120 கிலோவில் இருந்த பெண்... 50 கிலோவை குறைத்து கொழுப்பை கரைத்தது எப்படி?

Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமான பெண் ஒருவர் 120 கிலோவில் இருந்து 50 கிலோவை குறைத்து தற்போது 70 கிலோ என்ற உடல் எடைக்கு வந்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 17, 2025, 08:42 PM IST
  • அந்த பெண்ணின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
  • இவர் தனது பயணத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
  • இவர் கொழுப்பை குறைக்க டிப்ஸ் கொடுத்துள்ளார்.
120 கிலோவில் இருந்த பெண்... 50 கிலோவை குறைத்து கொழுப்பை கரைத்தது எப்படி?

Weight Loss Journey: 25 வயதான முஷ்கான் அவரது உடல் எடை குறைப்பு பயணம் மூலம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். உணவுக் கட்டுப்பாட்டுடனும், தீவிர உடற்பயிற்சியையும் மேற்கொண்டு 120 கிலோவில் இருந்து 70 கிலோவுக்கு குறைத்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: கொழுப்பை குறைக்க காலமெடுக்கும்

இவர் தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். மேலும், இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்ததாகவும், தன் மேலேயே பல கேள்விகளும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். உடல் கொழுப்பு குறைய சற்று காலம் எடுக்கும் என கூறும் அவர் தொடர்ச்சியாக செயல்பட வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார். "நான் 20 கிலோவை குறைக்கும் வரை, யாருக்கும் நான் உடல் எடையை குறைத்து வருகிறேன் என்பதே தெரியவில்லை" என்கிறார்.

Weight Loss Journey: உணவே முக்கியம்

அவர் எந்தளவிற்கு உடல் எடை குறைப்பு பயணத்தில் நம்பிக்கையுடன் இருந்தார் என்றால், இவர் உடல் பருமனோடு இருக்கும்போதே, அவருக்கு சிறிதாக இருக்கும் 2 உடைகளை எடுத்துவைத்துக்கொண்டாராம். அதாவது, அந்த அளவிற்கு வரும் வரை கடினமாக உழைக்க அவர் திட்டமிட்டாராம். 

மேலும் சமமான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். "உங்களுக்கு பிடித்த சீஸை சாப்பிடாமல் இருப்பது எளிதல்ல, ஆனால் நீங்கள் அதை செய்ய வேண்டும். முதலில் உங்களை நீங்கள் காதலிக்க வேண்டும், அதன்பின்னர் தான் நீங்கள் உண்மையாக காதலிக்கும் உணவுதான் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். சுயமாக உணர்ந்துகொள்வது மிக முக்கியம், ஆனால் அதை எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு நல்லது" என்றார் முஷ்கான்.

Weight Loss Journey: கொழுப்பை குறைக்க டிப்ஸ்

உடல் கொழுப்பை குறைக்க சில டிப்ஸ்களை அவர் பகிர்ந்திருந்தார். உணவை அளவாக எடுத்துக்கொள்வது அவசியம், ஆனால் பட்டினி கிடக்கக் கூடாது. ஆனால் கவனத்துடன் சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் துரித உணவுகளை கைவிட வேண்டும். முதலில் கடினமாக இருந்தது, ஆனால் அது எல்லாவற்றையும் மாற்றியது என்கிறார். நிலையான உணவு நேரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறுகிறார். மேலும் இவர் தனது தினசரி உணவுகள் குறித்தும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவற்றை தொடர்ந்து செய்து 50 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் முஷ்கான்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் முஷ்கானின் உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 118 டூ 83 கிலோ எடை.. 35 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?

மேலும் படிக்க | 2 மாதங்களில் 10 கிலோ உடல் எடை இழப்பு.. பயிற்சியாளர் சொல்லும் டிப்ஸ்!

மேலும் படிக்க | ஸ்கிப்பிங் செய்தே 95 கிலோவை குறைத்த பெண்... ஜிம்முக்கு போகாமல் உடல் எடை கரைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News