Weight Loss Journey: உடல் எடை குறைப்புக்கு உணவுக் கட்டுப்பாட்டு, தினமும் உட்கொள்ளும் கலோரியை கணக்கிடுவது, அதற்கேற்ப தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுதல் அவசியமாகும். ஆனால், உடல் எடையை குறைக்க அனைவருக்கும் ஒற்றை ஃபார்முலா என ஒன்று கிடையாது.
ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைமுறையும் வித்தியாசமாக இருக்கும் என்பதால் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்று உடல் எடை குறைப்பை மேற்கொள்ளலாம்.
Weight Loss Journey: உடல் எடையை குறைக்கும் 7 பானங்கள்
அப்படியிருக்க, ஜிதின் வி. சுரேஷ் என்பவரும் அவரது உடல்வாகுக்கு ஏற்றவாறு உடல் எடை குறைப்பு பயணத்தை மேற்கொண்டார். அவர் ஜிம்முக்குச் செல்லாமலேயே 35 கிலோவை குறைத்துள்ளார். சரியான ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை குறைப்பு வழிமுறைகளை மேற்கொண்டு இந்த இலக்கை அடைந்துள்ளார்.
கடந்த ஜூன் 25ஆம் தேதி, ஜிதின் உடல் எடை குறைப்புக்கான பானங்கள் குறித்து சில ரெசிபிக்களை பகிர்ந்துள்ளார். இந்த 7 பானங்களை குடிப்பதன் மூலம் உடல் எடை குறைப்பை வேகப்படுத்தும் எனலாம். அவர் பகிர்ந்த அந்த 7 பானங்களை இங்கு காணலாம்.
Weight Loss Journey: இலவங்கப்பட்டை உடன் கிரீன் டீ
1 கிரீன் டீ பேக்கை எடுத்துக்கொள்ளுங்கள், 1 டீஸ்பூன் இலவங்கத் தூளை எடுத்துக்கொள்ளவும் அல்லது 1 இலவங்கப்பட்டையை எடுத்துக்கொள்ளவும். அரை கப் சுடுதண்ணீர். சுடுதண்ணீரில் கிரீன் டீ பேக்கையும், இலவங்கப்பட்டையையும் 5-7 நிமிடங்கள் ஊறவைக்கவும். இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும்.
Weight Loss Journey: திரிபலா கொழுப்பு நீக்கும் பானம்
1 டீஸ்பூன் திரிபலா தூள் மற்றும் 1 கப் சுடுதண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். சுடுதண்ணீரில் இந்த திரிபலா தூளை கலந்து அதை அப்படியே வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உடலில் உள்ள நச்சை வெளியேற்றும். வளர்சிதை மாற்றத்தையும் ஊக்கவிக்கும்.
Weight Loss Journey: புதினா லெமன் ஜூஸ்
1 கிரீன் டீ பேக் அல்லது 1 டீஸ்பூன் கிரீன் டீ தூளை எடுத்துக்கொள்ளவும், 5-6 புதினா இலைகள், அரை எலுமிச்சை பழத்தின் ஜூஸ், அரை கப் தண்ணீர். அது குளிர்ந்த நீராகவும் இருக்கலாம், சுடுதண்ணீராகவும் இருக்கலாம். தேயிலையை நன்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் புதினா இலைகளை தூவி நன்கு ஆறவைக்கவும். அதில் எலுமிச்சை சாறை பிழிந்துவிடவும். அதன்பின் அருந்தலாம். இது வயிற்றில் உப்புசம் ஏற்படாமல் தடுக்கும். வளர்சிதை மாற்றத்தை வேகமெடுக்க வைக்கும்.
Weight Loss Journey: வெந்தய நீர்
1 டீஸ்பூன் வெந்தயம், 1 கப் தண்ணீர். வெந்தயத்தை இரவு முழுவவதும் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கவும். இது பசியை கட்டுகோப்பாக வைக்கவும். வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கொழுப்பை கரைக்க உதவும்.
Weight Loss Journey: இஞ்சி எலுமிச்சை சாறு
1 இன்ச் அளவிற்கு இஞ்சியை எடுத்துக்கொள்ளவும். அரை எலுமிச்சை பழத்தின் ஜூஸ். ஒன்று அல்லது ஒன்றரை கப் சுடுதண்ணீர் எடுத்துக்கொள்ளவும். 5-10 நிமிடங்களுக்கு சுடுதண்ணீரில் இஞ்சியை கொதிக்கவிட்டு, அதனை வடிகட்டு, எலுமிச்சை சாறை பிழிந்துவிடவும். அதன்பின் அருந்தலாம். இது செரிமானத்தை சீராக்கும். இயற்கையாக கொழுப்பு கரைய உதவும்.
Weight Loss Journey: ஆப்பிள் சைடர் வினிகர் டீடாக்ஸ்
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர், அரை எலுமிச்சை பழத்தின் சாறு, சிறிதளவு இலவங்கம், ஒரு கப் சுடுதண்ணீர். மேலே சொன்ன அனைத்தையும் சுடுதண்ணீரில் கலந்து அதை குடிக்கவும். ஆனால் சாப்பாட்டுக்கு முன்னால் குடிக்கவும். இது பசியை கட்டுப்படுத்த உதவும். மேலும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
Weight Loss Journey: ஜீரக தண்ணீர்
1 டீஸ்பூண் ஜீரகம், 1 கப் தண்ணீர். ஜீரகத்தை இரவு முழுவதும் ஊறவைக்கவும். அல்லது தண்ணீரில் ஜீரகத்தை 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன்பின் அதை வடிகட்டு, சூடாக அதை குடிக்கவும். செரிமானம் சீராகும். தொப்பை கொழுப்பும் கரையும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜிதின் என்பவரின் உடல் எடை குறைப்பு அனுபவம் எனலாம். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்த லாஸ்லியா-உதவிய ஒரு பழம்! நீங்களும் சாப்பிட்டு பாருங்க..
மேலும் படிக்க | கொழுப்பை கடகடவென குறைக்கும் 10 நிமிட உடற்பயிற்சி! ஈசியா தினமும் செய்யலாம்..
மேலும் படிக்க | 40 கிலோவை 8 மாதங்களில் குறைத்த நபர்... கொழுப்பை கரைக்க அவர் செய்தவை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









