145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?

Weight Loss Journey: தந்தை இறந்தபோது அவரது உடலை சமாதி குழிக்குள் இறக்க முடியாமல் தவித்த மகன், 7 மாதங்களில் 55 கிலோவை குறைத்துள்ளார். இவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2025, 10:42 AM IST
  • முதலில் இவர் 145 கிலோவில் இருந்துள்ளார்.
  • தற்போது 75 கிலோவில் அவர் உள்ளார்.
  • கொழுப்பு சதவீதத்தையும் பெருமளவில் குறைத்துள்ளார்.
145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?

Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் ஃபிட்னஸ் மாடலான அஸார் ஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசியிருந்தார். 

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: எடையையும், கொழுப்பையும் குறைத்த ஹாசன்

145 கிலோவில் இருந்து 75 கிலோவுக்கு உடல் எடையை குறைத்த அனுபவங்களை குறைத்திருந்தார். உடல் எடையை மட்டுமின்றி உடலில் இருந்து கொழுப்பு சதவீதத்தையும் பெருமளவிற்கு குறைந்ததாக தெரிவித்துள்ளார். உடலின் கொழுப்பு சதவீதத்தை, 55 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைத்துள்ளார்.

Weight Loss Journey: 4 ஆண்டு கால பயிற்சி...

இதற்கு அவர் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டும், உடலை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க | 106 கிலோவில் இருந்த பெண்... ஒரு ஆண்டிலேயே 50 கிலோவை குறைத்தது எப்படி தெரியுமா?

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க நினைத்தது ஏன்?

வாழ்வின் மிகவும் மோசமான காலகட்டத்தில்தான் அவரது உடல் பருமன் குறித்த பிரச்னையையே அசார் ஹாசன் உணர்ந்துள்ளார். அவரது தந்தை இறந்தபோது, அவரது உடலை தூக்கக் கூட இயலாமல் உடல் பருமனால் ஹாசன் அவதிப்பட்டிருக்கிறார். இதுதான் அவருக்கு உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை கொடுத்திருக்கிறது. 

Weight Loss Journey: 7 மாதங்களில் 55 கிலோ குறைப்பு

தந்தையை இழந்த சந்தர்பத்திலும் உடல் எடையை குறைத்துக்காட்டுகிறேன் என உறுதிப்பூண்டு அதை செய்தும் காட்டியிருக்கிறார். 7 மாதங்களில் 55 கிலோ உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி தற்போது சமூக வலைதளங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் அஸார் ஹாசன் பேசியபோது, இடுகாட்டில் அவரது தந்தையின் உடலை கல்லறைக்குள் இறக்கிவைக்க முடியாமல் உடல் பருமனால் சிரமப்பட்டதாகவும், முன்னதாக தந்தையுடன் உடல் எடையை குறைத்துக்காட்டுவதாக சவாலும் விட்டிருந்தாக தெரிவித்தார்.

Weight Loss Journey: அஸார் ஹசானின் உடற்பயிற்சி

ஹாசனின் இந்த உருமாற்றம் பலரையும் ஊக்கப்படுத்தியிருக்கும் நிலையில், அவரது உடற்பயிற்சி திட்டங்களை அறிந்துகொள்வதும் உங்களுக்கு பயனளிக்கலாம். அவரது உடற்பயிற்சி திட்டத்தில் ட்விஸ்டர் ஜம்ப்ஸ், Bird Dog நிலை, மலை ஏற்ற பயிற்சி மற்றும் சைட் க்ரஞ்சஸ் போன்ற பயிற்சிகள் அடங்கும். 

அவரது உடல் எடை மாற்றத்திற்கான பாதையில் அவரது அன்றாட வழக்கத்தில் Strength பயிற்சியை சேர்த்தது, உணவு முறைகளில் மாற்றங்களைச் செய்தது மற்றும் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றியது ஆகியவை முக்கிய பங்கு வகித்தது என்றார். படிப்படியான மற்றும் நிலையான முயற்சிகள் அவரது குறிப்பிடத்தக்க உடல் எடை இழப்பு இலக்குகளை அடைய அவருக்கு உதவியிருக்கிறது எனலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அஸார் ஹாசனின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்திவில்லை)

மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News