Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இருப்பினும், உங்களின் வாழ்க்கை முறையில் நீங்கள் சில மாற்றங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் எதிர்பார்க்கும் பலன்களை நீங்கள் பெறலாம்.
Weight Loss Journey: நிலையான உடல் எடை குறைப்பே நல்லது
உடல் எடை குறைப்பு என்பது கலோரிகளை கரைத்து, குறைவான கலோரிகளை உட்கொண்டு கொழுப்பை கரைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மாறுவதே முக்கியமாகும். அதே நேரத்தில், நீங்கள் வேகமாக உடல் எடை குறைக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நீண்ட காலம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றி நிலையான உடல் எடை குறைப்பை பெறுவதே நல்லதாகும்.
Weight Loss Journey: 64-64 கிலோ எடையை குறைத்த நடாலி அரண்டா
தினமும் சரியான நேரத்தில் தூங்குவது, சமச்சீரான ஊட்டச்சத்தை உண்பது, தொடர்ச்சியான உடல் உழைப்பு ஆகியவற்றை தினமும் மேற்கொள்வதும் உடல் எடையை குறைப்பதற்கான தாரக மந்திரமாகும். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான நடாலி அரண்டா அவரது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் சுமார் 62-64 உடல் எடையை குறைத்துள்ளார். அதாவது, 130 கிலோவில் இருந்து 74 கிலோவுக்கு அவர் வந்துள்ளார். அவரது பதிவுகளில் ஒன்றில், உணவு உண்ணும் இடத்தை மாற்றுவது கொழுப்பு இழப்புக்கு எவ்வாறு உதவியது என்பதைப் பற்றியும் அவர் பேசி உள்ளார்.
Weight Loss Journey: சாப்பிடும் இடமும் முக்கியம் அமைச்சரே...
அவர் சமையலறை மேசையை தவிர வேறு எங்கும் சாப்பிடக்கூடாது என்ற விதியை கடுமையாக பின்பற்றி வந்துள்ளார். இதன்மூலம், நொறுக்குத்தீனிகளை கொறிப்பதை தவிர்க்கவும், கவனத்துடன் சாப்பிடுவதற்கும், அதிகமாக உணவு உண்பதை தவிர்க்கவும், தொடர்ச்சியாக அன்றாடம் உணவு உண்ணும் நேரத்தை கடைபிடிப்பது என பல விஷயங்களுக்கு இந்த சமையலறை மேசையில் மட்டும் உட்கார்ந்து உண்ணும் பழக்கம் கைக்கொடுக்கிறதாம்.
"நீங்கள் மேஜையில் அமரும்போது, உங்கள் உணவில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் கவனம் சிதறாமல் இருப்பீர்கள். நீங்கள் சாப்பிடுவதை உண்மையில் ரசித்து சாப்பிடுவீர்கள்" என்கிறார் நடாலி அரண்டா. இவை மட்டுமின்றி, உடல் எடை குறைப்புக்காக அவர் கைவிட்ட மூன்று பழக்கவழக்கங்கள் குறித்தும் அவர் மற்றொரு வீடியோவில் பேசி உள்ளார். அந்த மூன்று பழக்கவழக்கங்கள் குறித்து இங்கு காணலாம்.
Weight Loss Journey: நடாலி தூக்கி எறிந்த 3 பழக்கவழக்கங்கள்
- சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் குடிப்பதை அவர் தவிர்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கலோரிகளை நான் அருந்துவதில்லை. ஆப்பிள் ஜூஸோ அல்லது வேறு எந்த ஜூஸோ நான் அருந்துவதில்லை.
- காலை உணவு சாப்பிடும் பழக்கமே முதலில் அவருக்கு இல்லையாம். இந்த பழக்கத்தை அவர் கைவிட்டாராம். அதாவது, முதலில் காலை உணவை தவிர்த்ததால் மதிய உணவை அதிகமாகவும், இரவில் அதிக நொறுக்குத்தீனிகளையும் உண்டதால் உடல் பரும் அதிகமாகி உள்ளது. காலை உணவை தொடர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுவந்ததால் அதிகமாக சாப்பிடும் பழக்கமும் குறைந்து உடல் எடை குறைப்புக்கு உதவியிருக்கிறது.
- தூங்காமல் இருப்பதை ஒரு பழக்கமாக வைத்துள்ளார், இதனையும் அவர் கைவிட்டுள்ளார். தினமும் 8-9 மணிநேரம் தூங்குவதால் ஹார்மோன்கள் சீராகி உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவி உள்ளது. தூங்குவது மிக அவசியம் என்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நடாலி அரண்டாவின் உடல் எடை குறைப்பு அனுபவம் சார்ந்தவை மட்டுமே. இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 129 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 50 கிலோவை குறைக்க உதவிய உணவுகள் என்னென்ன?
மேலும் படிக்க | 13 கிலோவை டக்குனு குறைத்த பிரபலம் - எடையை குறைக்க பிக்பாஸ் நிகழ்ச்சி உதவியது எப்படி?
மேலும் படிக்க | 36 கிலோவை கரைத்த பெண்; பிடிச்ச உணவுகளை சாப்பிட்டே எடையை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









