23 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... PCOS இருந்தும் குறைத்தது எப்படி?

Weight Loss Journey: PCOS பிரச்னையால் பாதிக்கப்பட்டும், தொடர் முயற்சியால் 23 கிலோ உடல் எடையை குறைத்த பெண் அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 1, 2025, 03:25 PM IST
  • தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டு வருகிறார்.
  • PCOS பிரச்னையையும் இதனால் சமாளிக்க இயலும்.
  • உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியம் ஆகும்.
23 கிலோவை அசால்ட்டாக குறைத்த பெண்... PCOS இருந்தும் குறைத்தது எப்படி?

Weight Loss Journey: உடல் பருமன் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு தொடர்ச்சியான உடற்பயிற்சியும், உணவுப்பழக்கவழக்கம் அத்தியாவசிமயமான ஒன்றாகும். இருப்பினும், சில உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்களால் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: PCOS பிரச்னையால் வரும் சிரமங்கள்

அதேபோல், PCOS போன்ற பொதுவான ஹார்மோன் பிரச்னையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். PCOS பிரச்னைகள் இருப்பவர்கள் இன்சுலின் தாக்கம் அதிகம் இருக்கும், ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும், மனநிலை மாற்றமும் ஏற்படும். இந்த பிரச்னைகளால் உடல் எடையை குறைப்பதும் சிரமம் ஆகும்.

Weight Loss Journey: 23 கிலோவை குறைத்த பெண்

அந்த வகையில், ரிதி சர்மா என்ற பெண் PCOS பாதிப்பு இருந்தும் வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சிகள் மற்றும் உணவுப்பழக்கவழக்கம் ஆகியவை மூலம் 23 கிலோவை குறைத்துள்ளார். மேலும், ரிதி சர்மா தனது உடல் எடை குறைப்பு அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். வாழ்க்கைமுறையில் அவர் செய்த மாற்றம் எப்படி உடல் எடை குறைப்பில் தாக்கத்தை செலுத்தியது என்பது குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 105 கிலோவில் இருந்த 19 வயது பெண்... 52 கிலோ உடல் எடையை குறைக்க உதவியவை என்ன?

Weight Loss Journey: PCOS பாதிப்பை சமாளிப்பது எப்படி?

"PCOS பிரச்னையை சமாளிப்பது மிகவும் கடினம் என தற்போது தோன்றும், ஆனால் என்னை நம்புங்கள் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து தினமும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் அதனை சமாளிக்கலாம்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் வாழ்க்கைமுறையில் செய்த மாற்றங்களை இங்கு பகிர்ந்துள்ளார்.

Weight Loss Journey: வாழ்க்கை முறையில் செய்த மாற்றங்கள்

- உணவுப்பழக்கவழக்கத்தில் 80% முழு உணவுகள், சமநிலையான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உண்ணுங்கள். கட்டுப்பாடு தேவையில்லை. 20% உங்களுக்கு பிடித்த நொறுக்குத் தீனிகளை கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்.

- தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரியளவில் உதவும். சாப்பிட்ட பின்னர் 10-15 நிமிடங்கள் நடப்பது செரிமானத்திற்கு உதவும். ரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.

- காலையில் புரதச்சத்து கொண்ட தானியங்களை எடுத்துக்கொள்வேன். அதன்மூலம் 25 கிராம் புரதம் எனக்கு கிடைக்கும். ஆற்றலுடன் இருப்பீர்கள், இது ஹார்மோன்களை சீராக வைத்திருக்க உதவும். வயிறு நிறைவை ஏற்படுத்தும். தேவையற்ற நொறுக்குத்தீனி உட்கொள்ளுதலை தடுக்கும்.

- தினமும் 2 கப் புதினா தேநீர் அருந்தினாராம். இது PCOS மூலம் ஏற்படும் முகத்தில் வளரும் முடிகளை குறைக்கும். மேலும், ஹார்மோன்களை சமநிலையாக வைப்பதிலும் இது உதவும்.

- HIIT உடற்பயிற்சியில் இருந்து குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிக்கு மாறலாம். இது தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும். மேலும், சருமத்தை பாதுகாக்கவும் உதவும், ஹர்மோன் சமநிலையையும் உருவாக்கும். வாரத்திற்கு 4-5 முறை இந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் உடற்பயிற்சிகள் குறித்தும் யூ-ட்யூபில் தனியே வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளதாகவும் ரிதி சர்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ரிதி சர்மாவின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் கருத்துக்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 36 வயதில் 37 கிலோவை குறைத்த பெண்; கொழுப்பை கரைக்க செய்தவை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News