28 நாள்களில் சிக்குனு மாற்றலாம்... உடல் எடையை குறைக்க முக்கிய 7 பழக்கங்கள்!

Weight Loss Journey: வெறும் 28 நாள்களில் உடல் எடையை குறைக்க, இந்த 7 பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2025, 01:41 PM IST
  • லெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளார்.
  • அவரை 45 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.
  • உடல் எடை குறைப்பு குறித்து தொடர்ச்சியாக அழர் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
28 நாள்களில் சிக்குனு மாற்றலாம்... உடல் எடையை குறைக்க முக்கிய 7 பழக்கங்கள்!

Weight Loss Journey: உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்டவை மூலம் உடல் எடை குறைப்பை நீங்கள் அடையலாம். இணையம் முழுவதும் உடல் எடை குறைப்புக்கு என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என பல தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. குறைவான கலோரியை உட்கொண்டு தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றினால் உடல் எடை குறைப்பு சாத்தியம் எனலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: இந்த 7 பழக்கங்கள் முக்கியம்

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள ஃபிட்னஸ் பயிற்சியாளர் லெஸ்ஸி என்பவர் உடல் எடை குறைப்பு குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறது. இவரது உடல் எடை குறைப்பு குறித்த வீடியோக்கள் மூலம் மட்டும் இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். குறிப்பாக, 28 நாள்களில் இந்த 7 பழக்கங்களை பின்பற்றியும் உடல் எடை குறைப்பை மேற்கொள்ளலாம். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @lessie.fitness

Weight Loss Journey: காபியை தவிர்த்து விடுங்க

கொஞ்சமாக காபி குடிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. அதிகமாக காபி குடிப்பவதுதான் பிரச்னை. அதிக காபி குடித்தால் அதிக காஃப்பினை உட்கொள்ள நேரிடும். இது உங்களின் தூக்க முறையை சீர்குலைக்கும். பதற்றத்தை அதிகரிக்கும். மேலும் உடலில் கார்டிசாலின் அளவை அதிகரிக்கச் செய்து உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, 28 நாள்கள் முழுமையாக காபியை தவிர்ப்பது உங்களின் ஒட்டுமொத்தமாக உடல் எடை குறைப்பில் கைக்கொடுக்கும். 

Weight Loss Journey: சர்க்கரையை கைவிடுதல்

நீங்கள் உடல் எடை குறைப்பில் ஈடுபடுகிறீர்கள் என்றால் சர்க்கரையை கைவிடுவது நலம். அதாவது கலோரியை குறைவாக எடுக்கும்போது, சர்க்கரையை உட்கொள்வது சரியில்லை. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை உங்களின் ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை உண்டாகும். தீவிரமாக இனிப்பை சாப்பிட தூண்டும். எனவே உங்களின் உணவுப்பழக்கவழக்கத்தில் இருந்து சர்க்கரையை நீக்குவதன் மூலம் பசியை கட்டுப்படுத்தலாம், செரிமானத்தை சீராக்கலாம், உடல் கொழுப்பும் குறையும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு பதில் இனிப்பான பழங்களை சாப்பிடலாம். இருப்பினும் அளவோடு சாப்பிடுங்கள். 

Weight Loss Journey: 20 நிமிடங்கள் உடற்பயிற்சி

தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் மற்றஉம் உடல்நிலையை பொறுத்து உடற்பயிற்சியை தேர்வு செய்ய வேண்டும். அதிகமாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கார்டியோ மற்றும் Strength பயிற்சிகள் இரண்டையும் மேற்கொள்ளலாம். HIIT பயிற்சிகளும் உதவும். நிதானமாக ஆரம்பிக்க நினைப்பவர்கள், தினமும் நடைப்பயிற்சி செல்லுங்கள், ஓட்டப்பயிற்சியும் கூட அதிக கலோரிகளை குறைக்கும். தொடர்ச்சியாக செயல்படுவதே முக்கியம்.

Weight Loss Journey: 10 நிமிடம் தியானம்

உணவு, உடற்பயிற்சி ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். மன ஆரோக்கியமும் முக்கியம். தினமும் 10 நிமிடங்கள் நீங்கள் தியானம் செய்தால் மன அழுத்தம் குறையும், கவனம் ஓரிடத்தில் குவியும்.  இதை தினமும் செய்வது ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். 

Weight Loss Journey: இரவு 10 மணிக்கு முன் தூங்குங்கள்

உடல் எடை குறைப்பில் தூக்கமும் ரொம்ப முக்கியம். நீங்கள் தினமும் இரவு 10 மணிக்கு முன் தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் நன்றாக தூங்குவதே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். போதுமான தூக்கமில்லை என்றால் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கும். அதிலும் தொப்பை பெரிதாகும்.

Weight Loss Journey: 2 லிட்டர் தண்ணீர்

தினமும் 2 லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதே நலம். இது செரிமானம், நச்சு நீக்கம், ஆற்றல் ஆகியவற்றில் உதவும். தேவையின்றி வரும் பசியை தண்ணீர் கட்டுப்படுத்தும். வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

Weight Loss Journey: சோடாவை விட்டுவிடுங்கள்

உடல் எடை குறைப்பில் முக்கியமான டிப்ஸ் என்றால் அது இதுதான். சோடாக்கள் என்றால் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானமும் அடக்கம்தான். இது உடல் எடையை அதிகரிக்க வழிவகை செய்யும். வளர்ச்சிதை மாற்றத்தில் பிரச்னையை உணஅடாக்கும். டயட் சோடாக்கள் கூட கலோரி குறைவான பானங்கள் என விற்கப்பட்டாலும் அவை உங்களின் பசியை அதிகமாக தூண்டும், வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்னைகளை உருவாக்கும். எனவே சோடா குடிக்கும் எண்ணம் வந்தால் தண்ணீர் அல்லது மூலிகை தேநீரை அருந்தவும்.

மேலும் படிக்க | 55 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்.. இந்த 3 விஷயங்கள்தான் காரணம்!

மேலும் படிக்க | 90 கிலோவில் இருந்த பெண்... 65 கிலோவுக்கு வர அவருக்கு உதவிய டிப்ஸ் என்ன?

மேலும் படிக்க | 110 கிலோவில் இருந்த பிரபல நடிகர்... 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News