Heart Health Tips Tamil | ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அரித்மியா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் இதயம் மிக வேகமாக, மிக மெதுவாக அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிக்கும். இதயத் துடிப்பு மற்றும் அதன் சீரமைப்பை கட்டுப்படுத்தும் இதயத்தின் மின் அமைப்பில் இடையூறு ஏற்படும் போது இது நிகழ்கிறது. சில சமயங்களில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இயல்பானதாகவும் ஆபத்தில் இல்லாததாகவும் இருக்கலாம், ஆனால் தொடர்ந்து நிகழ்வது ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். இதனால் நீங்கள் பீதி அடையத் தேவையில்லை, இதற்காக உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் மட்டும்போதும்.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி?
1. வழக்கமான உடற்பயிற்சி
தினமும் மிதமான உடற்பயிற்சியை செய்து வந்தால், இதயத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும். தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாரடைப்பு அபாயம் வெகுவாக குறையும். உங்களால் ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டால், தினமும் வாக்கிங் செல்லவும். படிக்கட்டுகளில் ஏறவும், கனமான பொருட்களை தூக்கி பயிற்சி செய்யவும்.
2. சரிவிகித உணவு
நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், உங்கள் உணவு சீரானதாக இல்லாவிட்டால், சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி நகர்வது கடினம். சரிவிகித உணவை உட்கொள்பவர்களின் இதயத் துடிப்பு சீரான வேகத்தில் இயங்கத் தொடங்குகிறது. அதே சமயம் எண்ணெய், காரம், பொரித்த மற்றும் டிரான்ஸ் ஃபேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மேலும் படிக்க | ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைக்கலாமா?
3. பதற்றம் கொள்ளாதீர்கள்
'கவலை என்பது இறுதிச் சடங்கு போன்றது' என்று நம் பெரியோர்கள் அடிக்கடி கூறியுள்ளனர். அதாவது, நமது மன ஆரோக்கியத்தை நாம் நன்றாக வைத்துக் கொள்ளாவிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது கடினமாகிவிடும். அதிக டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தை எடுத்துக்கொள்பவர்களின் இதயத் துடிப்பு சீரற்றதாக இருக்கும்.
4. போதுமான தூக்கம்
ஒரு இளைஞன் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அல்லது தூக்க சுழற்சியைத் தொந்தரவு செய்தால், உங்கள் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகிவிடும்.
எனவே இவற்றையெல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டு, இதய துடிப்பில் இருக்கும் சீரற்ற தன்மையை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நாட்பட்ட பிரச்சனையாக மாறி, மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகிவிடுவீர்கள்.
மேலும் படிக்க | குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ