)
Weight Loss Journey: தர்ன் கவுர் என்ற ஃபிட்னஸ் பயிற்சியாளர் உடல் எடையை குறைப்பு அனுபவத்தை தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவு செய்து வருகிறார்.
Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பதிவு
31 கிலோ உடல் எடையை குறைத்த அவர் தனது பயணத்தில் தான் மேற்கொண்ட உணவுமுறை கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொள்வது மட்டுமின்றி அவரது பாலோயர்களை ஊக்கமளிக்கும் வகையிலும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், மே 8ஆம் தேதி தர்ன் கவுர் இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு பதிவில், அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும் கெட்ட பழக்கவழக்கங்களை கைவிடுதல் குறித்து பேசியிருந்தார். மன உறுதியுடன் செயல்பட்டு அந்த பழக்கங்களை கைவிட்டது மட்டுமின்றி, மாற்றத்தை கொண்டுவர அதிகம் கவனம் செலுத்தியதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Weight Loss Journey: தர்ன் கவுரின் 8 விஷயங்கள்
அந்த வகையில், அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்ளாமல் தடுக்கவும், தனது உடல் சொல்வது கேட்கவும் அவர் கடைபிடித்த 8 விஷயங்கள் குறித்து தர்ன் கௌர் விவரித்துள்ளார். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
1. சிறிய தட்டில் சாப்பிடுவது
இது உண்மையிலேயே அவருக்கு பயன் அளித்ததாம். பெரிய தட்டில் சாப்பிடுவதை தவிர்த்து, ஓப்பிட்டளவில் சிறிய தட்டில் சாப்பிடும் பழக்கத்தை அவர் மேற்கொண்டுள்ளார். தட்டில் போடப்பட்ட சாப்பாட்டு முழுமையாக உண்ண வேண்டும் என்பதே மூளைக்கு அதிகம் தெரியும். அந்த வகையில், குறைந்தளவு மட்டும் தட்டில் உணவை எடுத்துக்கொண்டு, நமக்கு தேவையான உணவை மட்டும் சாப்பிடலாம் என்கிறார். அதாவது, பெரிய தட்டில் அதிக சாப்பாட்டை வைத்து அதை குப்பையில் போட கூடாது என்பதற்காக சாப்பிடுவதை தவிர்க்கவும் இது உதவும் என்கிறார்.
2. அதீத கட்டுப்பாடு தேவையில்லை
மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். நமக்கு பிடித்ததை இப்போது சாப்பிட முடியாது என நினைக்கும்போது தான், அதிக உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும். எனவேதான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இல்லாமல் கொஞ்சம் நிதானமாகவே உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
3. இரவு 7 மணிக்கு பின் சாப்பிடாதீர்கள்
இரவு உணவை விரைவாகவே முடித்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். அதாவது 7 மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சீக்கிரம் தூங்கச் சென்றுவிட்டால் நள்ளிரவில் அதீதமாக பசி எடுக்காது.
4. இரவு சாப்பிட்ட உடன் பல் தேய்த்துவிடுங்கள்
இரவு உணவை விரைவாகவே சாப்பிட்டுவிட்ட பின்னர், உடனடியாக பல் தேய்த்துவிடுங்கள். பல் தேய்த்துவிட்டால் அடுத்து சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் குறைந்துவிடும்.
5. தண்ணீர் முக்கியம்
காலையில் எழுந்த உடன் தண்ணீரை குடித்து அந்த நாளை தொடங்குங்கள். சில நேரங்களில் தண்ணீர் தாகம் எடுக்கும், ஆனால் பசி உணர்வு ஏற்படும். அந்த தருணங்களில் தண்ணீரை குடித்து பாருங்கள். தாகம் அடங்கினால் பசி உணர்வும் அடங்கும். இதனால் அதிக உணவை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.
6. கேள்வி கேளுங்கள்
உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்றோ, வறுத்த பொருள்களை சாப்பிட வேண்டும் என்றோ அடிக்கடி தோன்றினால், ஏன் அப்படி பசி எடுக்கிறது என்பதை யோசியுங்கள், உங்களையே நீங்கள் கேள்வி கேளுங்கள். மன ரீதியான பசி என்பது அவசரப்படுத்தும், உடல் ரீதியான பசி என்பது பொறுமையாகவே ஏறும்.
7. குற்ற உணர்வை கைவிடுங்கள்
எப்போதும் பலரும் நிறைய சாப்பிடுவார்கள். நீங்கள் நிறைய சாப்பிட்டுவிட்டால் குற்ற உணர்ச்சி அடையாதீர்கள். சில நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது இயல்பானதுதான்.
8. ஊட்டச்சத்து முக்கியம்
குறைந்த கலோரிகளுடன், நிறைந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறையும். அதிகம் சாப்பிட மாட்டீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் தர்ன் கவுர் என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ