தொப்பை கொழுப்பு குறைவது ரொம்ப கஷ்டம்... இந்த 'ஒரே ஒரு' தப்பை மட்டும் பண்ணாதீங்க...

Weight Loss Journey: உடல் எடை குறைப்பின் போது இந்த விஷயத்தை செய்யாவிட்டால் உங்களின் தொப்பை கொழுப்பு குறைவது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார், உடல் எடை குறைப்பு பயிற்சியாளர் ஒருவர். அவர் சொல்வதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 26, 2025, 08:46 PM IST
  • இவரை 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாவில் பின்தொடர்கின்றனர்.
  • இன்ஸ்டாகிராமில் 1400க்கும் மேற்பட்ட பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
  • அந்த வகையில், ஜூன் 24ஆம் தேதி போட்ட வீடியோ குறித்து இங்கு காணலாம்.
தொப்பை கொழுப்பு குறைவது ரொம்ப கஷ்டம்... இந்த 'ஒரே ஒரு' தப்பை மட்டும் பண்ணாதீங்க...

Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பதை ஒரு மலையேற்றத்தை போன்றது. நீங்கள் நிதானமாக, பொறுமையாக ஒவ்வொரு படியாக ஏறினால்தான் மலையுச்சியை அடையலாம். அதேபோல்தான், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள், தினமும் கலோரி குறைவான உணவுமுறை, ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்றினால்தான் உடல் எடை குறைப்பை எட்ட முடியும்.

Add Zee News as a Preferred Source

ஆனால் மலையேற்றத்தில் நீங்கள் அனைத்தும் செய்து ஒரு தவறை செய்தாலும் கூட தடுக்கி கீழே விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது. அதேதான் இங்கும். இத்தனையையும் செய்து ஒரே ஒரு தவறை செய்தாலும் உடல் எடை குறைப்பு முயற்சி பலனளிக்காது.

Weight Loss Journey: இந்த விஷயத்தை மறக்காதீங்க

உடல் எடை குறைப்பு பயிற்சியாளரான ஆன்-மரியா டாம் அந்த ஒரே ஒரு தவறு குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படுகிறார். கடந்த ஜூன் 24ஆம் தேதி அவர் வெளியிட்ட வீடியோவில், "இந்த ஒரு விஷயத்தை செய்யாததன் மூலம் தொப்பை கொழுப்பு குறைப்பை 10 மடங்கு கடினமாக்குகிறீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வது என்ன என்பது குறித்து இங்கு காணலாம். 

 

அதாவது, சாப்பிட்ட பின்னர் நடைப்பயிற்சி செய்யாமல் இருப்பது தொப்பை கொழுப்பை குறைப்பை மிகவும் கடினமாக்கும் என்கிறார். மேலும், நீங்கள் கொழுப்பை குறைக்கும் இந்த விஷயத்தை தவிறவிடுகிறீர்கள் என்றால் தொப்பை குறைவது 10 மடங்கு கடினமாக மாறும் என்கிறார். இதைச் செய்தால் நீங்கள் HIIT பயிற்சிகளை செய்ய வேண்டும் என்றோ, அல்லது அதிக நேரம் ஜிம்மில் பயிற்சியெடுக்க வேண்டும் என்றோ அவசியமில்லை" என்கிறார். 

Weight Loss Journey: சாப்பிட்ட பின்னர் 10 நிமிடம் நடைப்பயிற்சி

மேலும் அவர், "ஒவ்வொரு வேளை சாப்பிட்டிற்கு பின்னரும் 1000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும். அதாவது 10-15 நிமிடங்கள் மெதுவாக நடந்தாலே போதுமானது. இது உடலின் இயற்கையான கொழுப்பை கரைக்கும் ஸ்விட்சை ஆன் செய்துவிடும்" என்கிறார். இந்த சிறிய பயிற்சியை செய்தால், உங்களின் இன்சுலின் எதிர்ப்பில் பிரச்னை இருந்தாலோ, ஹார்மோன் சீராக இல்லையென்றாலோ கூட தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் என்கிறார். 

இதுகுறித்து ஆன்-மரியா டாம் விவிரிக்கையில், "சாப்பிட்ட உடன் நடைபயிற்சி மேற்கொண்டால் குளூக்கோஸ் உங்களது வயிற்றைச் சுற்றி கொழுப்பாக தேங்காமல், தசைகளுக்கு நேரடியாக செல்லும். மேலும் நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டை உடல் சேமிக்காமல், ஒரு எரிசக்தியாக பயன்படுத்தும்" என்கிறார்.

Weight Loss Journey: ஆரம்பமும், அடுத்தக் கட்டமும்... 

ஆரம்பக் கட்டத்தில், இரவு உணவுக்கு பின் உங்கள் வீட்டை அல்லது அலுவலகத்தை சுற்றி நடக்கவும். மொபைல் ஆப்கள் மூலம் உங்களின் ஸ்டெப்ஸ்களை கண்காணிக்கலாம். அதிகமாக நடப்பதை விட தினந்தினம், ஒவ்வொரு வேளையிலும் நடக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஒரு நாளில் ஒருமணிநேரம் முழுமையாக நடைப்பயிற்சி செய்வதை விட சாப்பிட்ட பின்னர் மூன்று வேளையும் இதேபோல் 3 முறை 10 நிமிடம் நடப்பது சிறந்ததுதான் என்கிறார் அவர்.

தினந்தினம் ஒவ்வொரு வேளையும் சாப்பிட்ட பின் 10 நிமிடங்கள் நடக்கும் பழக்கத்தை கொண்டுவந்த பின்னர், அடுத்த கட்டத்திற்கு நகர, காலை வெறும் வயிற்றில் வாரத்திற்கு இரண்டு முறை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் ஆன்-மரியா டாம். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஆன்-மரியா டாமின் தனிப்பட்ட கருத்துகள் ஆகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை) 

மேலும் படிக்க | 116 கிலோவில் இருந்த பெண்... 40 கிலோ எடையை குறைத்தது எப்படி? 3 முக்கிய டிப்ஸ் இதோ!

மேலும் படிக்க | 28 நாள்களில் சிக்குனு மாற்றலாம்... உடல் எடையை குறைக்க முக்கிய 7 பழக்கங்கள்!

மேலும் படிக்க | 55 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. இந்த 3 விஷயங்கள்தான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News