Weight Loss Journey: இன்ஸ்டா பிரபலம் ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டே 18 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்த அவரின் அனுபவத்தை இங்கு காணலாம்.

Weight Loss Journey: அமெரிக்காவை சேர்ந்த சமூக வலைதள பிரபலமான வனேசா வோங் (23) சமீபத்தில் 18 கிலோ உடல் எடையை இயற்கையாகவே குறைத்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
Weight Loss Journey: வனேசா வோங்கின் முக்கிய ரகசியம்
அந்த வகையில், நேற்று (ஏப். 1) இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில், உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்து தேவையற்ற உணவுகளை தவிர்த்து, முழு உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பு பயணத்திற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவியது என்ற அவரின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
வனேசா அந்த பதிவில்,"இங்கு தேவையற்ற உணவுகளை நீக்குவதே முக்கியம். இது மிகவும் எளிமையான ஒன்று என்றாலும் உங்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்று என்பதை நான் இங்கு விளக்குகிறேன். பதப்படுத்தப்படாத முழு உணவுகளை சாப்பிடுங்கள் போதும்" என்கிறார். அதாவது, சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட ஆரோக்கியமான உணவுபழக்கத்தை பின்பற்றினால் உங்களின் ஆற்றல் அளவிலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கும் என்கிறார்.
Weight Loss Journey: முழு உணவுகள் தான் முக்கியம்
பழங்கள், நடஸ், சீஸ்; கிரீக் யோகர்ட் உடன் பழங்கள்; முட்டையின் வெள்ளை பகுதியுடன் இறைச்சி ஆகியவற்றைதான் அவர் சாப்பிட்டு வந்தாராம். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,"நீங்கள் எதையும் அளவுக்கு மீறி செய்தால் அது சரியாக இருக்காது. சமநிலையை புரிந்துகொண்டு இனிப்பு மற்றும் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
முதலில் உங்களின் இலக்கு என்ன என்பதை முடிவு செய்யுங்கள். உடல் எடையை குறைக்க வேண்டுமா, உடல் எடையை அப்படியே வைத்திருக்க வேண்டுமா, தசையை வளர்ச்சியடைய செய்யணுமா ஆகியவற்றை பொருத்து ஊட்டச்சத்தில் கவனம் செலுத்தி, தேவையற்ற உணவுகளை தவிர்த்து முழு உணவுகளை சாப்பிடுங்கள். இதை மட்டும் செய்தாலே உங்களின் உடல் மாற்றம் அடைவதை உங்களால் உணர முடியும்" என்கிறார்.
Weight Loss Journey: பதப்படுத்தப்பட்ட உணவுகளே வேண்டாம்
அதேபோல், சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவாவது என கூறும் அவர் சரியான உணவு சற்று அதிகம் சாப்பிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனால், மோசமான உணவுகளை கொஞ்சமாக சாப்பிட்டாலும் அது பிரச்னை என்பதே இங்கு ரகசியம். குறைந்த கலோரியை அடைய சாப்பிடாமல் இருக்க வேண்டும் என அர்த்தம் இல்லை.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் நாம் சாப்பிடுவதற்கானது இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், கலர் கலரான இரசாயனங்கள், அதிகமான சர்க்கரை, அதீத எண்ணெய் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். அந்த உணவை அப்படியே உங்களால் வீட்டில் செய்ய முடியவில்லை என்றால் அதை சாப்பிடாமல் இருப்பதே நல்லது என்கிறார்.
மேலும், ஜிம்முக்கு செல்வதை காட்டிலும் நீங்கள் சாப்பிடும் உணவுகளே முக்கியம் என்கிறார். நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்துகளும், உங்களின் செரிமான அமைப்பும் தான் நிலையான உடல் எடையை வைத்திருக்க உதவும். வனேசா வோங் இதை பின்பற்றிதான் 18 கிலோவை குறைத்துள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வனேசா வோங் என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ