49 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய 5 பழக்கவழக்கங்கள்!

Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள பெண் ஒருவர் 49 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய 5 பழக்கவழக்கங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 1, 2025, 03:35 PM IST
  • 2600க்கும் மேற்பட்ட பதிவுகளை அவர் போட்டுள்ளார்.
  • அவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.
  • உடல் எடையை குறைக்க அவர் 5 பழக்கவழக்கங்களை பின்பற்றி உள்ளார்.
49 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய 5 பழக்கவழக்கங்கள்!

Weight Loss Journey: ஜினா என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் அவரது உடல் எடை குறைப்பு குறித்து தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வருகிறார். அவர் இதுவரை இன்ஸ்டாகிராமில் 2600க்கும் மேற்பட்ட பதிவுகளை போட்டுள்ள நிலையில் அவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 49 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்

ஜினா வெற்றிகரமாக 49 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அவர் உடல் எடை குறைப்பு பயணத்தில் மேற்கொண்ட உணவுப்பழக்கவழக்கம், உடற்பயிற்சிகள் ஆகியவை குறித்து பதிவிட்டு அவரது பாலோயர்களையும் உடல் எடை குறைப்புக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் ஊக்கப்படுத்தி வருகிறார். ஜினா கடந்த ஜூன் 15ஆம் தேதி போட்ட பதிவில அவரது உடல் கொழுப்பு குறைய அவருக்கு உதவிகரமாக இருந்த 5 பழக்கவழக்கங்களை குறிப்பிட்டுள்ளார். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.ட

Weight Loss Journey: புரதச்சத்தில் கவனம்

இவரை ஒருநாளுக்கு மூன்று முறை தலா 30 கிராம் புரதச்சத்தை உட்கொண்டுள்ளார். புரதச்சத்தை எடுத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி உள்ளார். புரதச்சத்தை குறைவாக எடுத்துக்கொண்டாலோ, எடுத்துக்கொள்ளாவிட்டாலோ உடல் எடையை குறைப்பது சாத்தியமில்லை என்கிறார். எனவே, உணவை சாப்பிடுங்கள், அதில் புரதச்சத்து இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள், சாப்பிடாமல் மட்டும் இருக்காதீர்கள். உடல் எடை குறைப்பு, தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து மிக முக்கியம். 

Weight Loss Journey: அதிகாலையில் எழுந்திருப்பது முக்கியம்

இவர் எப்போதும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வைத்துள்ளார். அதிகாலை 5 - 5.30 மணிக்கு எழுந்து, நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சியை டிரெட்மில்லில் மேற்கொள்வாராம். அதிகாலையில் இதை தினமும் செய்து வந்துள்ளார். அந்த நேரத்தில் உடலை சற்று நேரம் இயக்குங்கள். 

Weight Loss Journey: பளு தூக்குங்கள்

உடல் எடையை குறைப்பதில் தசை வளர்ச்சி முக்கியம். அதில் பளு தூக்குதலே அதிகம் உதவும். உடல் கட்டுக்கோப்பாக காட்சியளிக்க பளு தூக்குதலும் அவசியம். வாரத்திற்கு மூன்று முறையாவது பளு தூக்க வேண்டும். மிக குறைந்த எடையில் ஆரம்பித்து தொடர்ச்சியாக செய்து வந்து அதன்பின் மொத்த உடலுக்கும் பயிற்சி எடுங்கள். 

Weight Loss Journey: நடப்பதும், தண்ணீர் குடிப்பதும்...

தினமும் போதுமான அளவிற்கு தண்மீர் குடிக்க வேண்டும் என நினைத்துக்கொள்ளுங்கள். தினமும் 10K ஸ்டெப்ஸ் நடக்கவும் திட்டமிடுங்கள். எங்கு போனாலும் நடந்தே போக முயற்சியுங்கள். தினமும் நடப்பதை உறுதிசெய்யுங்கள். 

Weight Loss Journey: தூக்கம்

தினமும் 8-9 மணிநேரம் இரவு நேரத்தில் தூஹ்க வேண்டும். மொபைல், லேப்டாப், தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு சீக்கிரம் தூங்கச் சென்று, வெகுச் சீக்கிரமாகவே எழுந்துவிடுங்கள். நன்றாக தூங்குவதுதான் முக்கியம், கொழுப்பை கரைக்கவும், தசையை வளர்க்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்றாக தூங்க வேண்டும் என்கிறார். 

ஜினா இந்த 5 பழக்கங்களை தொடர்ச்சியாக பின்பற்றியதன் விளைவாகவே 49 கிலோவை வரை உடல் எடையை குறைத்ததாக கூறுகிறார். இதனால் உடல் மட்டுமின்றி மனமும் ஆரோக்கியமடையும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜினாவின் உடல் எடை குறைப்பு அனுபவங்கள். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறவும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொல்லும் 20 டிப்ஸ்!

மேலும் படிக்க | ஜிம்முக்கு போகாமல் 35 Kg-ஐ குறைத்த நபர்... கொழுப்பை கரைக்க அவர் குடித்த 7 பானங்கள்

மேலும் படிக்க | 'சாப்பிட்ட பிறகு..' இந்த ஒரு விஷயத்தைச் செய்யாவிட்டால்.. தொப்பை கொழுப்பைக் குறைப்பது ரொம்ப கஷ்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News