Weight Loss: 72 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... அவர் செய்தது என்ன?

Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமான பெண் ஒருவர் தனது முயற்சியால் சுமார் 72 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். அவரின் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2025, 05:33 PM IST
  • அவர் உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து பயிற்சியாளர்
  • அவருக்கு ADHD பிரச்னை இருந்துள்ளது.
  • இதனால், உணவுப்பழக்கத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டது.
Weight Loss: 72 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... அவர் செய்தது என்ன?

Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமான எம்மா ஹூக்கர் என்பவர் அவரது இன்ஸ்டா முகப்பு பக்கத்தில் தன்னை உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து பயிற்சியாளர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பெண் பயிற்சியாளர் 72 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்தும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைப்பு பயணம் குறித்த அவரது டிப்ஸையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: ADHD பிரச்னையால் வந்த பாதிப்பு

கடந்த ஏப்.1ஆம் தேதி எம்மா அவரது இன்ஸ்டாவில், உடல் எடை குறைப்பில் ஈடுபடும் போது ADHD பிரச்னை அவரது உணவுப்பழக்கவழக்கத்தை எப்படியெல்லாம் பாதித்தது, அவர் உணவுப் பழக்கத்தை சீராக என்ன செய்தார் என்பது குறித்து பதிவிட்டிருந்தார். "ஒரே சாப்பாடு அல்லது சிற்றுண்டியின் மீது எனக்கு வெறி வந்து, வாரக்கணக்கில் தினமும் அதைச் சாப்பிட்டுவிட்டு, அதை திரும்பி கூட பார்க்க முடியாத நிலைக்கு போய்விடுவேன். பிறகு நான் சிக்கிக் கொள்வதாக உணர்ந்து, உணவைத் தவிர்க்கவோ அல்லது எனக்குப் பிடிக்காத பொருட்களை சாப்பிடவோ நேரிடும்.

சாப்பிடவில்லை என்ற ஓர்மையே இல்லாமல் நீண்ட நேரம் இருப்பேன், திடீரென்று அதீத பசி எடுக்கும், உடனே அதிகமாக சாப்பிட்டுவிடுவேன். சில நேரங்களில் நான் உணவில் கவனம் செலுத்தாததால், வயிறு நிரம்பியதைத் தாண்டியும் அதிகமாக சாப்பிடுவேன்.

Weight Loss Journey: பசியில்லாத போதும் சாப்பிடும் பழக்கம்

பசியில்லாத நேரத்தில், எனக்கு சலிப்பாக இருக்கும்போதெல்லாம் சாப்பிட்டு வந்தேன். எனக்கு தூண்டுதல் மட்டுமே தேவைப்பட்டது. அது குற்ற உணர்வாகவும், விரக்தியின் சுழற்சியாகவும் மாறியது. அதிகமான உணவு ஆப்ஷன்கள் என்னை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. குறிப்பாக அதிக உணவு ஆப்ஷன்களை தரும் உணவகங்களில் நான் பதட்டமாக உணர்கிறேன். அவசரமாக ஒரு முடிவை எடுத்து, பின்னர் வருத்தப்படுவேன்" என பதிவிட்டுள்ளார்.

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க எம்மா ஹூக்கர் என்ன செய்தார்?

இவை அனைத்திலும் இருந்தும் மீண்டு எப்படி உடல் எடையை குறைத்தேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 2-3 உணவு ஆப்ஷன்களை மட்டும் வைத்துக்கொண்டு அதனை சுழற்சி முறையில் சாப்பிடுவது தனக்கு கைக்கொடுத்தது என்கிறார். ஒரே உணவை சாப்பிட்டு அதனால் ஏற்படும் சலிப்பும் வருவதில்லை, அதேபோல் அதிக ஆப்ஷன்களை வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றார். 

இப்போது நேரத்தை குறித்துவைத்துக்கொண்டு, தனக்கு அதிக பசி எடுப்பதற்கு முன்பே சாப்பிட்டு விடுவதாகவும் விழிப்புணர்வாக இருப்பது எல்லாவற்றையும் மாற்றிவிட்டதாகவும் எம்மா கூறினார். இப்போது தனக்கு என்ன தேவை என்பதைத் தானே சரிபார்த்து அதை செய்வதாகவும், இப்போது மெனுக்களை முன்கூட்டியே சரிபார்க்கிறேன் அல்லது தனக்கு பிடித்த உணவுகளை சுழற்சி முறையில் வைத்திருக்கிறார் என்றும் எம்மா கூறுகிறார். 

குறைவான சிந்தனை, குறைவான மன அழுத்தம் என்ற வாழ்க்கைமுறைக்கு மாறிய எம்மா உணவை நல்லது அல்லது கெட்டது என்று முத்திரை குத்துவதை நிறுத்திவிட்டு, அவர் விரும்பும் பொருட்களுடன் சமச்சீரான உணவை சாப்பிட்டு வருகிறாராம். இந்த பழக்கவழக்கங்கள் மூலமே 72 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைப்பு பயணத்தில் இவை அவருக்கு பயனளித்ததாக அவர் கூறினார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் எம்மா ஹூக்கர் என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகாமல் 3 மாதத்தில் 19 கிலோ எடை குறைப்பு.. சாத்தியமானது எப்படி?

மேலும் படிக்க | 4 மாதங்களில் 25 கிலோ குறைத்தது எப்படி? ஃபிட்னஸ் கோச் பகிரும் சீக்ரட்!

மேலும் படிக்க | Weight Loss Journey: 37 கிலோ எடை குறைத்த பெண் நிபுணர்.. அப்படி என்ன செய்தார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News