23 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 விஷயங்கள்...!

Weight Loss Journey: சுமார் 23 கிலோ உடல் எடையை குறைத்த பெண் ஒருவர், கொழுப்பை சட்டென கரைக்க அவருக்கு உதவிய 3 விஷயங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2025, 08:18 AM IST
  • அவர் இந்த 3 விஷயங்களை பயன்படுத்தி கோடைகாலத்தில் 6 கிலோவை குறைத்தாராம்.
  • கோடைக்காலம் வர இருப்பதால் நாம் பலரும் அதிகம் ஜூஸை உட்கொள்வோம்.
  • ஜென் கோஹன் என்ற இந்த பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படுகிறார்.
23 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்... கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 விஷயங்கள்...!

Weight Loss Journey: உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை குறைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் மீட்டெடுப்பார்கள் எனலாம். காரணம், உடல் பருமன் சிலரை நம்பிக்கை இழக்கச் செய்யும், கடும் மன உளச்சலுக்கு ஆளாக்கும். அப்படியிருக்க உடல் எடை குறைப்பு நிச்சயம் பலருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டும் எனலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 23 கிலோவை குறைத்த ஜென் கோஹன்

உடல் எடை குறைத்தவர்களின் கதைகளையும், அனுபவங்களையும், அவர்களின் அறிவுரைகளையும் கேட்பதும் தெரிந்துகொள்வதும் நிச்சயம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பெரியளவில் உதவலாம். இருப்பினும், உடல் எடை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கும் உங்களது உங்களது மருத்துவ நிபுணரை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

அந்த வகையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையாலும், பழக்கவழக்கங்களை மாற்றியதாலும் உடல்நலனை பேணி சுமார் 23 கிலோ உடல் எடையை குறைத்த ஜென் கோஹன் என்பவரின் அனுபவமும், அறிவுரையும் உங்களின் உடல் எடை குறைப்பு பயணத்தில் கைக்கொடுக்கலாம். இன்ஸ்டாகிராம் தளத்தில் பிரபலமாக அறியப்படும் ஜென் கோஹன் மகளிருக்கான உடல் எடை குறைப்பு பயிற்றுநர் என அவரது பக்கத்தின் முகப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 54 கிலோவை குறைத்த பெண்... குழந்தை பெற்ற பின் உடல் கொழுப்பை கரைத்தது எப்படி?

Weight Loss Journey: கொழுப்பை கரைக்க உதவிய இந்த 3 விஷயங்கள்

அவருக்கு உடல் எடை குறைப்பு பயணத்தில் உதவியை என்னென்ன, உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ் மற்றும் அவரது உடல் எடை குறைப்பின் ஒட்டுமொத்த பயணம் ஆகியவற்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. ஜென் கோஹன் மக்களின் வாழ்க்கைமுறையை சீர்ப்படுத்தி, அவர்கள் எதிர்பார்க்கும் உடல் எடைக்கு அவர்களை கொண்டுசெல் உதவு செய்கிறார் எனலாம்.

இந்நிலையில், ஜென் கோஹன் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் உடல் கொழுப்பை குறைப்பதற்கான மூன்று எளிய வழிமுறைகளை பகிர்ந்திருந்தார். அவர் ஒட்டுமொத்தமாக 23 கிலோவை குறைத்திருந்தாலும், இந்த 3 எளிய வழிமுறைகளை பின்பற்றியே கோடைக்காலத்தில் சுமார் 6 கிலோவை அவர் குறைத்தாராம். அவரது உடல் கொழுப்பை குறைக்க உதவிய 3 வழிமுறைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Weight Loss Journey: புரதச்சத்தில் கவனம் செலுத்துங்கள்

அனைத்து வேளை உணவுகளிலும் புரதச்சத்தை அவர் சேர்த்துக்கொண்டது அவருக்கு பெரியளவுக்கு உதவியதாம். புரதச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிற்றுக்கு நிறைவான உணர்வை தரும். மேலும் தசை இழப்பு போன்ற பிரச்னைகளை தடுத்து, கொழுப்பை கரைக்க வழிவகை செய்யதும்.

மாட்டிறைச்சி, சிக்கன், முட்டை, மீன், டோஃபு என ஒரு வேளை உணவில் 25-30 கிராம் புரதச்சத்து இருக்கும்படி அவர் பார்த்துக்கொள்வாராம். தேவைப்பட்டால் ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடர் கலக்கப்பட்ட ஸ்மூதியை அவர் குடித்து வந்தாராம்.

மேலும் படிக்க | 23 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... PCOS இருந்தும் குறைத்தது எப்படி?

Weight Loss Journey: சம்மரில் அதிகம் ஜூஸ் குடிக்காதீங்க!

தேவையில்லாமல் சாப்பிடும் பழக்கத்தையும், குடிபானங்கள் மூலம் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வதையும் அவர் முற்றிலும் கைவிட்டது பெரியளவில் உதவியதாக ஜென் கோஹன் கூறுகிறார். இனிப்பு நிறைந்த குடிபானங்கள், பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள் உங்கள் வயிற்றுக்கு நிறைவை தராது. இதனால் பசி எடுப்பது போல் இருக்கும், நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடும். 

ஜூஸ், சோடா, காபி ஆகியவற்றுக்கு பதில் மூலிகை தேநீர், கடுங்காபி ஆகியவற்றை அவர் எடுத்துக்கொள்வாராம். முடிந்தவரை தண்ணீர் குடிப்பதும் கைக்கொடுக்கும் என்கிறார். நொறுக்குத்தீனியையும் ஆரோக்கியமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார். அவர் நட்ஸ் மற்றும் அவித்த முட்டையை சாப்பிடுவாராம். மேலும், பசியற்ற நேரங்களில் தேவையில்லாமல் உணவு உண்பதை தவிர்ப்பதும் கைக்கொடுக்கும் என்கிறார். 

Weight Loss Journey: நடைப்பயிற்சி முக்கியம் அமைச்சரே...!

உடல் இயக்கம் முக்கியம் என கூறும் ஜென் கோஹன், நடைப்பயிற்சி உடல் எடை குறைப்புக்கு கைக்கொடுக்கும் என்கிறார். நடைப்பயிற்சியால் அதிக கலோரிகளை கரைக்கலாம். மேலும் அது செரிமானத்திற்கு கைக்கொடுக்கும். உங்களது வளர்ச்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்தும் என்கிறார். ஒருநாளுக்கு குறைந்தபட்சம் 8 ஆயிரம் - 12 ஆயிரம் அடிகள் வரை நடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கொள்ளுங்கள் என்கிறார். 

சாப்பிட்ட பின்னர் ரத்த சர்க்கரை அளவை சீராக்க கொஞ்ச நேரம் நடக்கலாம் என்றும் கூறுகிறார். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் நிச்சயம் அவ்வப்போது எழுந்து நடப்பதும் நல்லது. நடைப்பயிற்சியை தொடங்கிவிட்டால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சம் எடையை தூக்கி பயற்சி மேற்கொள்ளலாம். ஜிம்மில் தசை வளர்ச்சிக்கும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்கிறார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜென் கோஹனின் தனிப்பட்ட பரிந்துரைகள். இதனை நீங்கள் பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 38 கிலோவை பத்தே மாசத்தில் குறைத்த பெண்... அனுபவத்தை படிங்க - நீங்களும் எடையை குறைங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News