உடல் எடையை குறைக்க... இந்த 4 'குறுக்கு வழிகள்' - ஆரோக்கியம் சிறக்கும்!

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க நான்கு குறுக்கு வழிகள் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி பயிற்றுநரின் கருத்துகளை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 21, 2025, 05:57 PM IST
  • இது உடனடி பலனை தராது.
  • நீண்ட காலம் இதில் செயல்பட வேண்டும்.
  • ஆனால், நிலையான ஆரோக்கியம் உண்டாகும்.
உடல் எடையை குறைக்க... இந்த 4 'குறுக்கு வழிகள்' - ஆரோக்கியம் சிறக்கும்!

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க தற்போது பலரும் இணையத்திலேயே வழித்தேடுகின்றனர். எளிதாக உடல் எடையை குறைக்க என்னென்ன குறுக்குவழிகள் இருக்கின்றன என்பதை தேடுகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி எடுக்கின்றனர்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: நீண்ட கால செயல்பாடே பலன் தரும்...

இருப்பினும் எங்கிருந்து அந்த செயல்முறையை தொடங்குவதற்கு, எப்படி பலனை பெறுவது என பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து பயிற்றுநர் ராஜ் கணபத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் உடல் எடையை எளிமையாக குறைக்கும் வழிமுறையை பகிர்ந்துகொண்டுள்ளார். குறைவான காலத்தில் அதிக உடல் எடையை குறைக்கலாம் என இவர் கூறுவதில்லை. அதற்கு பதில் நீண்டகால செயல்பாடே நிலையான ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்கிறார்.

Weight Loss Journey: 4 குறுக்கு வழிகள்

அந்த வகையில், கடந்த மார்ச் 17ஆம் தேதி ராஜ் அவரது இன்ஸ்டாகிராமில்,"உடல் எடையை குறைத்து உடற்தகுதியுடன் இருக்க இந்த 4 குறுக்குவழிகள் கைக்கொடுக்கும். ஆனால், இவை உடனடி பலனை கொடுக்காது. இதை செய்த ஒரே வாரத்தில் பலன் கிடைக்காது, ஆனால், நீங்கள் நீண்ட கால இலக்கை நோக்கி செயல்பட்டால் சாத்தியமான சிறப்பான பலனை பெறுவீர்கள்... அதற்கு தயாரா?" என அவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அந்த 4 வழிமுறைகளை இங்கு காணலாம்.

Weight Loss Journey: மெதுவாக சாப்பிடவும்

வேகவேகமாக சாப்பிடுவது பெரிய தவறாகும். வேகமாக சாப்பிடுவதால் உங்களது மூளைக்கு வயிறு நிரம்பிய சிக்னலை அனுப்பாமல் குழப்பமடைய செய்யும். இதனால் அதிகமான உணவை உட்கொள்வீர்கள் எனலாம். எனவே, மெதுவாக சாப்பிடும்படி ராஜ் அறிவுறுத்துகிறார். இதனால் செரிமானம் சீராக இருக்கும். இதுவும் உடல் எடை குறைப்பில் பெரியளவில் உதவும் என்கிறார் ராஜ்.

Weight Loss Journey: உடற்பயிற்சியில் இது முக்கியம்

பலரும் வெயிட்டை தூக்குவது, தீவிரமாக செயல்படுவது என தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள். காயமடைந்தால் நீங்கள் சில காலம் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் கூட போகலாம். எனவே, முறையான பயிற்சியை பெற வேண்டும் என்கிறார் ராஜ். கலோரிகளை குறைப்பது, தசைகளை வலுப்படுத்துவது, பலத்தை அதிகரிப்பது ஆகியவற்றை சமநிலையுடன் செய்ய வேண்டும் என்கிறார். 

Weight Loss Journey: சீக்கிரம் தூங்கணும்

விரைவாக தூங்குவது நல்ல பழக்கமாகும். இதனால் முறையான அளவு உடலுக்கு ஓய்வு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயலல்படலாம். உடல் எடையை குறைக்க இந்த பழக்கவழக்கமும் முக்கியமாகும். தூக்கம் சரியாகாவிட்டால் உடற்பயிற்சி செய்வதில் இருந்து, உணவுப்பழக்கம் வரை பல விஷயங்களில் தவறு ஏற்படும். தூக்கம் இல்லாமல் உடலில் ஆற்றலே இல்லாமல் போகும். நீங்கள் நன்கு தூங்கினால் இந்த பிரச்னைகளே வராது என்கிறார் ராஜ். 

Weight Loss Journey: தவறுகளை உற்றுநோக்க வேண்டும்

அனைவருக்கும் தவறுகள் நடப்பது வழக்கம்தான். அதாவது, உடல் எடை குறைப்பில் என்னென்ன தவறுகளை செய்கிறோம் என்பதை உற்றுநோக்கி அதனை திருத்திக்கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

இங்கு ராஜ் கணபத் சொல்வது நிலையான மற்றும் நீண்ட காலத்திற்கான திட்டமிடல் ஆகும். எனவே, உடனடியாக குறுக்குவழிகளில் உடல் எடையை குறைக்க முற்பட வேண்டாம் என்பதை அவர் அழுத்திச் சொல்கிறார்.

(பொறுப்பு துறப்பு: இது ராஜ் கணபத்தின் தனிப்பட்ட அனுபவமாகும். நீங்கள் இதனை பின்பற்றும் முன் தனிப்பட்ட முறையில் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை செய்ய வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | ஜிம்முக்கு போகாத பெண்... 30 கிலோவை 8 மாதங்களில் குறைக்க உதவிய இந்த 13 உணவுகள்

மேலும் படிக்க | 109 கிலோவில் இருந்த பெண்... 33 கிலோ உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News