Weight Loss For Bullet Coffee: இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. உடல் பருமானால் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உடல் எடையை குறைக்க பெண்கள், ஆண்டுகள், பெரியவர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். இதற்காக தீவிரமாக டயட் இருந்தும், உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை குறைத்து வருகின்றனர்.
ஆனால், இதற்கு நீண்ட மாதங்கள் எடுத்துக் கொள்ளும். சட்டென எல்லாமல் உடல் எடையை குறைத்து கொள்ள முடியாது. இதற்காக சீரான உடற்பயிற்சியும், டயட்டும் முக்கியமானது. அந்த வகையில, உடல் எடையை குறைப்பதற்காக தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பது புல்லட் காபி. இந்த புல்லட் காபி குடிப்பதால் உண்மையிலேயே உடல் எடை குறையுமா என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
புல்லட் காபி குடித்தால் உடல் எடை குறையுமா?
இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், "Paleolithic diet மற்றும் lowcarb diet இருப்பவர்கள் மத்தியில் புல்லட் காபி என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. நார்மல் காபி என்றால் பால், சர்க்கரை, காபி தூள் போட்டு காபி குடிக்கிறோம். ஒரு டம்பளர் காபி குடித்தலே 150 கலோரிகள் வரை நம் உடம்பில் சேருகிறது. ஒரு காபியுடன் நாம் நிறுத்துவதில்லை. ஒருநாளைக்கு மூன்று காபி வரை இங்கு அனைவரும் குடிக்கின்றனர்.
இதனை குடித்துவிட்டு, இட்லி, சாம்பார், வடை, சாப்பாடு, சமோசா போன்றவற்றை சாப்பிட்டு, கலோரிகள் உடலில் அதிக சேர்த்து, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. இந்த புல்லட் காபி என்பது பாலை சேர்க்காமல் வெறும் தண்ணீரில் காபி பவுடர் போட்டு சர்க்கரை போடாமல் நெய் அல்லது வெண்ணெயை 2 டீஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது தான் புல்லட் காபி. இதில் இரண்டு நன்மைகள் உள்ளன.
நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கும்போது, உங்களால் தின்பண்டங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் உங்களுக்கு தேகட்டும். இதனை குடித்துவிட்டு, சிலர் காலை உணவே சாப்பிடமாட்டார்கள். அந்தளவுக்கு இது உங்கள் வயிற்றை நிரப்பிவிடும். இதன் மூலம், கலோரிகள் மற்றும் மாவுச்சத்தை ஈஸியாக குறைக்க முடியும்.
மருத்துவர் விளக்கம்
வயிறு நிரம்பியவாறு இருக்கும். மதியம் வரை உங்களுக்கு பசி எடுக்காது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புல்லட் காபியை தாரளமாக குடிக்கலாம். ஆனால், இதனை உடல் எடையை குறைப்பவர்கள் அனைவரும் எடுத்துக்கலாமா? உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்னை அதிகம் இருந்தால், இந்த புல்லட் காபியை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். வேறு ஏதாச்சு இதய பிரச்னைகள் இருப்பவர்கள் இதனை தவிர்க்கலாம்.
இதனால், உடல் எடையை குறைக்கப்பவர்கள் புல்லட் காபி குடிக்கலாம். ஆனால், காலையில் புல்லட் காபியை குடித்துவிட்டு, மாலையில் சமோசா, பஜ்ஜி சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியாது. முழுவதுமாக கலோரிகள் குறைவா, மாவுச்சத்து குறைவாக, நல்ல புரதங்கள், ஆரோக்கிய கொழுப்புகள், காய்கறிகள், பழங்கள் இதையெல்லாம் எடுத்துவிட்டு, உடற்பயிற்சிகளை செய்பவர்கள் பசியை ஒருவேளை அடக்குவதற்காக புல்லட் காபியை ஒருவேளை உணவாக சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை குறைக்கும்" என்று கூறினார்.
மேலும் படிக்க: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இரவில் இதை செய்வது அவசியம்
மேலும் படிக்க: கருவுறுதலுக்கு சிறந்த உணவு எது? மருத்துவர் சொல்லும் ஷாக்கிங் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









