106 கிலோவில் இருந்த பெண்... ஒரு ஆண்டிலேயே 50 கிலோவை குறைத்தது எப்படி தெரியுமா?

Weight Loss Journey: 106 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலமான ஒரு பெண் ஒரு ஆண்டில் 50 கிலோவை குறைத்து அசத்தியிருக்கிறார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2025, 01:58 PM IST
  • வீட்டில் உணவு சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
  • தொடர்ச்சியாக உடற்பயிற்சியும் செய்து வருவாராம்.
  • அதன்படி, 50 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
106 கிலோவில் இருந்த பெண்... ஒரு ஆண்டிலேயே 50 கிலோவை குறைத்தது எப்படி தெரியுமா?

Weight Loss Journey: உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலரும் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுவதை சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது குறித்தும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது குறித்தும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வெளிப்படுத்துவார்கள்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: அனுபவங்களை பகிரும் இன்ஸ்டா பிரபலங்கள்

அதுமட்டுமின்றி, பலரும் உடல் எடையை குறைத்த பின்னனர் தங்களின் அனுபவத்தையும், அறிவுரைகளையும் வழங்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், எக்கச்சக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் உடல் எடை குறைப்பு குறித்த வீடியோக்கள், புகைப்படங்களை அனுதினமும் பதிவிட்டு வருகின்றனர் எனலாம்.

Weight Loss Journey: 106 கிலோவில் இருந்த காஜல்  

அந்த லிஸ்டில், 21 வயதான காஜலையும் சேர்த்துக்கொள்ளலாம். உத்தர பிரதேசத்தின் ராம்பூரை சேர்ந்த இவரின் உடல் எடை குறைப்பு அனுபவம் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவியது. காஜல் 106 கிலோவில் இருந்து ஒரு ஆண்டில் 50 கிலோவை குறைத்து அசத்தியிருக்கிறார். தனது வாழ்க்கைமுறை மற்றும் பழக்கவழக்கங்களில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்ததாலேயே உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும், உடல் பருமானால் தனது தன்னம்பிக்கையே வற்றிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

Weight Loss Journey: 50 கிலோவை குறைத்தது எப்படி?

தொடர்ச்சியான முயற்சியாலும், கடின உழைப்பாலும் இவர் உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்வுக்கும் திரும்பியிருக்கிறார். இவரது வைரல் வீடியோ ஒன்றில், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி ஆரோக்கியமான மற்றும் ருசியான வீட்டில் சமைத்த உணவை உட்கொண்டே உடல் எடையை குறைத்தாக கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியான உடற்பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

Weight Loss Journey: குறைந்த கலோரிகளை உட்கொள்ள 5 டிப்ஸ் 

காஜல் அவரது மற்றொரு வீடியோ ஒன்றில், உடல் எடை குறைப்பு பயணத்தில் குறைவான கலோரியை உட்கொள்ள அவருக்கு உதவிய 5 டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார். அந்த 5 டிப்ஸ்களை இங்கு ஒவ்வொன்றாக காணலாம். 

- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை முடிந்தளவு அதிகமாக சாப்பிடுங்கள். நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும். 

- தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும். 

- உடலுக்கு தேவையான போதுமான புரதச்சத்தை உட்கொள்ள வேண்டும். 

- சர்க்கரையை முழுமையாக நிறுத்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், பிஸ்கட்கள் போன்றவற்றையும் தவிர்க்கவும்.

- தினமும் 3-4 லிட்டர் தண்ணீரை குடியுங்கள். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் காஜலின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!

மேலும் படிக்க | 180 கிலோவில் இருந்து... 97 கிலோவை குறைந்த இன்ஸ்டா பிரபலம் - 'நோ' குறுக்கு வழி!

மேலும் படிக்க | எடையை குறைக்க 4 விஷயங்கள் முக்கியம் - ஆனந்த் அம்பானியின் பயிற்சியாளர் சொல்லும் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News