)
Weight Loss Journey: உங்கள் உடல் ஆரோக்கியம் என்பது நிச்சயம் உங்களது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் தீர்மானிக்கப்படும். சின்ன சின்ன பழக்கவழக்கங்கள் உங்களுக்கு நீடித்த மற்றும் நிலையான ஆரோக்கியத்தை வழங்கலாம். அதேபோல், சின்ன சின்ன மோசமான பழக்கவழக்கங்கள் கூட உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம்.
Weight Loss Journey: 5 ஆண்டுகள் பிட்னஸ்
அந்த வகையில், உடல் எடை குறைப்பு என்பது இதுபோல் சின்ன சின்ன பழக்கவழக்கங்களை கைக்கொள்வதில்தான் இருக்கிறது. அதுகுறித்த விழிப்புணர்வும், தொடர்ச்சியான முன்னெடுப்பும்தான் ஒருவருக்கு உடல் எடை குறைப்பு பயணத்தில் நல்ல பலனை கொடுக்கும். அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து உடலை பிட்டாக வைத்துக்கொண்டு வருபவரின் அனுபவத்தை தெரிந்துகொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பின் சூட்சமத்தை நீங்களும் புரிந்துகொள்ளலாம்.
Weight Loss Journey: நிரந்தர தீர்வை நோக்கிய நிக்கின் பயணம்
இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக அறியப்படும் நிக் ஜியோப்போ என்பவர் அவரது உடல் எடை குறைப்பு குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் உடல் எடை குறைப்பு பயிற்றுநராக செயல்பட்டு வருவதாக அவரது இன்ஸ்டாகிராமின் முகப்பில் குறிப்பிட்டுள்ளார் 2019இல் இந்த பயிற்சியை தொடங்கிய அவர் தினந்தினம் காலையில் எழுந்து, இதனை தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறார். அவரது பதிவு ஒன்றில்,"உடல் பருமனுடன் இருப்பது தனக்கு தாங்க முடியாத வலியை கொடுத்தது. நிரந்தரமாக உடலை மாற்றுவது ஒரே ஒரு ஆப்ஷனாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: உடல் எடை ஏற்றஇறக்கமாக இருந்துள்ளது
உடல் எடை குறைப்பு குறித்து பதிவு ஒன்றில் அவர்,"2013-2019 ஆகிய ஆண்டுகளில் 22 கிலோ உடல் எடை எனக்கு ஏற்றஇறக்கமாகவே இருந்தது. அதாவது, 6 முறை உடல் எடையை குறைத்தேன், மீண்டும் அதிகரித்தது. கீடோ, லோ கார்ப், சாப்பிடாமல் விரதம் இருப்பது என பல உடல் எடை குறைப்பு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், எனக்கு உடல் எடை மீண்டும் அதிகரித்தது, அவை நிலையான தீர்வை எனக்கு அளிக்கவில்லை" என்கிறார்.
இதனால், அப்போது அவர் ஆரோக்கியமான மனநிலை, ஆரோக்கிய உணவுமுறை ஆகியவற்றை தொடர்ந்து பழக்கப்படுத்திக்கொள்வதன் மூலம் உடல் எடையை நிலையாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
மேலும், அவர் அன்றாடம் கடைபிடித்த ஒரு பழக்கவழக்கம் உடல் எடை குறைப்பில் பெரியளவில் உதவியிருக்கிறது. அதாவது, உடல் எடை குறைப்பு நடவடிக்கையின்போது நீங்கள் காலையில் எவ்வாறு செயல்படுகிறீர்களோ, அதன் அடிப்படையிலேயே உங்களுக்கு பலன் கிடைக்கும் என்கிறார், நிக்.
Weight Loss Journey: எடை குறைப்பில் உதவிய 3 பழக்கங்கள்
நிக் காலையில் எழுந்த உடன் இந்த 3 பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தாராம். அதுவே, அவருக்கு பெரியளவில் கைக்கொடுத்ததாம். தினமும் ஒரே நேரத்தில் எழுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார். அதாவது, இதனை தொடர்ந்து செய்வதால் உடல் ஒரே ரிதமில் தொடரும்.
மேலும், காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீரை அவர் அருந்துவாராம். இதனா இரவு முழுவதும் நீர் இன்றி இருந்த உடல் நீரேற்றத்தை பெற்று, அந்த நாளுக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும். மேலும், காலை எழுந்த உடன் அவர் நடைப்பயிற்சியும் மேற்கொள்வாராம். இதனை தொடர்ந்து செய்து வருவது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் என்கிறார் நிக். இதன்மூலம் அவர் 50 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். அது நிலையாகவும் இருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நிக் ஜியோப்போவின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ