இரவு இந்த பானத்தை குடித்து... 7 கிலோவை 21 நாள்களில் குறைத்த பெண் - அது எப்படி?

Weight Loss Journey: இரவு தூங்கும் முன்னர் வீட்டில் தயாரித்த அந்த பானத்தை அருந்தியே 21 நாள்களில் 7 கிலோவை பெண் ஒருவர் குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2025, 11:28 AM IST
  • அந்த பெண் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார்.
  • அந்த பானத்தை அவரே தயாரித்துள்ளார்.
  • அந்த பானத்தை தயாரிப்பது எப்படி என்பதையும் இங்கு காணலாம்.
இரவு இந்த பானத்தை குடித்து... 7 கிலோவை 21 நாள்களில் குறைத்த பெண் - அது எப்படி?

Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது என்பது ஒழுக்கம் சார்ந்த செயல்பாடாகும். தொடர்ச்சியான உணவுக் கட்டுப்பாட்டுடனும், உடற்பயிற்சியாலும் ஒருவர் உடல் எடையை குறைக்கலாம். இருப்பினும், அதற்கு இயற்கையின் சிறு உதவியும் தேவை எனலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: 21 நாள்களில் 7 கிலோ 

தற்போதைய சமூக வலைதள யுகத்தில் பலரும் உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து இணையத்தில் பகிர்ந்துகொள்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், ரிச்சா கங்கானி என்ற ஊட்டச்சத்து நிபுணர் அவரது உடல் எடையை குறைப்பு அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார்.

அதில், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பானம் இரவு தூங்குவதற்கு முன்னர் தொடர்ச்சியாக குடித்து வந்ததன் காரணமாக வெறும் 21 நாள்களில் 7 கிலோவை குறைத்துள்ளாராம். இந்த பானம் மிக எளிமையாக கிடைக்கக் கூடிய பொருள்களை வைத்து தயாரிக்கப்பட்டதாம். மேலும், இந்த பானம் அவரது உடல் எடை குறைப்புக்கு மட்டுமின்றி வயிற்றின் உப்புசம் பிரச்னை, சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நிவாரணமாக அமைந்ததாம்.

Weight Loss Journey: ரிச்சா அருந்திய பானம்

ரிச்சா இந்த பானத்தை எப்போதும் இரவில் தூங்கும் முன் தொடர்ச்சியாக குடித்து வந்தாராம். தொடர்ந்து 21 நாள்கள் செய்தது அவருக்கு நல்ல பலனை தந்திருக்கிறது. அவருக்கு இந்த உப்புசம் பிரச்னை மறைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த செரிமான அமைப்பும் சீரானதாம். மேலும் ஹார்மோன் சமநிலையும் நல்ல முன்னேற்றம் கண்டதாம். நீங்களும் உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த எளிய மற்றும் இயற்கை பொருள்களான இந்த பானத்தை தயாரித்து அருந்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

Weight Loss Journey: பானத்தை தயாரிப்பது எப்படி? 

ஏலக்காய், சோம்பு, பெருங்காயம், வெள்ளரிக்காய், இஞ்சி சாறு, வெட்டிய எலுமிச்சை துண்டுகள், தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகள் ஆகியவற்றை கொண்டு இந்த பானத்தை தயாரிக்கலாம். அடுப்பை குறைந்த வெப்பத்தில் வைத்துக்கொண்டு ஏலக்காய், சோம்பு மற்றும் பெருங்காயத்தை சுமார் 10 நிமிடங்கள் நன்கு வறுக்கவும். இவற்றை மிக்ஸியிலோ, அம்மியிலோ கரடுமுரடான பொடியாக அரைக்கவும். 

ஒரு பாட்டிலில், இந்தப் பொடி, நறுக்கிய வெள்ளரிக்காய், எலுமிச்சை துண்டுகள், இஞ்சி சாறு, தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளைச் சேர்க்கவும். பாட்டில் முழுவதும் தண்ணீரை நிரப்பவும், நன்றாகக் குலுக்கிக் கொள்ளுங்கள். தூங்கும் முன்னர் அந்த தண்ணீரை குடித்துவிடுங்கள். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறையும், தொடர்ச்சியான உடற்பயிற்சியுமே ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும் எனலாம். அத்துடன் இரவு நேரத்தில் இந்த பானத்தை குடித்துவிட்டு தூங்குவது நல்ல பலனை தரலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரிச்சா கங்கானி தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளுங்கள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 7 மாதங்களில் 40 கிலோ எடை குறைந்தது எப்படி? சீக்ரட் பகிரும் பெண்!

மேலும் படிக்க | 20 கிலோ எடையை அசால்டாக குறைத்த குஷ்பு! சீக்ரெட் இது ஒன்னுதான்..

மேலும் படிக்க | 122 கிலோவை இருந்த இளைஞர்... 33 கிலோவை குறைக்க ஸ்பெஷலாக செய்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News