Instagram Influencer Gurishq Kaur Weight Loss Tips : உடல் எடையை குறைப்பது என்பது அனைவராலும் செய்து விடக்கூடிய காரியம் கிடையாது. இதை செய்வதற்கு கண்டிப்பாக மன உறுதியும் உடல் உறுதியும் இருக்க வேண்டும். இதற்கு உடற்பயிற்சியுடன் சேர்ந்து, டயட் இருப்பதும் மிகவும் அவசியமாகும்.
சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் உடன் இருக்கும் இன்ஸ்டா பிரபலம், கௌரிஷ்க் கவுர். கனடாவை சேர்ந்த இந்திய பெண்ணான இவர், ஒரு வருடத்தில் தனது விடாமுயற்சியால் 40 கிலோ வரை குறைத்திருப்பதாக கூறியிருக்கிறார். அவர், தனக்கு உதவிய ஒரு வர்க்-அவுட் குறித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Weight Loss Joruney | ஒரு வருடத்தில் 40 கிலோ குறைந்த பெண்:
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்தப் பெண், தனது உடல் எடையை குறைத்தார் என்பதை இங்கு தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். தன்னிடம் பலரும், “எப்படி இவ்வளவு எளிதாக, விரைவாக உடல் எடையை குறைத்தீர்கள்?” என்று பலர் கேட்டு வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் தான் ஒரே நாளில் மேஜிக் போல உடல் எடையை குறைக்கவில்லை என்றும் இதற்கு, எட்டு மாதங்கள் ஆனதாகவும் கூறியிருக்கிறார்.
பொதுவாகவே உடல் எடையை குறைத்தவர்களை கேட்டால் அவர்கள், வெயிட் லாஸ் செய்வதற்காக பல டயட் இருந்ததாக கூறுவர். அதேபோல, அதிக தீவிர உடற்பயிற்சி செய்ததாகவும் கூறுவர். ஆனால் இந்தப் பெண் கொஞ்சம் வித்தியாசமான ஃபார்முலாவை சொல்கிறார். இவர், உடலுக்கு நன்றாக வேலை கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும் என்றும் கூறுகிறார்.
Weight Loss Tips | உதவி செய்த ஒரே ஒரு வொர்க் அவுட்:
கௌரிஷ்க் கவுருக்கு, உடல் எடையை குறைக்க உதவியிருக்கும் ஒரே ஒரு வர்க்-அவுட், எளிதான கார்டியோ உடற்பயிற்சியான ரன்னிங் என்று கூறியிருக்கிறார். அவரை பொருத்தவரை, வேகமான நடைப்பயிற்சியும், ரன்னிங்கும்தான் தன் உடல் எடையை குறைக்க உதவியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் முதலில் தினமும் 20 நிமிடம் நடக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு ஒரு நாளைக்கு 20 கி.மீ வரை ரன்னிங் சென்றதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆரம்பத்தில், தனக்கு 20 நிமிடம் நடந்தததே கொஞ்சம் கடினமாக இருந்ததாக கூறியிருக்கும் அவர், அதன் பிறகு பொருமையாக அது தனக்கு பழகியதாக கூறியிருக்கிறார். இப்படியே அதனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, ஒரு நாளைக்கு 10 கி.மீ வரை நடந்திருக்கிறார். தனக்கு நல்ல மன நிலை இருந்தால் அதனை 15-18 கி.மீ ஆக கூட அவர் உயர்த்துவாராம்.
Weight Loss Workout | ரன்னிங்:
நடைப்பயிற்சிக்கு பிறகு உடல் எடையை குறைக்க அவருக்கு ரன்னிங் உதவியதாக குறிப்பிட்டிருக்கிறார். இது, தனது உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் நிம்மதியை கொடுத்ததாக கூறியிருக்கிறார். தினமும் ரன்னிங் உடற்பயிற்சியை செய்யும் இவர், அதனுடன் பிறகு ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங்கையும் சேர்த்திருக்கிறார். அதனை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை செய்திருக்கிறார்.
அதே போல, பிற நாட்களை போல தன்னால் அனைத்து நாட்களிலும் செய்ய முடிந்ததில்லை என்று கூறும் இவர், தன்னால் எவ்வளவு முடிகிறதோ அதை மட்டும் அந்த நாட்களில் செய்வாராம். தன்னை போல உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர் கூறுவது, இதற்கான முயற்சியை மட்டும் எடுக்க வேண்டும் என்பதும், அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதும்தான்.
Weight Loss Diet | டயட்:
கவுர், தனது உடலுக்கு ஏற்ற டயட்டும் இருந்திருக்கிறார். கேரட், கடோஃபு, பழ சேலட், அதிக புரதம் நிறைந்த பொருட்கள் இவரது டயட்டில் பேரங்கமாய் இருந்துள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 2 வாரத்தில் எடை குறைக்க உதவும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் வலுவான தசை வரை... புரதச்சத்தை அள்ளி வழங்கும் சூப்பர் சைவ உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









