Weight Loss Journey: 114 கிலோவில் இருந்த பெண் ஒருவர் 69 கிலோ வரை உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் உதவிய 4 பழக்கங்களை பகிர்ந்துள்ளார்.

Weight Loss Journey: உடல் பருமானால் பாதிக்கப்பட்ட பலரும் தற்போது உடல் எடை குறைப்பை மேற்கொண்டு, அதனை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக அவர்களின் உடல் எடை குறைப்பு பயணத்தை பதிவு செய்யும் வகையிலும் அது இருக்கும்.
Weight Loss Journey: 114 கிலோவில் இருந்த ஜார்ஜினா
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ஜார்ஜினா பெய்லி என்பவர் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து மட்டுமின்றி அவர் எப்படி அவரது புதிய வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறித்தும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் 114 கிலோவில் இருந்திருக்கிறார். அதுவும் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட அவரால் நடக்க முடியாதாம். அந்த கட்டத்தில் இருந்த அவர் 18 மாதங்களில் அவரது பயிற்சியாளர் ஜானியின் உதவியுடன் உடல் எடை குறைத்துள்ளார்.
Weight Loss Journey: 69 கிலோவில் தற்போது ஜார்ஜினா
தற்போது மாரத்தான் ஓடும் ஜார்ஜினா பெய்லி மிகவும் எனர்ஜியாக தென்படுகிறார். மேலும் தற்போது அவர் 69 கிலோவில் நீடிக்கிறார். குறிப்பாக, அதற்கு குறுக்கு வழிகளோ, பார்முலாவோ ஏதும் இல்லை என அவர் கூறுகிறார். மேலும் அவருக்கு மிக மெதுவாக உபயோகமாக இருந்த பழக்கங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில், இயற்கையான முறையில் அவருக்கு உபயோகமாக இருந்த சில பழக்கங்களையும் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
Weight Loss Journey: கொழுப்பை குறைக்க பட்டினி கூடாது...
தொப்பை உள்பட உடலின் கொழுப்பை குறைக்க பட்டினியாக இருப்பதும், குறைவாக சாப்பிடுவதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் ஜார்ஜினாவின் கதை வேறு. அவர் எந்த உணவையும் விட்டுக்கொடுக்கவில்லையாம். அதற்கு பதில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிட்டாராம்.
அதிக கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளான சிக்கனின் நெஞ்சுப் பகுதி, மீன்கள், இறால் ஆகியவற்றை சாப்பிட்டாராம். இது அவருக்கு வயிறு நிறைவை அது கொடுத்திருக்கிறது, தேவையில்லாத கலோரிகளையும் தவிர்த்தாராம். அதாவது, அதிக உணவுகளை சாப்பிட்டாலும் கலோரி அளவை தாண்டால் வயிறுக்கு நிறைவாகவும் உண்டாராம். இதுவே தினமும் கலோரியை பற்றாக்குறையாக வைக்க உதவியதாம்.
Weight Loss Journey: எளிமையான உணவை உண்ணுங்கள்...
அதிக மதிப்புள்ள உணவுகளையோ, புரோட்டின் பவுடர்களையோ சாப்பிட்டு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜார்ஜினா இந்த உணவுகளை தவிர்த்து எளிமையான உணவுகளை சாப்பிடுவாராம். அதாவது எளிமையான இறால் பிரைட் ரைஸை செய்வது எப்படி என்பதையும் அவர் இன்ஸ்டாகிராமில் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதில் 512 கலோரிகளில் 28 கிராம் புரதம் உள்ளது.
குறிப்பாக சாதம், பட்டாணி, இறால், சோய் சாஸ், மிஸோ சாஸ் ஆகியவற்றை வைத்து 10 நிமிடங்களில் இதை செய்துவிடுவாராம். இது கொழுப்பை குறைக்க அதிகம் உதவியதாம். கொழுப்பை குறைக்கும்போது உடலில் தசை வளர்ச்சி அடைய புரதச்சத்து தேவை. இந்த உணவுகள் உடலுக்கும் நல்லது, சுவையும் இருக்கும். சமமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்று பசியை ஆற்றவும் செய்யும், கொழுப்பை குறைக்கவும் உதவும். அந்த வகையில் உங்களுக்கு தெரிந்த பொருள்களை கொண்டு வீட்டில் சமைத்த உணவுகளையே அதிகம் சாப்பிடுங்கள் என்கிறார் அவர்.
Weight Loss Journey: தொடர்ச்சியாக செயல்படுவதே முக்கியம்
தீவிரமாக ஜிம்மில் பயிற்சி செய்வதும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் ஜார்ஜினாவின் பழக்கமில்லையாம். இவரால் முதலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கூட ஓட முடியாத போது, அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் செயல்பட்டு அவரது Stamina-வை அதிகப்படுத்தி உள்ளார். இதன்மூலம் தற்போது அவர் அதிக தூரம் ஓடும் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்கிறாராம். அதாவது தீவிரமாக செயல்படுவதை தவிர தொடர்ச்சியாக செயல்படுவதன் முக்கியத்துவத்தை இது காட்டுவதாக கூறுகிறார். இவை வளர்ச்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது என்கிறார்.
Weight Loss Journey: உடல் எடை குறைப்பு பயணத்தை காதலியுங்கள்
அதாவது இந்த 18 மாதங்களில் அவர் உடல் எடையை குறைத்ததில் அவர் மகிழவில்லை, உடற்தகுதியுடன் ஆரோக்கியமாக இருப்பதிலேயே அவர் மகிழ்ச்சி அடைந்தேன் என்கிறார். அதாவது அவரின் செயல்பாடுகளால் அவரது வாழ்க்கைமுறை இவ்வளவு ஆரோக்கியமாக மாறும் என அவர் நம்பவே இல்லையாம். அழுத்தமாகவோ, தண்டனையாகவோ பார்த்தால் உடல் எடை குறையாது. ஆனால், ஆரோக்கியமாக சாப்பிடுவதையும், உடல் இயக்கத்தையும் இயல்பான வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிவிட்டால் உடல் எடை குறைப்பு எளிமை என்கிறார் ஜார்ஜினா.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜார்ஜினா பெய்லியின் உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இவரின் அனுபவத்தை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ