Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், மிக எளிமையான பயிற்சியும், தொடர்ச்சியான முயற்சியும் இருந்தால் நிதானமாகவே உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவும் PCOS போன்ற பிரச்னைகளுடன் உடல் எடையை குறைப்பது என்பது சற்று கடினமான ஒன்றுதான்.
Weight Loss Journey: PCOS உடன் 54 கிலோவை குறைத்த பெண்
அந்த வகையில், PCOS உடல் எடை குறைப்பு பயிற்றுநரான ஹீதர் (Heather) என்ற இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பெண்மணியின் தான் 54 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்ற அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்ட வருகிறார். அந்த வகையில், PCOS இருக்கும் பெண்கள் உடல் எடையை குறைக்கும் அதிகம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த தவறுகள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை தவிர்த்தால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும்.
Weight Loss Journey: ஹீதர் செய்த தவறுகள்
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"நான் செய்த தவறுகள் மூலம் எனக்கு பயனளிக்கும் வழியை நான் கண்டடைந்தேன். ஒரு வருடத்தில் நான் 40 கிலோவை குறைத்தேன். எனது கதையை இங்கு பகிர்ந்துகொள்வதன் மூலம் உங்களுக்கும், உங்களின் PCOS பிரச்னைகளுக்கும் எது கைக்கொடுக்கும் என்பதை நீங்களும் கண்டறியலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: குளூட்டன் மற்றும் பால் பொருள்களை தவிர்த்தல்
மேலும்,"நான் 100% குளூட்டன் உணவுகள் மற்றும் பால் பொருள்களை முற்றிலும் தவிர்த்தேன். அதன்பின் புரோட்டீன் ஷேக்கை குடிக்கத் தொடங்கினேன். PCOS பிரச்னைக்கு புரதச்சத்து மிகவும் நல்லது என கேள்விப்பட்டேன். அந்த ஷேக்கில் பால் இருக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனென்றால் அது குளிர்சாதன பிரவில் இருக்கவில்லை. பால் இருக்கும் பொருள் எப்படி குளிராக இல்லாமல் இருக்கும்...? உடல் எடையை பெரியளவில் குறையவில்லை, நானும் சிறப்பாக உணரவில்லை.
நான் பால் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்வதால் நான் இன்னும் மோசமாக உணர்ந்தேன். சளி மோசமானது, எனது வயிறும் மோசமானது. மிகவும் கொடூரமாக இருந்தது. தினமும் 1,200 கலோரிகளை எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரித்தது. எனக்குள் ஏதோ தவறாக இருப்பதை நான் உணர்ந்தேன்.
Weight Loss Journey: உடற்பயிற்சிகளில் செய்த தவறுகள்
1,200 கலோரிகள் சாப்பிட்டு எடை அதிகரித்தேன் என்று கூறுவதை எனது நண்பர்கள் முட்டாள்தனம் என கூறினர். அப்படியெல்லாம் உடல் எடை அதிகரிக்காது என்றனர். நான் குளூட்டன் உணவுகள் மற்றும் பால் பொருட்களை 80-90% தவிர்த்து வருகிறேன் என நினைத்து வந்தேன். ஆனால் உண்மையில், நான் சுமார் 50-60% மட்டுமே குளூட்டன் மற்றும் பால் பொருள்களை தவிர்த்துள்ளேன். எனது சாலட்களில் குளூட்டன் சிப்ஸ் மற்றும் சீஸ்கள் இருந்தன. இன்சுலின் எதிர்ப்புக்கு அதிக எடைகளை வைத்து உடற்பயிற்சிகளை சிறந்ததாக இருந்திருக்கும். ஆனால், நான் குறைந்த எடையுடன் கூடிய கார்டியோ உடற்பயிற்சியிலேயே நான் அதிக கவனம் செலுத்தினேன்.
மேலும், வெளிப்புறங்களில் நான் நடைப்பயிற்சி செய்ததால் கடுமையாக சோர்வுற்றேன். வைப்பிரேஷன் பிளேட் குறித்து எனக்கு முன்னரே தெரியவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்கு மூட்டுப்பகுதிகளில் வெப்பம் காரணமாக சோர்வு ஏற்பட்டது. அது என் ஆஸ்துமாவுக்கும் பிரச்னையாக இருந்தது. இறுதியில் நான் நடைப்பயிற்சியை முழுவதுமாகச் செய்யாமல் போய்விட்டேன்.
Weight Loss Journey: குழந்தை பெற்ற பின்னரும் உடல் எடை இழப்பு
இந்த தவறுகள் அனைத்தில் இருந்து கற்றுக்கொண்டு கடைசியாக, குழந்தை பெற்று 18 மாதங்களுக்கு உடல் எடையை குறைத்தேன். நான் 100% குளூட்டன் இல்லாமலும், பால் பொருள்களை தவிர்த்தும் உடல் எடையை குறைத்தேன். மாதங்களில் நான் 15 கிலோ உடல் எடையை குறைத்தேன். முழுவதுமாக சுமார் 54 கிலோவை குறைத்தேன்" என பேசியிருந்தார். மேலும், PCOS பிரச்னை இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க தனது பக்கத்தை தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஹீதரின் தனிப்பட்ட முயற்சிகள், பயிற்சிகள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | 23 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... PCOS இருந்தும் குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | 36 வயதில் 37 கிலோவை குறைத்த பெண்; கொழுப்பை கரைக்க செய்தவை என்ன?
மேலும் படிக்க | 105 கிலோவில் இருந்த 19 வயது பெண்... 52 கிலோ உடல் எடையை குறைக்க உதவியவை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









