2 வாரத்தில் எடை குறைந்த பெண்! அவர் செய்த ஜப்பானிய உடற்பயிற்சிகள்..என்ன தெரியுமா?

Mansi Grover Weight Loss Japanese Workout : ஒரு பெண், ஜப்பானிய உடற்பயிற்சிகளை செய்து தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 8, 2026, 07:06 PM IST
  • இடுப்பை ஒல்லியாக்கிய பெண்
  • உதவிய ஜப்பானிய உடற்பயிற்சி
  • முழு விவரம்!
2 வாரத்தில் எடை குறைந்த பெண்! அவர் செய்த ஜப்பானிய உடற்பயிற்சிகள்..என்ன தெரியுமா?

Mansi Grover Weight Loss Japanese Workout : மக்கள் மத்தியில் இருக்கும் தீரா தாகம், எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்பதுதான். இன்ஸ்டாகிராமில் இருக்கும பிரபலங்கள் பலரும் கூட, தங்கள் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து அவ்வப்போது தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி, ஒரு பெண் தான் உடல் எடையை ஜப்பானிய உடற்பயிற்சிகளை வைத்து குறைத்ததாக கூறியிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

உடல் எடை குறைந்த பெண்..

இன்ஸ்டாவில் மான்சி குரோவர் என்கிற பெண் உடல் எடை குறைப்புப் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாகி வருகிறார். 38 வயதாகும் இவர், 5 மாதங்களில் 14 கிலோ குறைத்தவராக இருக்கிறார். இதனை, எந்த க்ராஷ் டயட்டும் இல்லாமல், ஜிம்மிற்கு போகாமல் செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இப்படி உடல் எடை குறைப்பதை, நாம் சிம்பிளான உணவுகள் மட்டும் வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகளை வைத்தே செய்யலாம் என்கிறார். அவர்தான், தனது இடுப்பை ஒல்லியாக்கிய ஜப்பானிய உடற்பயிற்சி குறித்தும் பதிவிட்டிருக்கிறார்.

பதிவிட்ட வீடியோ..

மான்சி பதிவிட்ட இந்த வீடியோவின் கேப்ஷனில்தான் முக்கிய விஷயமே அடங்கியிருக்கிறது. தன் பெரிய இடுப்பை 2 வாரங்களுக்குள் குறைக்க இந்த உடற்பயிற்சிகள் உதவியதாக கூறியிருக்கிறார். 

செய்தவை vs செய்யாதவை:

Crunches, Running, பல மணி நேர work out உள்ளிட்டவற்றை தான் செய்யவில்லை என கூறும் மான்சி, தான் இதற்கு என்ன செய்தேன் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.

தான், Japanese Standing Core உடற்பயிற்சியை தனது டெயிலி ரொட்டீனில் சேர்த்துக்கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். 

இந்தப் பயிற்சி இதற்குக் காரணமாக சிலவற்றை அவர் குறிப்பிட்டிருக்கிறார்: 
• ஆழமான மைய தசைகளைச் செயல்படுத்துகிறது
• தோரணையை (Postures) மேம்படுத்துகிறது (இது உடனடியாக இடுப்பை சிறியதாகக் காட்டுகிறது)
• வீக்கம் மற்றும் நீர் தேக்கத்தைக் குறைக்கிறது
மூட்டுகள் அல்லது ஹார்மோன்களை அழுத்தாமல் இடுப்பைப் பயிற்றுவிக்கிறது

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mansi Grover (@mommytoivaan)

இவர் இதை தினமும் செய்தது எப்படி?

• இடுப்பின் அளவிற்கு காலை விரித்து கால்களின் நுணியால் நின்றிருக்கிறார்.
• மெதுவாக வயிற்றை உள்ளே இழுத்துள்ளார்
• சுவாசிப்பதன் மூலம் மெதுவாக கட்டுப்படுத்தப்பட்ட வகையில் இடுப்பு இயங்கும்
• ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் - செய்ய வேண்டும். இது தீவிரமாக செய்வதை காட்டிலும், தினமும் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும்.

2 வாரங்களுக்குள் தனது இடுப்பு இறுக்கமாகவும், இலகுவாகவும், வீக்கமின்றியும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

வாக்கிங்:

மேலே, மான்சி கூறியிருந்ததை தாண்டி, இன்னும் சிலர் ஜப்பானிய வாக்கிங் முறைப்பற்றி தெரிவிக்கின்றனர். அதாவது, தினமும் 3 நிமிடம் சாதாரணமாக நடந்து பின்னர் 3 நிமிடம் வேகமாக நடக்க வேண்டும். இப்படியே 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதே போல, ரேடியோ டாய்சோ எனும் பயிற்சியையும் செய்ய வேண்டும். இது, ஸ்ட்ரெட்சிங், கைகள் மற்றும் கால்களுக்கான குறைந்த அளவிலான உடற்பயிற்சிகள் ஆகும். 

மேலும் படிக்க | Face Fat : முகத்தின் அழகை கெடுக்கும் கொழுப்பு! குறைப்பது எப்படி? மருத்துவர் டிப்ஸ்..

மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமாய் குறைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்: ட்ரை பண்ணி பாருங்க

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News