Weight Loss Journey: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த லியா என்ற பெண்மணி, மூன்றாண்டுகள் கடின உழைப்பால் சுமார் 180 கிலோவில் இருந்து 83 கிலோ உடல் எடைக்கு வந்துள்ளார். அதாவது, 36 மாதங்களில் சுமார் 97 கிலோவை ஆரோக்கியமான வழியில் குறைத்திருக்கிறார்.
Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலம் லியா
தற்போது இன்ஸ்டகிராமில் பிரபலமாக அறியப்படும் லியா, உடல் எடை குறைப்பு பயணத்தில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக உடல் பருமனால் பாதிக்கப்பட்ட தனக்கு உடல் எடையை குறைக்க ஊக்கமளித்தது எது?, தொடர்ச்சியாக ஊக்கம் அலித்து வந்தது எது? என்பது குறித்து அவர் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தார்.
Weight Loss Journey: லியாவின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்
அந்த வகையில, அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று வைரலாகி, சுமார் 1.5 கோடி பார்வைகளை பெற்றது. 2022ஆம் ஆண்டில் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போடும் சம்பவம் ஒன்று நடந்ததாகவும், அதன் பின்னர் தனது வாழ்க்கை முறையை மொத்தமாக மாற்றிவிட்டதாகவும் அதில் கூறியிருந்தார்.
லியா தனது தங்கை மற்றும் உறவினர்களுடன் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஸ்னிலேண்ட் எனப்படும் மிகவும் சொகுசு வசதிகள் நிறைந்த கேளிக்கைப் பூங்காவுக்கு சென்றிருக்கிறார். ஆனால், அவரது உடல் பருமானால் டிஸ்னிலேண்டை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போயுள்ளது. அங்குள்ளவற்றை அனுபவிக்க இயலாமல் அவர் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டிய சூழலுக்கு ஏற்பட்டுள்ளது. இது அவருக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தனது உறவினர்களுடன் சேர்ந்து அந்த டிஸ்னிலேண்டில் மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லையே என அவர் வருந்தி உள்ளார். இதையடுத்த அவர் உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார்.
Weight Loss Journey: நினைத்ததை செய்ய வேண்டும்
உடல் எடையை குறைக்க உறுதிப்பூண்ட லியா மேலும் கூறுகையில்,"நான் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என நினைத்தேன், எனது உடலால் இதை செய்ய முடியுமா, முடியாதா என்பதை யோசிக்காமல் எனது மனதுக்கு பிடித்தத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என விரும்பினேன். கடந்த மூன்றாண்டுகளில், நான் எதுவெல்லாம் சாத்தியமே இல்லை என நினைத்து வந்தேனோ அவை அனைத்தும் தற்போது சாத்தியமாகி இருக்கிறது" என்கிறார்.
Weight Loss Journey: குறுக்கு வழிகளை தவிர்த்த லியா
முதலில் அவர் உடல் எடையை வேகமாக குறைக்க சில பல வழிகளை நாடி உள்ளார், ஆனால் அவை கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து தனது சிந்தனையை மாற்றிக்கொண்ட அவர் எடையை குறைப்பதை விட ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது என கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார். அது அவருக்கு பயனளித்துள்ளது. லியா அவரது உணவுப் பழக்கத்தை மாற்றியுள்ளார், உடற்பயிற்சியும் தொடர்ச்சியாக செய்துள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் லியாவின் தனிப்பட்ட அனுபவங்களாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 75 கிலோவை குறைத்த நபர்... காலை, மதியம், இரவு அவர் சாப்பிட்டவை தெரியுமா?
மேலும் படிக்க | Weight Loss: 72 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... அவர் செய்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









