நீங்களாக இதில் செயல்படுவது சரியாக இருக்காது.
Weight Loss Journey: ChatGPT மூலம் உடல் எடை குறைப்பு
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அவரது உடல் எடை குறைப்பு பயணம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் 40 நாள்களில் 5 கிலோவை குறைத்த பயணத்தை விவரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், அதில்தான் ட்விஸ்ட். அவரது உடல் எடை குறைப்புக்கான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை ChatGPT அதாவது AI மூலம் பெற்றிருக்கிறார்.
Weight Loss Journey: 40 நாள்களில் 5 கிலோவை குறைத்த அஞ்சனி போஜ்
ChatGPT-இன் அறிவுறுத்தலில்தான் அவர் 40 நாள்களில் 5 கிலோவை குறைத்திருக்கிறார். மேலும் இவர் இதற்காக ஒரு பைசா கூட செலவழிக்கவே இல்லையாம். அஞ்சனி போஜ் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்தான் ChatGPT மூலம் உடல் எடை குறைப்பை மேற்கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக அவரது உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சிகள் ஆகிய உடல் எடை குறைப்பு பயணத்தை முழுவதுமாக பதிவு செய்திருக்கிறார். அவர் மே 5ஆம் தேதி 65 கிலோவில் இருந்துள்ளார். தற்போது ஜூன் 15ஆம் தேதி அன்று அவர் 59.7 கிலோவுக்கு வந்துள்ளார்.
Weight Loss Journey: உடல் எடையை குறைத்தது எப்படி?
அஞ்சனி போஜ் தனது உடல் எடை குறைப்பு குறித்து கூறுகையில்,"எனக்கு PCOS பிரச்னை இருந்தது. அதாவது, வயிற்றில் உப்புசம், அதிக பசி, ஆற்றல் இன்மை, அதிக கொழுப்பு ஆகியவை என்னை விட்டு விலகவே இல்லை எனலாம். ஆனால் இந்த முறை ChatGPT கொடுத்த திட்டம் எனக்கு வேலை செய்தது" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு தளமான ChatGPT எப்படி அவரது உணவுத் தேவை, பிட்னஸ் இலக்கு ஆகியவற்றை தீர்மானித்து அவர் உடல் எடையை குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து கொடுத்தது என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Weight Loss Journey: அஞ்சனி போஜின் பதிவு இதோ...!
அஞ்சனி போஜ் அந்த பதிவில், ChatGPT-இல் அவர் கொடுத்த Prompt என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதன்பின் ChatGPT கொடுத்த பிளானை தினமும் பின்பற்றினாராம். மேலும், எந்த குறுக்குவழியும் இன்றி தினமும் உடல் எடை குறைப்புக்கான செயல்பாட்டை தொடர்ந்ததாகவும், ஊக்கமே இல்லாத தினத்தில் கூட அதனை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Weight Loss Journey: அஞ்சனி போஜின் உணவுப் பழக்கம்
மேலும், தனது PCOS பிரச்னைக்கு ஏற்பவே ChatGPT-இன் திட்டம் இருந்தது என கூறும் அவர், பால் பொருள்கள், குளூட்டன் உணவுகளை தவிர்த்தாராம். முட்டை, சிக்கன், பேஸில் விதைகள், சால்ட் மற்றும் Whey புரதத்தை எடுத்துக்கொண்டாராம். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "இந்த செயல்பாட்டில் தான் வெறும் 5 கிலோவை மட்டும் இழக்கவில்லை, ஒழுக்கம், பலம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் மீட்டெடுத்துள்ளேன்" என்றார்.
மேலும் ChatGPT இடம் கேட்டும் உடல் எடை குறைப்பு பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறும் போஜ், அதற்கு முன் இதுகுறித்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் உங்கள் உடல் குறித்தும் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இது அஞ்சனி போஜின் உடல் எடை குறைப்பு அனுபவம். ஆனால் இதை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் உடல் எடையை குறைப்புக்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். எனவே வாசகர்கள் உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கும் முன் மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். அஞ்சனி போஜின் கருத்துக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | 40 கிலோ எடை அசால்டாக குறைத்த பெண்! உதவிய ஒரே ஒரு வர்க்-அவுட்..என்ன தெரியுமா?
மேலும் படிக்க | 135 கிலோவில் இருந்த நபர்... 5 மாதங்களில் 40 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 10 கிலோ உடல் எடையை பட்டுனு குறைத்த பெண்... அதற்கு அவர் கைவிட்ட 7 பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









