75 கிலோவை குறைத்த நபர்... காலை, மதியம், இரவு அவர் சாப்பிட்டவை தெரியுமா?

Weight Loss Journey: இரண்டரை ஆண்டில் சுமார் 75 கிலோவை குறைத்த ஒருவர் பல பேருக்கு ஊக்கமாக இருந்து வருகிறார். அவரின் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 7, 2025, 03:27 PM IST
  • உடல் ஆரோக்கியத்திற்கு உணவு மிக முக்கியம்.
  • உணவுமுறையில் அவர் புரதத்தை அதிகமாக்கி உள்ளார்.
  • இது உடல் எடையை குறைக்க அவருக்கு உதவி உள்ளது.
75 கிலோவை குறைத்த நபர்... காலை, மதியம், இரவு அவர் சாப்பிட்டவை தெரியுமா?

Weight Loss Journey: ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த நமன் சவுத்ரி, அவரது அபார உடல் எடை குறைப்புக்காக இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளார். 2021ஆம் ஆண்டில் சுமார் 150 கிலோ உடல் எடையில் இருந்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: இரண்டரை ஆண்டுகளில் 75 கிலோவை குறைத்த நபர்

இந்த அதிக உடல் எடை காரணமாக பலராலும் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இது அவரின் நம்பிக்கையையே மொத்தமாக சீர்குலைத்துள்ளது. இதனால் அவர் தனது வாழ்க்கையையே மாற்றம் வேண்டும். உடல் தகுதி பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளார். 

இதையடுத்து, அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், உடற்பயிற்சி செய்வது, பளூதூக்குதல், வீட்டில் சமைத்த புரதச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்ததாக கூறியுள்ளார். அவரின் இரண்டரை வருட உடல் எடை குறைப்பு பயணத்தில் 75 கிலோவை குறைத்து தற்போது அற்புதமான உடற்கட்டை பெற்றுள்ளார்.

Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் மூலம் ஊக்கமளிக்கும் நமன்

இதன்மூலம், அவர் பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் பெற்றுள்ளார். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டதால் அவரின் சரும ஆரோக்கியமும் சிறப்பாக மாறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கிளியரான சருமத்தை பெற நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

நமன் தற்போது ஃபிட்னஸ் மாடலாக உள்ளார். தொடர்ந்து அவர் உடல் எடை குறைப்பு பயணத்தின் முன்னேற்றத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவரின் டிப்ஸ் மற்றவர்களையும் உடல் எடை குறைப்பை நோக்கி ஊக்கம் அளிக்கிறது. அந்த வகையில் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து இன்ஸ்டாவில் அவரது உடல் எடை குறைப்பில் சாப்பிட்ட உணவுகள் குறித்து பேசியிருந்தார்.

Weight Loss Journey: நமன் சௌத்ரியின் காலை உணவு

அதில் காலை உணவாக நமன் இரண்டு வகைகளில் சாப்பிட்டுள்ளார். அதாவது காலையில் 400 கலோரி அளவில் உணவை எடுத்து்ககொள்ளும் நமன், அதில் 35 கிராம் புரதச்சத்தை சேர்த்துக்கொள்வாராம். அதில் ஒரு முட்டை சேர்த்த காலை உணவையும், முட்டை இல்லாத காலை உணவையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

4 முட்டையின் வெள்ளை பகுதி + 1 முழு முட்டை (18 கிராம் புரதம்) - இதில் வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாவை சேர்ப்பாராம். 50 கிராம் பன்னீர் புர்ஜி (11 கிராம் புரதம்) இதில் கீரை மற்றும் குடை மிளகாயை சேர்ப்பாராம். அடுத்து, தானியங்களின் டோஸ்டை சாப்பிடுவாராம், இதில் கிராம் புரதம் இருக்கும். 

முட்டை இல்லாத காலை உணவாக காய்கறிகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, வறுத்த 60 கிராம் சோயா சங்ஸ் சாப்பிடுவாராம். இதில் 26 கிராம் புரதம் கிடைக்கிறது. அதோடு குறைந்த கொழுப்புள்ள பன்னீர் 50 கிராம் அளவில் எடுத்துக்கொள்வாராம். இதில் 11 கிராம் புரதம் கிடைக்கிறது. அடுத்து, தானியங்களின் டோஸ்டை சாப்பிடுவாராம், இதில் கிராம் புரதம் இருக்கும், இதில் 4 கிராம் புரதம் கிடைக்குமாம்.

Weight Loss Journey: நமன் சௌத்ரியின் மதிய உணவு

மதிய உணவாக 350  கலோரிகளை எடுத்துக்கொள்வாராம், அதில் 30 கிராம் புரதம் அடங்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட 100 கிராம் சோயா சங்ஸ் கறியை சாப்பிடுவாராம், 52 கிராம் சோயாவில் 25 கிராம் புரதச்சத்து இருக்குமாம். இதோடு 10 கிராம் புரோக்கோலி (3 கிராம் புரதம்), 30கிராம் மாவில் செய்யப்பட்ட 1 சின்ன ரொட்டி (3 கிராம் புரதம்). மாலை நொறுக்குத்தீனியாக 150 கிராம் குறைந்த கொழுப்பு கொண்ட பன்னீர் டிக்கா (20 கிராம் புரதம்). இதனை தயிர், லெமன், மசாலா போட்டு ஊறவைத்து தீயில் சுட்டு சாப்பிடுவாராம்.

Weight Loss Journey: நமன் சௌத்ரியின் இரவு உணவு

இரவு உணவாக 350 காலோரியை எடுத்துக்கொள்வாராம், அதில் 35 கிராம் புரதம் அடங்கும். 150 கிராம் அவித்த பருப்பு (12 கிராம் புரதம்), 100 கிராம் வறுத்த பன்னீர் (15 கிராம் புரதம்), 100 கிராம் வெள்ளரிக்காய், தக்காளி சாலட் (2 கிராம் புரதம்), 1 சின்ன ரொட்டி (3 கிராம் புரதம்). அதாவது தினமும் 1300-1400 கலோரிகளை உட்கொள்வாராம். அதிலும் 120 கிராம் புரதச்சத்தை எடுத்துக்கொள்வாராம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நமன் சௌத்ரியின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | Weight Loss: 72 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... அவர் செய்தது என்ன?

மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகாமல் 3 மாதத்தில் 19 கிலோ எடை குறைப்பு.. சாத்தியமானது எப்படி?

மேலும் படிக்க | 4 மாதங்களில் 25 கிலோ குறைத்தது எப்படி? ஃபிட்னஸ் கோச் பகிரும் சீக்ரட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News